Lying Tamil Meaning

(present participle of lie)
Tamil: 1. பொய் பேசுகிற; பொய் பேசுதல்; பொய் சொல்கிற; பொய் சொல்லுதல்; 2. படுத்திருக்கிற; படுத்திருத்தல்; (present participle of lie)
Explanation:
1. பொய் பேசுதல்
பொய் பேசுவது என்பது இரண்டு தரப்பினரை உள்ளடக்கிய ஒரு தகவல்தொடர்புச் செயல். பொய் பேசுகிறவர் கேட்பவரைத் தவறான தகவல்களைக் கொடுத்து ஏமாற்றுகிறார். ஏமாற்றப்பட்டவர்கள் ஏமாறக் காரணங்கள் அவர்களுக்கு உண்மையைத் தேடியறிவதில்அக்கறையில்லாமை, அறியாமை, ஒருதலைச்சார்பாக இருத்தல் அல்லது பேசுகிறவரிடம் அதீத நம்பிக்கை வைத்திருத்தல் ஆகியவை.
பொய் பேசுபவர்கள் பொதுவாக நேர்மையின்மையின் பின்வரும் கட்டமைப்புகளில் பொய் பேசுகிறார்கள்: முழுமையாக ஏமாற்றுதல்; அரை உண்மைகள் பேசுதல்;மிகைப்படுத்தல்; மற்றும் குறிப்பிட்ட விஷயங்களைச் சொல்லாமல் விடுதல். பொய் பேசும் ஒருவர் இரண்டு காரணங்களுக்காக அதைச் செய்யக்கூடும்: ஒன்று, பொய் பேசுபவர் உண்மையைச் சொல்வதை விட பொய் சொல்வதன் மூலம் ஆதாயம் பெற வேண்டும் என்று எண்ணுகிறார்; இரண்டு, பொய் பேசுபவர் தற்காலிகமாகவோ அல்லது ஏதேனும் ஒரு நிரந்தர மனக்குறைபாட்டின் காரணமாகவோ, உண்மை என்னவென்பதைப் புரிந்துகொள்ள இயலாதவராக இருக்கிறார்.
Examples:
- உண்மையைச் சொல்வது சிக்கலானதாகவும் சங்கடமாகவும் கடினமாகவும் இருக்கும் என்பதால் அவர் தனது மனைவியிடம் பொய் பேசுகிறார். (He is lying to his wife because telling the truth would be complicated, uncomfortable, and tedious.)
- “பொய் பேசுவது உன்னைக் காப்பாற்றாது,” என்று காவலர் திருடனிடம் கூறினார். (“Lying will not save you,” said the policeman to the thief.)
- அவளது முகத்தைப் பார்த்தால் அவள் பொய் சொல்கிறாள் என்று தெரிந்துவிடும். (If you look at her face, you will know that she is lying.)
- அவர்கள் இருவரும் பொய் சொல்லும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். (They have both mastered the art of lying.)
2. படுத்திருத்தல்
- தரையில் படுத்திருந்து, குழந்தை நாயுடன் விளையாடியது. (Lying on the floor, the child played with the dog.)
- அவள் நாள் முழுவதும் படுக்கையில் படுத்திருந்தாள். (She was lying on the bed the entire day.)
- சோஃபாவில் படுத்திருந்து நாள் முழுவதும் டிவி பார்ப்பதால் நீ பருமனாகி வருகிறாய். (Lying on the sofa and watching TV all day is making you obese.)
- சூரிய அஸ்தமனம் வரை அவர்கள் கடற்கரையில் படுத்திருந்தார்கள். (They were lying on the beach until sunset.)