fbpx
LOADING

Type to search

இந்தியா தெரிவு பல்பொருள்

மணிப்பூர் : பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

செய்தி சுருக்கம்:

பற்றியெரிகிறது மணிப்பூர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் இப்பொழுது ஒரு கலவர பூமி. இனக்குழுக்களுக்குள் நிகழ்ந்த வன்முறை வெறியாட்டம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வதில் வந்து முடிந்து, உலக அரங்கில் இழிவைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. 

மே மாதம் இரண்டு பெண்களை நிர்வாணமாக அணிவகுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள்  இப்போது அங்கே மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மாநில தலைநகரான இம்பாலுக்கு தெற்கே 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுராசந்த்பூரில் போராட்டம் நடைபெருகிறது. பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மாநில முதல்வர் பீரன் சிங்கை பதவி விலகக்கோரியும் இந்த போராட்டத்தை இவர்கள் முன்னெடுக்கின்றனர்.

பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்படும் வீடியோ

சமூக ஊடகங்களில் பெண்கள் இருவர் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்படுவதைக் காட்டும் வீடியோ பரவலாக பகிரப்பட்டது. பல இளைஞர்களால் சூழப்பட்டிருந்த அந்த பெண்கள் கூனிக்குறுகி நடக்கும் காட்சி  அனைவரையும் ஆத்திரத்தில் ஆழ்த்தியது. அந்த இளைஞர்கள் அந்த பெண்களின் பிறப்புறுப்பை கையால் பிடித்து அவர்களை வயல்வெளிக்கு இழுத்துச்செல்கின்றனர்.  அங்கு அவர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகத் தெரிகிறது. 

மணிப்பூரில் உள்ள பழங்குடியினர் அமைப்பான பழங்குடியினத் தலைவர்கள் மன்றத்தின் கூற்றுப்படி, அந்த பெண்கள் குகி-சோ சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் தங்களைத் தாக்கியவர்கள், முன்பு தங்கள் கிராமத்தை எரித்த மெய்டே கும்பலின் ஒரு பகுதியினர் என்று கூறினார்.

“எங்கள் ஆடைகளை கழற்றுமாறு எங்களை வற்புறுத்தினார்கள், நாங்கள் சொன்னபடி செய்யாவிட்டால் நாங்கள் கொல்லப்படுவோம் என்றார்கள். பிறகு எங்களை நிர்வாணமாக நடக்க வைத்தார்கள். அவர்கள் எங்களை துஷ்பிரயோகம் செய்தனர். அவர்கள் எங்களை எல்லா இடங்களிலும் – எங்கள் மார்பகங்களில், எங்கள் பிறப்புறுப்புகளில் – தொட்டனர்,” என்று அவர் மணிப்பூரிலிருந்து தொலைபேசியில் கூறினார்.

பின்னர் இருவரும் வயல் வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர்கள் இருவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் அந்த பெண் கூறினார். இரண்டு பெண்களும் தற்போது அகதிகள் முகாமில் பாதுகாப்பாக உள்ளனர்.

குகிஸ் மற்றும் மெய்டீஸ் இடையே வன்முறை தொடங்கிய ஒரு நாளுக்குப் பிறகு, மே 4 அன்று இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். கடந்த மே 18 ஆம் தேதி காவல் துறையின் புகாரின்படி, அந்த கும்பல் இரண்டு பெண்களின் குடும்பத்தைத் தாக்கி அதன் இரண்டு ஆண் உறுப்பினர்களைக் கொன்றுள்ளது. 

அரசின் நடவடிக்கைகள்

சமூக வலைதளங்களிலும் பொது மீடியாவிலும் அதிகமாக பரவிய இந்த காணொளியால் பாரதப்பிரதமர் இந்த மணிப்பூர் கலவரங்களைக் குறித்து தனது மௌனத்தைக் கலைக்க வழிவகுத்தது. பெண்கள் மீதான இந்த தாக்குதல் மன்னிக்க முடியாத குற்றம் என்று கடந்த வியாழன் அன்று இந்தியப் பிரதம் கூறினார். 

இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட  ஐந்தாவது கைது நடவடிக்கையை மணிப்பூர் மாநில அரசு சனிக்கிழமை அறிவித்தது. மற்ற சந்தேக நபர்களை கைது செய்ய அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக மாநில காவல்துறை தலைமை இயக்குனர் ராஜீவ் சிங் தெரிவித்தார்.

தீவிரமாகும் மக்கள் போராட்டம்

மணிப்பூர் மாநிலத்தில், குக்கி பழங்குடியினரின் கோட்டையான சுராசந்த்பூரில் உள்ள திறந்த மைதானத்தில் “நினைவுச் சுவர்” தளத்தில் போராட்டக்காரர்கள் ஒன்றுகூடினர், அங்கு அவர்கள் வன்முறையில் கொல்லப்பட்ட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்களின் போலிச் சவப்பெட்டிகளை வைத்திருந்தனர்.

மேலும் சுமார் 400 ஆண்களும் பெண்களும் இதே கோரிக்கைகளை முன்வைத்து இந்திய தலைநகரில் போராட்டம் நடத்தினர். “குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்”, “பிரேன் சிங் பதவி விலகுங்கள்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

ராஜினாமா செய்வதற்கான அழைப்புகள் குறித்து முதல்வர் சிங் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால் வியாழனன்று, “அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்ய விசாரணை நடைபெற்று வருகிறது. மரண தண்டனைக்கான சாத்தியக்கூறுகள் உட்பட. இது போன்ற கொடூரமான செயல்களுக்கு நமது சமூகத்தில் இடமில்லை என்பதை தெரியப்படுத்துங்கள்.”

மனித இனத்தின் பிரச்சனை

இனக்குழுக்களுக்கிடையிலான கலவரங்களை அடக்குவதும் ராணுவ நடவடிக்கைகளை முறைப்படுத்துவதும் உடனடித் தேவை. ஆனால், இத்தகைய போராட்டங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவது மொத்த சமுதாய பிரச்சனையாகும். அதற்கான நிரந்தரத் தீர்வு என்பது நமது அடிப்படைத் தேவையாகும். 

அந்த நிர்வாணமான பெண்கள் பின்னால் உற்சாகமாக நடந்துவரும் இளைஞர்களைக் காண்கையில் இது மணிப்பூரின் இனப்பிரச்சனை இல்லை, இது ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் பிரச்சனை என்று உரக்கக் கூவத் தோன்றுகிறது.

தொடர்புடைய பதிவுகள் :

சந்திராயன்-3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது, பின்னணியில் தமிழக ரயில்வே தொழிலாளியின் ம...
பெண் ஏன் அடிமையானாள்..?
டுன்சோ நிறுவனம் இரண்டு மாத ஊதியத்தை ஊழியர்களுக்கு வழங்காதது ஏன்?
இலங்கை எதிர்நோக்கும் முக்கிய திருப்பம்; எரிபொருளால் மீளுமா பொருளாதாரம்?
Obstructive Tamil Meaning| ‘Obstructive’ தமிழ் பொருள்
நாடு முழுவதும் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளில் 76% நோட்டுகள் வங்கிகளில் திரும்ப ஒப்பட...
ஏரோக்சான்: விறைப்பு குறைபாட்டை போக்கும் அதிசயம்
கல்லீரல் பாதிப்புக்கு வழங்கப்படும் மருந்தில் போலிகள் கலந்துள்ளன - இந்தியா மற்றும் துருக்கியில் அதிகள...
முதுகுவலிதானே என்று அலட்சியம் வேண்டாம்.. உலகில் பெரும்பாலான ஊனத்திற்கும் இயலாமைக்கும் காரணம் இந்த மு...
26 ரஃபேல் ஜெட் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்சிடமிருந்து வாங்க போகும் இந்திய...
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *