மற்றவர்களுக்காக வாழாதீர்கள்! சாதாரண கார்களை ஓட்டும் அமெரிக்க பணக்காரர்கள் உலகத்திற்குச் சொல்வது என்ன..?!!

செய்தி சுருக்கம்:
சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, வருடம் 2 லட்சம் டாலர்களுக்கு மேல் சம்பாதிக்கும் பணக்கார அமெரிக்கர்கள் ஆடம்பரமான கார்களை தவிர்த்து விட்டு சாதாரணமான கார்களை உடமையாக்குவதை கண்டறிந்துள்ளனர். பிறருக்குக் காட்டுவதற்காக வாழாமல் தனக்காக வாழுங்கள் என்று அவர்கள் கூறுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
நம்மைப் பொறுத்தவரை கார்கள் என்பவை பயன்பாட்டு பொருள் மட்டுமல்ல அவை நமது வாழ்க்கை தரத்தின் அடையாளமும் கூட.. நாம் அடிக்கடி காணக்கூடிய காட்சி தான் இது: ஒரு சின்னத்திரை அல்லது யுட்யூப் பிரபலம் தான் கார் வாங்கிய நிகழ்வை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்வதை பார்க்கலாம். உண்மையில் அவர்கள் கூற வருவது என்ன?
அவர்கள் போராடிக் கொண்டிருந்த காலத்தில் அவர்கள் மீது அவநம்பிக்கை கொண்டிருந்த சொந்தக்காரர்களுக்கும் நண்பர்களுக்கும் தங்கள் சாதித்து விட்ட செய்தியை சொல்ல விழைவதுதான் அது. எனவே கார் என்பது நம்மைப் பொறுத்தவரை பயணம் செய்வதற்கான வாகனம் மட்டுமல்ல.. வாழ்க்கைத் தரத்தின் அடையாளமும் கூட.
உங்களிடம் இப்பொழுது நிறைய பணம் இருந்தால் நீங்கள் எந்த காரை ஓட்டுவீர்கள்? மெர்சிடிஸ், பென்ட்லி? பணக்காரர்களின் கார் என்று நாம் நினைப்பது இவற்றைத்தான். ஆனால் எல்லாவற்றிலும் நம்மவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் அமெரிக்காவில் என்ன நடக்கிறது?அமெரிக்காவில் எக்ஸ்பீரியன் ஆட்டோமோட்டிவ் 2022 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி, நிறைய பணக்காரர்கள் ஆடம்பரமான கார்களை ஓட்டுவதில்லை.
பின்னணி:
$250,000 க்கு மேல் குடும்ப வருமானம் உள்ளவர்கள், 61% பேர் ஆடம்பர பிராண்டுகளை ஓட்டுவதில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. டொயோட்டா, ஃபோர்டு, ஹோண்டா போன்ற கார்களை நம்மைப் போலவே ஓட்டுகிறார்கள்.
வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான MaritzCX, அமெரிக்காவில் ஆண்டுக்கு $200,000க்கு மேல் சம்பாதிக்கும் நபர்ள் அதிகமும் Ford F-150 பிக்அப் டிரக்கை ஓட்டுவதாகக் கண்டறிந்துள்ளது.
மெட்டா (முன்பு பேஸ்புக்) நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் – 49.5 பில்லியன் டாலர் நிகர மதிப்பைக் கொண்டவர் – ஹோண்டா ஃபிட் ஹேட்ச்பேக்கை அடிக்கடி ஓட்டுவதைக் காணலாம். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் பெரும் கோடீஸ்வரரான பிறகும் ஹோண்டா அக்கார்டை ஓட்டி வந்ததைப் பார்க்க முடிந்தது. புகழ்பெற்ற முதலீட்டாளர் வாரன் பஃபெட் கார்களிலும் சிக்கனமானவர்.
வெளிக்காட்டிக் கொள்ளாதீர்கள் – முதலீடு செய்யுங்கள்
அமெரிக்காவில் பல பில்லியன் டாலர்களைக் கட்டி எழுப்பிய முதல் தலைமுறை பணக்காரர்கள் தங்களிடம் குறிப்பிட்ட அளவு பணம் சேரும் வரையில் நாங்கள் பணக்காரர்கள் என்பதை வெளிக்காட்டிக் கொள்ள என்றுமே முனைந்ததில்லை என்பது தெளிவாகிறது.
கொஞ்சம் வசதி வந்தவுடன் விலை உயர்ந்த கார்களை தவணை முறையில் வாங்கி தாங்கள் வாழ்க்கையில் முன்னேறி விட்டதாகவும், பெரிதாக சாதித்து விட்டதாகவும் வெளிக்காட்டிக் கொள்வதை விட அத்தியாவசியமான முதலீடுகளை செய்து பணத்தைப் பெருக்க வேண்டியது அவசியமாகும்.
அமெரிக்காவில் உள்ள தனிப்பட்ட நிதி ஆலோசகரான டேவ் ராம்சே என்பவர் கூறுகையில் மற்றவர்களுக்குக் காட்டுவதற்காக வாழாதீர்கள் உங்களுக்காக வாழுங்கள். குறைந்த விலையுள்ள காரை வாங்குவது உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். காலம் உங்களை புதிய காரை விட பயன்படுத்திய காரை நோக்கியே அழைத்துச் செல்லும் என்கிறார்.
விலை குறைந்த கார்கள் நம்மை பணக்காரர்கள் ஆகுமா?
நிச்சயமாக ஆக்கும். முதலில் கவனிக்கவேண்டியது தேய்மானம். நீங்கள் ஷோரூமை விட்டு உங்கள் புதிய காரை எடுத்துக்கொண்டு வெளியேறிய அடுத்த கணமே கார்கள் அதன் மதிப்பை இழக்கத் தொடங்குகின்றன. முதல் ஐந்து ஆண்டுகளில் அனைத்து வாகனங்களின் சராசரி தேய்மானம் 49 .1% ஆகும். அதே சமயம் ஆடம்பரமான பிராண்டுகள் இதைவிட அதிகமாக இயக்க நேரிடும்.
மெர்சிடிஸ் எஸ்-கிளாஸின் சராசரி ஐந்தாண்டு தேய்மானம் 67.1% ஆகும். ஒரு BMW 7 சீரிஸுக்கு, இது 72.6% ஆகும்.
மேலும், எகானமி கார்களை விட சொகுசு கார்களை பராமரிக்கவும் காப்பீடு செய்யவும் அதிக செலவாகும் . மேலும் சொகுசு கார்களுக்கு வாரண்டி முடிந்து விட்டால், பழுதுபார்ப்பதற்கு அதிக விலை கூடும்.
எனவே, கார்களில் சென்று பணத்தை முடக்குவதை விட அந்த பணத்தை முதலீடாக கொண்டு பெருக்குவது தான் சரியான வழியாக இருக்கும். கார் என்பது நிச்சயமாக ஒரு நல்ல முதலீடு இல்லை என்பது கண்கூடு. மற்றவர்களுக்காக வாழாதீர்கள் உங்களுக்காக வாழுங்கள்.