fbpx
LOADING

Type to search

அறிவியல் பல்பொருள்

உயிரினப் பேரழிவு ஏற்பட உண்மையான காரணம் என்ன? ஆய்வு தரும் தகவல்

extinction

செய்தி சுருக்கம்:

கடந்த 45 கோடி ஆண்டு காலத்தில் உலகில் ஐந்து முறை உயிரினப் பேரழிவு நடந்துள்ளதாக பெரும்பாலான புவியியல் வல்லுநர்கள் அங்கீகரித்துள்ளார்கள். தொடர்ந்த ஆய்வில் நடந்திககும் உயிரினப் பேரழிவுகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. தற்போதையை ஆய்வின்போது, உயிரினப் பேரழிவு நிகழ்ந்ததற்கான காரணங்களையும் விஞ்ஞானிகள் குழுவினர் கண்டறிந்து கூறியுள்ளனர்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட ஐந்து பெரிய உயிரினப் பேரழிவுகளுடன் பெர்மியன் யுகத்தின் நடுப்பகுதியில் நடந்த உயிரினப் பேரழிவான கேபிடானியனையும் சேர்த்துக்கொள்ளும்படி முன்னர் ஓர் ஆய்வுக்குழுவினர் பரிந்துரைத்திருந்தனர். கேபிடானியன் பேரழிவைக் குறித்த தகவல்கள் குறைவாக கிடைத்தமையால் அது குறித்த முரண்பாடுகள் நிலவி வந்தன. பெர்மியன் யுகம் என்பது ஏறக்குறைய 29 கோடியே 89 லட்சம் ஆண்டுக்கு முன்னர் இருந்து 25 கோடியே 22 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னான காலகட்டம் வரையிலானது என்று வகுக்கப்பட்டுள்ளது.

பின்னணி:

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் பூமியில் வசிக்கும் உயிரினங்களின் ஒரு பகுதி குறுகிய காலத்திற்குள் அழிவது உயிரினப் பேரழிவு என்று கூறப்படுகிறது. உயிரினப் பேரழிவு அரிதாகவே நடக்கும். இந்தப் பேரழிவு பூமியின் உயிர்கோளத்தில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தும். தப்பிப் பிழைக்கும் உயிரினங்கள் புதிய சூழலில் வாழ்வதற்கான வாய்ப்பு பெறும்.
ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டவற்றில் 44 கோடி ஆண்டுகளுக்கு முன் முதல் பேரழிவு ஆர்டோவிசியன் யுகத்திலும், இரண்டாவது 38 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டெவோவியன் யுகத்திலும், மூன்றாவதாக 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெர்மியன் யுகத்திலும், நான்காவதாக 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டிரையாசிக் யுகத்திலும், ஐந்தாவதாக 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கிரிடேசியஸ் யுகத்திலும் உயிரினப் பேரழிவுகள் நடந்துள்ளன.

கேபிடானியன் பேரழிவானது, பெர்மியன் யுகத்தின் உயிரின பேரழிவுடன் ஒத்து நோக்கப்பட்டது. ஆனால், இவை அளவுக்கு பெரிதானல்லாத, அதிகம் அறியப்படாத பேரழிவு இந்தக் காலத்திற்கு 80 லட்சம் முதல் 1 கோடி ஆண்டுக்கு முன்னர் நடந்துள்ளது. அதினால் 62 சதவீத உயிரினங்கள் அழிந்திருக்கக்கூடும் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.
பெர்மியன் யுகத்தின் நடுப்பகுதி காலத்தை சேர்ந்த பாறைகள் ஹாங்காங்கின் மேற்காக 300 மைல் தொலைவிலுள்ள பெங்லைட்டன் என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சீனப் பல்கலைக்கழகத்தின் நில அறிவியல் பிரிவை சேர்ந்த ஹுயே சாங் என்பவர் சீனா, அமெரிக்கா மற்றும் யு.கே. என்னும் ஐக்கிய ராஜ்யத்தை சேர்ந்த குழுவினருடன் அப்பகுதியை ஆய்வு செய்தார்.

பெர்மியன் யுகத்தின் இறுதியில், அதாவது 25 கோடியே 20 லட்சம் (252 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த உயிரினப் பேரழிவுக்கு முன்பே 26 கோடியே 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரும் 26 கோடி ஆண்டுகளுக்கு முன்னரும் காலத்தில் இரு பேரழிவுகள் நடைபெற்றிருப்பதற்கான தடயங்களை அக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஆர்க்டிக் பகுதியிலுள்ள எல்லெஸ்மேர் தீவு மற்றும் ஸ்பிட்ஸ்பெர்கன், சீனா, ஈரான், டெக்சாஸ், நியூ மெக்ஸிகோ, வடக்கு டாகோடா, தென் ஆப்பிரிக்கா மற்றும் அண்டார்டிகா ஆகிய இடங்களில் கேபிடானியன் உயிரின பேரழிவுக்கான ஆதாரங்கள் முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த உயிரின பேரழிவு, கடல் உயிரினங்கள் உள்ளிட்ட பவளபாறைகள், நிலத்திலிருந்த தாவரங்கள், பாலூட்டிகளுக்கு முன்பான பெரிய ஊர்வன இனத்தை சேர்ந்த டைனோசெபாலியன்களை அழித்தது.

உயிரின பேரழிவுக்கு முன்பாக பெங்க்லைட்டன் பகுதியின் சூழியல் அமைதியானதாகவே இருந்துள்ளது. பின்னர் சூழ்நிலை பாதிப்படைந்துள்ளது. அப்பகுதியில் பாறைகளில் இருந்த யூரேனியம், கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் ஐசோடோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. ஐசோடோப்பு என்பது ஒரு தனிமத்தின் ஒத்த அணு எண்ணும் வெவ்வேறு அணு நிறை எண்ணும் கொண்ட அணுவாகும். கடல்நீரில் குறைவான ஆக்ஸிஜன் இருந்தவேளைகளில் கடல்முகத்திலிருந்த நுண்ணுயிரிகள் தங்கள் வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான எலெக்ட்ரான்களை யூரேனியம் உள்ளிட்ட பிற தனிமங்களிலிருந்து எடுத்துள்ளன.

யூரேனியம் 235 ஐசோடோப்புகளை காட்டிலும் அவை யூரேனியம் 238 ஐசோடோப்புகளை பயன்படுத்தியதால், கடல் முகத்திற்கும் கடல்நீருக்கும் இடைப்பட்ட பகுதியில் யூரேனியம் ஐசோடோப்புகளின் சமநிலை சீர்குலைந்துள்ளது. தற்போது இந்த சமநிலையின்மை பாறைகளில் உறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அக்காலத்தில் பெருங்கடல்களில் ஆக்ஸிஜன் குறைந்த பகுதிகளில் இருந்தது தெரியவந்துள்ளது.

கடல் சார்ந்த கேபிடானியன் உயிரின பேரழிவு எல்லாவற்றிலும், அனோக்ஸியா என்ற இந்த ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணத்தைக் கொண்டு ஆய்வாளர்கள் அணுகினர். ஆக்ஸிஜன் அளவு குறைவுபடுவதால், விலங்கினங்கள் மடிகின்றன என்று கூறுகின்றனர்.

அதே பாறைகளில் இருந்த கார்பன் ஐசோடோப்புகள் கார்பன் சுற்றுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தபோது, ஆக்ஸிஜன் குறைபாடும் ஏற்பட்டுள்ளது. உயிரினப் பேரழிவுகளின்போது உலகம் வெப்பமயமாதல் நடந்ததை ஆக்ஸிஜன் ஐசோடோப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.

ஜப்பானிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குனியோ கைஹோவும் சீனா மற்றும் கனடாவை சேர்ந்த அவரது குழுவினரும் ஓர் ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். பெங்க்லைட்டனிலுள்ள பாறைகளிலுந்து எடுக்கப்பட்ட வேதிப்பொருள்களை அவர்கள் ஆய்வு செய்தனர். அதில் கொரோனைன் என்ற மூலக்கூறு கிடைத்துள்ளது. 1200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நெருப்பு எரியும்போதுதான் இந்த கொரோனைன் உருவாகும். கரிமப் பொருள்கள் உயர்வெப்பநிலையில் எரிந்துள்ளதால் கொரோனைன் உருவாகியுள்ளது என்று குனியோ கைஹோ குழுவினர் தெரிவித்துள்ளனர். 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் எரிந்த காட்டுத்தீயைப் போன்று அது பெரிய அழிவை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்றும் குனியோ கைஹோ கருத்து தெரிவித்துள்ளார். தாவரங்கள் எரிந்து அழிந்ததும் உயிரினப் பேரழிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எரிமலை வெடித்தல், உலகம் வெப்பமயமாதல், வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுதல், கடல் மட்டம் உயருதல் மற்றும் தாழ்வடைதல், காடுகள் அழிக்கப்படுதல், ஆக்ஸிஜன் பற்றாக்குறை, விண்கற்கள் பூமியின்மீது மோதுதல் ஆகியவையே உயிரினப் பேரழிவுக்கு காரணமாகி உள்ளன. இவையே மறுபடியும் மறுபடியும் நடந்து உயிரினப் பேரழிவு நிகழ்வுக்கு வழி வகுக்கின்றன. உயிரினப் பேரவில் ஆக்ஸிஜன் குறைபாட்டின் பங்கினை இந்த ஆய்வு தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.

தொடர்புடைய பதிவுகள் :

Freelancer Meaning in Tamil
Vice Versa Meaning in Tamil
Dude Tamil Meaning
இருமல் மருந்தால் இறந்த குழந்தைகள்! உற்பத்தி உரிமத்தை ரத்து செய்தது இந்தியா!!
இலங்கையிலிருந்து பெருமளவில் வெளியேறும் மருத்துவப் பணியாளர்கள்! உள்நாட்டில் மருத்துவ சேவைகள் பாதிப்பு...
அஜினமோட்டோ - முதுமை, இதயப் பிரச்சனைகளை வேகமாக ஏற்படுத்தும். - அலகாபாத் பல்கலைக் கழகம் ஆய்வு. 
காதல் உணவுகள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்..! சிறப்பான காதல் வாழ்க்கைக்கு நீக்க வேண்டிய மற்றும் சேர்க...
வீடியோக்களில் இருந்து பிரேம்களை படம் பிடிப்பதை எளிதாக்கியுள்ளது கூகுள் குரோம் பிரௌசர்..!!
மணிப்பூர்: மறையுமா மனங்களின் வடு?
‘த்ரெட்ஸ்’ செயலியின் இலச்சினை தமிழ் எழுத்தான ‘கு’ வடிவில் உள்ளதா?
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *