fbpx
LOADING

Type to search

இந்தியா சிறப்புக் கட்டுரைகள்

மணிப்பூர்: பெண்களின் மீதான கொடூரமான பாலியல் தாக்குதல் நிகழ்ந்து இரண்டு மாதங்களுக்கு பின்னர் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனபின்னரே குற்றவாளிகள் சிலரை கைது செய்துள்ளது காவல்துறை

செய்தி சுருக்கம்:

முக்கிய குறிப்பு: இந்த செய்தி தொகுப்பில் விவரிக்கப்பட்டுள்ள சில சம்பவங்கள் படிப்பவரின் மனதை பிசைந்து மன உளைச்சலை ஏற்படுத்தும் தீவிரம் கொண்டது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட பெண்கள் குடுத்திருந்த புகாரின் மீதான விசாரணையில் குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் இருந்த காவல்துறை, தற்போது அந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சிலரை கைது செய்துள்ளது. இத்தகைய படுபயங்கரமான குற்ற சம்பவத்தில், பல ஆண்கள் ஒன்றாக சேர்ந்து இரண்டு பெண்களை முழு நிர்வாணமாக்கி தெருவில் இழுத்து சென்றுள்ளனர், மேலும் அந்த சமயத்தில் பல ஆண்களால் பாலியல் வன்புணர்வுக்கும் உள்ளாக்க பட்டுள்ளார்கள்.

இப்படி பார்ப்போரின் மனதை உலுக்கும் வீடியோ நம் இந்திய நாட்டின் இறையாண்மையை குழி தோண்டி புதைப்பதை போன்றுள்ளது, இது நாட்டிற்கே அசிங்கமான ஒரு அவப்பெயரை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கமும் காவல் துறையும் விரைந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக அந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டுமென நாட்டு மக்களும் உலக மக்களும் இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை கண்ணால் கண்ட பிறகாவது, இதுவரையிலும் மணிப்பூர் கலவரங்களை பற்றி பேசுவதற்கு வாய் திறக்காத நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி சற்று இதை கவனிக்க வேண்டும், மணிப்பூரின் அடிப்படை இனவாத குழுக்களின் சண்டையால் இதுவரை 140 நபர்களுக்கும் மேலானவர்கள் பலியாகியுள்ளனர், 60000 த்திற்கும் மேலான மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு பாதுகாப்பு தேடி வெளியில் வந்துள்ளனர். இந்த கலவரங்கள் இனிமேலும் தொடராமல் இருக்க விரைவில் நமது பிரதமர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

இந்திய வரைபடத்தின் வடகிழக்கு ஓரத்தில் அஸ்ஸாம், மிசோரம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் எல்லை மாநிலமாகவும், பர்மா என்றழைக்கப்படும் மியான்மார் நாட்டின் பலநூறு கிலோமீட்டர் தொலைவு அடர்ந்த வனப்பகுதியில் எல்லையாக இருக்கின்ற மணிப்பூர் மாநிலத்தில் நிகழும் இந்த தொடர் வன்முறை சம்பவங்களுக்கு அம்மாநில காவல்துறை கடந்த இரண்டு மாதங்களாக சாட்சியாக நின்று வேடிக்கை பார்த்து வந்துள்ளது.

இந்த கலவரங்களானது மணிப்பூரில் வசிக்கக்கூடிய இரண்டு முக்கிய இனக்குழுக்கள் அவற்றிக்கிடையே போட்டுக்கொள்ளும் சண்டையால் உண்டாகிறது. மிக பயங்கரமான கொடூர செயல்கள் பல அங்கு அரங்கேறியுள்ளன இந்த இரண்டு மாதங்களில். பல மனித உயிர்கள் மிருகத்தனமாக வேட்டையாடப்பட்டு உள்ளன.

தற்போது அங்குள்ள ஆண்கள் சிலர் கைகளில் ஆயுதங்களோடு இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்து வருவதும், வன்புணர்வு செய்யும் காட்சிகளும் அடங்கிய வீடியோ ஒன்று வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது, இந்த வீடியோ ஆதரத்தை கொண்டு அங்கு நிகழ்ந்த அந்த கொடூர சம்பவத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அதில் தொடர்புடைய ஆறு முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளது காவல்துறை. தலைமறைவாக இருந்த இவர்களை கைது செய்யவும் ஒரு வாரம் ஆகியுள்ளது.

வேகமாக பரவி வருகின்ற அந்த வீடியோவில் கைகளில் கத்திகள் மற்றும் கட்டைகளை ஏந்திய வெறிபிடித்த ஆண்களின் கும்பல் ஒன்று நிர்வாணமாக்கப்பட்ட இரண்டு பெண்களை அச்சுறுத்தல் செய்து கொண்டே ரோட்டிலும், விவசாய நிலத்திலும் நடத்தி இழுத்து செல்கின்றனர், இதில் சில ஆண் மிருகங்கள் அந்த பெண்களின் அந்தரங்க உறுப்புகளை வழிநெடுகிலும் இம்சை செய்துகொண்டே வந்துள்ளனர்.

இப்படிப்பட்ட கொடூரமான ஒரு சம்பவம் இந்த இரு குழுக்களின் மோதல் உண்டாவதற்கு முன்பு மே மதம் நான்காம் தேதியில் நிகழ்ந்ததாக தெரிகிறது. அன்றைய தினம் அந்த பெண்கள் வாழும் குடியிருப்புக்குள் நுழைந்த ஆயுதமேந்திய நூற்றுக்கணக்கானோர் கொண்ட கும்பலின் கையில் சிக்கிவிட கூடாதென்று அந்த இரு பெண்களும் தப்பித்து விட முயன்றுள்ளனர், ஆயினும் முடியவில்லை. இதில் ஒருவர் தனது தந்தையுடனும் மற்றொரு பெண் அவர் சகோதரருடனும் அங்கு வசித்து வந்துள்ளனர், அந்த சமயத்தில் திடீரென நுழைந்த ஆயுதமேந்திய கும்பல் அங்கு வாழ்ந்த அனைவரையும் தாக்கியுள்ளது, அங்கிருந்த வீடுகளுக்கு தீயை வைத்துள்ளது, இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். அப்போது இந்த இரு பெண்களின் வீட்டிற்குள் நுழைந்த கூட்டம் அங்கிருந்த ஆண்களை வெட்டிகொன்று விட்டு இந்த பெண்களை இவ்வாறு நிர்வாணப்படுத்தி கொடுமைகளை செய்துள்ளனர், வெறிகொண்ட அந்த கும்பலால் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாகியுள்ளனர் அந்த இரு பெண்களும்.

இப்படிப்பட்ட ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்தது இதுவரை தெரியாமலேயே, இதன் மீது எந்த புகாரும் போலீசாருக்கு வராமலேயே இருந்துள்ளது என்று போலீசார் கூறுகின்றனர், சமீபத்தில் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ மிக வேகமாக பரவி உலகின் பல பகுதிகளில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழவே இது சம்பந்தமாக விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி ஆகியுள்ளது. உலக அளவில் அனைவரின் கவனத்தையும் இந்தியாவின், மணிப்பூரின் மீது திருப்பும்படி இந்த வீடியோ செய்துள்ளது, இந்தியாவில் வாழும் 1.42 பில்லியன் மக்களின் இதயங்களையும் அதிர்ச்சியில் உறைந்து போக செய்துள்ளது. அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அங்கு சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும் என்று தேசமக்கள் அனைவரும் ஒருகுரலாக சேர்ந்து இந்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

வெளியான உடனேயே இந்த வீடியோ வலைதளங்களில் கடுமையான கோபம் தெறிக்கும் விமர்சனங்களுக்கு உள்ளானது, அனைத்து மக்களும் அவர்களின் கோபத்தையும் அறுவெருப்பையும் பல்வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்தினர், நாட்டிற்கே நிகழ்ந்த அவமானம் என்று, மனித இனம் வெட்கி தலைகுனிய வேண்டிய செயல் என்றும் பார்க்கவே குலை நடுங்குகின்ற காட்டுமிராண்டி தனம் என்றும் விமர்சனங்களை வைத்துள்ளனர். அனைத்து மக்களின் ஒரே கோரிக்கையாக அரசாங்கத்தை விரைந்து நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உண்டான நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதாகவே இருக்கிறது.

பாதிப்புக்கு உள்ளான பெண்கள் செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலில் “உடைகளை நீ கழற்றாவிட்டால் உடனடியாக கொல்லப்படுவாய்” என்று அவர்கள் மிரட்டியதாக கூறியுள்ளனர்.

கடந்த வியாழனன்று தேச மக்களுக்கான உரையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி “தேசத்திற்கு நேர்ந்த மிகப்பெரும் அவமானம் இது, மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ள இந்த கொடுமையான சம்பவம் நாட்டிற்கே அவமானத்தை உண்டாக்கியுள்ளது, எந்தவொரு நாகரீக வளர்ச்சி அடைந்த நாட்டின் மனித இனமும் இதுபோல நடந்துகொள்ளாது. இது நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் உலக அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்தார், மேலும் “நான் நாட்டு மக்களுக்கு இந்த நேரத்தில் ஒரு முக்கியமான உறுதியை அளிக்கிறேன். நம் நாட்டின் சட்டமும், காவல்துறையும் அதன் அனைத்து பலங்களையும் பிரயோகித்து உடனடியாக இந்த சம்பவத்தின் தொடர்புடைய நபர்களை கைது செய்து தண்டனை வழங்க ஆணையிட்டுள்ளேன். நம் மணிப்பூர் மாநில பெண்மக்களுக்கு நேர்ந்துள்ள இந்த அவலத்தையும், அவமானத்தையும், கொடுமைகளையும், சோகங்களையும் துடைக்கும் வரையில் நாம் எவரும் இந்த சம்பவத்தை மறக்கப்போவதில்லை, இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் சட்ட ரீதியாக விரைவில் தண்டிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும்” என்றும் பேசியுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அந்த குற்றவாளிகளின் வீடுகளை பொதுமக்களும், பெண்களும் சேர்ந்து தீ வைத்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் நபர்களில் 6 நபர்களை கைது செய்துள்ளது காவல்துறை. விரைவில் அனைவரும் கைது செய்யப்பட்டு அதிகபட்ச தண்டனையை பெற்றுத்தர காவல்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை பற்றி உச்சநீதிமன்றம் கூறியதாவது, “தற்போது வெளியாகியுள்ள வீடியோவால் ஆழமான மனஉளைச்சல் அடைந்துள்ளோம், சட்டத்தால் அனுமதிக்க முடியாத குற்றம் நிகழ்ந்துள்ளது”, என்றும் இதில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்துமாறும் அரசினை வலியுறுத்துயுள்ளது. மேலும் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க அரசு என்ன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை பற்றிய விளக்கங்களை அளிக்கும்படி புகார்மனு ஒன்றினை அரசின் மீது உச்சநீதிமன்றம் தாக்கல் செய்துள்ளது.

கடந்த ஞாயிறன்று வெளியான Reuters செய்திக்குறிப்பில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இந்த சம்பவத்தை மிருகத்தனமான ஒன்று என்றும், கொலை தாக்குதல் சித்ரவதை என்றும், அந்த சம்பவத்தின் மீதான இந்தியாவின் பதில் நடவடிக்கைகள் அனைத்தும் எங்களால் உற்று பார்க்கப்படுகிறது என்றும் விமர்சித்துள்ளது.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் “இந்திய அரசு இந்த தாக்குதல் மீது எடுக்கப்போகும் நடவடிக்கைகள் அமைதியான முறையிலும், அறம் சார்ந்தும், அனைவருக்கும் நன்மையுண்டாகும் படி ஒரு தீர்வினை எடுக்க நாங்கள் ஆதரவாக இருப்போம், அந்த பகுதிகளில் விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளும் மனிதாபிமானத்திற்கு மதிப்பளித்து அங்குள்ள கலவரங்களில் ஈடுபட்ட குழுக்களையும், அவர்களின் வீடுகளையும், வழிபாட்டு தலங்களையும் பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இம்மாதிரியான பெண்கள் மீதான வன்முறைகளும், பலாத்காரங்களும் இந்தியாவில் அடிக்கடி நிகழும் ஒன்றாக உள்ளது, இதுபோன்ற வெட்கக்கேடான சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன, அரசின் புள்ளி விவரங்களின் படி சராசரியாக 86 பெண்கள் தினம்தோறும் இந்தியாவில் கற்பழிக்க படுகிறார்கள்.

கடந்த இரண்டு மாதங்களில் காவல்துறைக்கு வந்த கற்பழிப்பு புகார்கள் ஏராளம், ஆனால் அவையனைத்தும் இதுபோல வெளிச்சத்திற்கு வரவில்லை. காவல் துறையின் தரவுகளின் படி கடந்த மே மாதம் 5ஆம் தேதி இதேபோன்ற ஒரு சம்பவத்தில் 20 வயதுடைய இரண்டு பெண்களை 200 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளது, இரண்டு மாதங்கள் ஆகியும் அதில் ஒருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை, அதேபோல மே 15 ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தின் கிழக்கு மாவட்டமான இம்பாலில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில் 18 வயதுடைய பெண் ஒருவர் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதிலும் ஒருவர் கூட கைதாகவில்லை.

மணிப்பூரில் இன்னும் குறையாமலிருந்து வரும் கலவரங்களுக்கிடையே அம்மாநில போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய முடுக்கி விடப்பட்டுள்ளனர், இரண்டு மாதங்களில் காவல்துறைக்கு வந்துள்ள புகார்களின் மீது கவனம் செலுத்தி வருகின்றனர், முக்கியமாக தீவைப்பு, கொலை மற்றும் கற்பழிப்பு புகார்களின் மீதான விசாரணை தீவிரமடைந்துள்ளது.

மணிப்பூரில் நிகழ்ந்து வருகின்ற எல்லை மீறிய வெறிகொண்ட தாக்குதல்கள் அனைத்தும் இரண்டு இன குழுக்களின் இடையே விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பதில் உருவான தகராறுகள் காரணமாக உருவானவை. வடகிழக்கு இந்தியாவின் எல்லை மாநிலமான மணிப்பூரில் 3.3 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர், Meiteis மற்றும் Kuki ஆகிய இருவேறு இனத்தை சேர்ந்த மக்களின் மோதல் நிலத்தை ஆக்கிரமிப்பதில் துவங்கி தற்போது தீவிரமான ஜாதி சண்டை ஆகியுள்ளது. Meiteis இனம் மாநில மக்கள் தொகையில் 53% இருக்கின்ற இந்துக்கள் இவர்கள், இவர்கள் மணிப்பூர் மாநில சமவெளிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் வசிக்கின்றனர். Kuki இன மக்கள் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள், மாநில மக்கள் தொகையில் 40% இவர்கள் உள்ளனர், இவர்களின் இருப்பிடமாக மலையுச்சிகள் இருக்கின்றன.

கடந்த மே மாதத்தின் ஆரம்பத்தில் அங்குள்ள ஒரு குடும்ப நல நீதிமன்றம் ஒன்று அங்கு வாழ்கின்ற KuKi இன மக்கள் மட்டுமே அனுபவித்து வருகின்ற நிலம் வாங்கும் உரிமை, பொருளாதார சலுகைகள் போன்றவற்றை Meiteis இன மக்களுக்கும் இனி தரலாம் என்று பரிந்துரை செய்ததே இந்த கலவரங்கள் நடைபெற முக்கிய காரணமாகி உள்ளது. உடனடியாக போராட்டத்தில் இறங்கிய Kuki இன மக்கள் “இந்த சலுகைகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டால் அவர்கள் வலுவடைந்து விடுவர் என்றும், நாங்கள் நெடுங்காலமாக வசித்து வரும் மலை உச்சிகளில் இவர்களும் இடம் வாங்க அனுமதிக்க படுவதில் எங்களுக்கு விருப்பமில்லை” என்றும் கூறியுள்ளனர்.

அங்கு வெடித்த போராட்டம் எல்லை மீறிய வன்முறை கட்டவிழ வழிவகை செய்துள்ளது, ஆயுதமேந்திய வெறிகொண்ட கும்பல்களால் இரண்டு இனங்களிலும் சேதங்கள் உண்டாகியுள்ளன. வீடுகளும், கோவில்களும், சர்ச்சுகளும் இடித்து தள்ளப்பட்டு நெருப்பிடப்படுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்முறைகளில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது அதிகரித்துள்ளது.

மணிப்பூரில் இருந்து வெளியாகின்ற “ஷில்லாங் டைம்ஸ்” என்ற பத்திரிக்கையின் எடிட்டரும் செய்தி சேகரிப்பாளரும் ஆன “Patricia Mukhim” என்பவர் CBS செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள தகவலின்படி “தற்போது சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த இயலாதவாறு அப்பகுதிகளில் வன்முறை அதிகரித்துள்ளது, இதை பார்க்கும் போது மனிதாபிமானம் அறவே இல்லாத உள்நாட்டு போர் ஒன்று நிகழ்வது போல தெரிகிறது” என்று கூறியுள்ளார்.

மணிப்பூர் பழங்குடியின குழுக்கள் ஒன்றோடொன்று பல ஆண்டுகளாக மோதலில் ஈடுபட்டு வருகிறது, அது எல்லை மீறிய கலவரங்களாக தற்போது மாறியுள்ளது. இவர்கள் இந்திய இராணுவத்துடன் தனி நாடு கோரியும், இன்னும் பல நிபந்தனைகள் விதித்தும் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபடுவதும் உண்டு, இதற்கென இந்திய ராணுவம் 12 இராணுவ தளவாடங்களை மணிப்பூரில் நிறுத்தி வைத்துள்ளது.

அம்மாநிலத்தின் ஆளும் கட்சியாக உள்ள BJP கட்சியின் மீது அனைத்து எதிர்க்கட்சிகளும் பின்வரும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன, Meiteis இந்துக்கள் என்பதால் BJP அவர்களுக்கு ஆதரவை அளிப்பதாக கூறி வருகின்றன. 

Patricia அங்குள்ள காவல் துறையினரும் Meiteis இன மக்களுக்கே ஆதரவாக நடந்து கொள்வதாக கூறுகின்றார். வலது சாரி கட்சியான BJP என்றும் Meiteis இனதிற்கே ஆதரவளிக்கும், ஏனெனில் சிறுபான்மையினர் ஆக இருக்கும் Kuki இன மக்கள் இந்திய பிரஜைகள் அல்ல என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆம், அவர்கள் பல காலங்களாக எல்லையோர நாடான மியான்மரில் இருந்து அகதிகளாக வந்து சேர்ந்தவர்கள் ஆவர், அவர்கள் செய்த செயல்கள் தான் இந்தியாவின் மலை பகுதிகளில் இந்தியர்கள் நிலம் வாங்கும் உரிமையை பெறக்கூடாது என்று போராட்டங்களை தொடங்கி தற்போது மிகபயங்கர இனக் கலவரத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

இப்படிப்பட்ட அரசியல் மற்றும் காவல்துறையின் ஆதரவு இருப்பதால் Meiteis இன மக்கள் KuKi இனத்தை வேரோடு அழித்து விட நினைத்துள்ளனர், இப்போது இல்லாவிட்டால் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியாது என்ற எண்ணத்தில் Kuki இனத்தை தாக்கி வருகின்றனர், அவர்களை விரட்டி விட்டால் அவர்களின் நிலங்களை இவர்கள் ஆக்கிரமிக்க முடியும் என்ற எண்ணமும் காரணம்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இம்மாத துவக்கத்தில் ஐரோப்பிய பாராளுமன்றம் “மணிப்பூரில் நிகழ்ந்து வரும் தொடர் வன்முறைகள் தான் ஜாதி ரீதியான பிரிவினை கொள்கைகள் கொண்டிருக்கும் நமக்கு நாமே அளித்து கொள்ளப் போகும் முடிவு” என்று கூறியுள்ளது, மேலும் “இந்துக்கள் தங்களுடைய பெரும்பான்மையை வெறித்தனமாக காட்டுவதாக இது அமைந்துள்ளது” என்றும் கூறியுள்ளது.

அதற்கு பதிலளிக்கும் வகையில் இந்தியா, “ஐரோப்பிய பாராளுமன்றம் தன் சொந்த நாட்டின் பிரச்சினைகள் மீது கவனம் செலுத்த வேண்டும், இம்மாதிரி இந்தியாவின் உள்நாட்டு நிலவரங்களில் தலையிடுவது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல” என்று கூறியுள்ளது. மேலும் இது ஐரோப்பிய நாட்டின் காலனித்துவ ஆதிக்க சிந்தனையையே காட்டுகிறது என்றும் கூறியுள்ளது.

பின்னணி:

பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் மத்திய அரசையும், மணிப்பூர் மாநில அரசையும் கேள்விகளால் துளைத்து எடுத்துக் கொண்டு உள்ளார்கள். அவர்களது பார்வையின் படி, மணிப்பூர் மாநில அரசும் இந்திய அரசும் இந்த கலவரங்கள் மீது இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருப்பதாக கூறி வருகின்றனர்.

இம்மாதிரியான கொடூர சம்பவங்கள் இனி நிகழாதவாறு அரசு விரைவில் அந்த பகுதிகளில் உருவாகியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும், விரைவில் அங்கு சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தி அம்மாநில மக்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் அங்கு அராஜகங்கள் கட்டவிழக்க படுகின்றன. விரைவில் மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே அனைத்து மக்களின் விருப்பமாகும்.

தொடர்புடைய பதிவுகள் :

திசை மாற்றும் சமூக வலைத்தளங்கள்
வறுமையின் பிடியிலிருந்து விடுபடும் இந்திய தேசம்! உலக வறுமைக் குறியீடு இந்தியாவைப் பற்றிக் கூறுவது என...
அமெரிக்காவில் இந்துக்கள் மீதான வெறுப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரிப்பு - அமெரிக்க சட்டமன்றத்தின் உதவி...
சிறுநீர்பாதைத் தொற்று பற்றி நம்மிடம் இருக்கும் மூடநம்பிக்கைகள்! தெரிவோம்… தெளிவோம்!!
இந்தியாவின் உள்நாட்டில் தயாராகும் நீண்டதூர நிலப்பரப்பு ஏவுகணை! 400 கி.மீ தூரத்தில் விமானங்கள் மற்றும...
22 பேருடன் செவ்வாய் கிரகத்தில் குடியேற்றத்தைத் தொடங்க முடியும்..! எந்தமாதிரியான குணமுள்ள மனிதர்கள் த...
சிறுத்தைகளின் மரண தேசமா இந்தியா?
கிழக்கு இந்தியாவில் ரயில் தடம் புரண்டதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது
காவல்துறையில் புகார் அளிப்பது எப்படி?
அமேசான் மழைக்காடுகளில் எண்ணெய் எடுக்க நிரந்தர தடை - இயற்கையை மதித்து வாக்களித்த ஈக்வடார் நாட்டு மக்க...
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *