உடலில் மென்மையான தசைநார்களை பெருக்கிக் கொள்வது அல்சைமர் நோயிலிருந்து நம்மை காக்கும்!- ஆய்வு முடிவு.

செய்தி சுருக்கம்:
உடலில் இருக்கும், அதிக கொழுப்பைக் கொண்டிராத மற்றும் அதிகமான தசைப் பிணைப்புகள் இல்லாத தசைநார் மென்மை தசைநார் (Lean Muscle) என்று அழைக்கப்படுகிறன. உடலில் இத்தகைய மென்மை தசைநார்களை அதிகம் உருவாக்கிக் கொள்வது வயதானவர்களில் ஏற்படும் அல்சைமர் என்ற மறதி நோயை தடுக்க உதவுகிறதாம்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான காரணிகளாக பல்வேறு விஷயங்கள் இப்பொழுது ஆராயப்பட்டு வருகின்றன. ஒரு புதிய ஆய்வானது, அல்சைமர் நோய்க்கும் நம் உடலில் இருக்கும் தசைநார்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை காட்டுகிறது. இருப்பினும், அல்சைமர் நோய்க்கும் தசைநார்களுக்கும் இருக்கும் தொடர்பு முழுமையாக இந்த ஆய்வில் வெளிப்படுத்தப்படவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
தொடர்ச்சியாக செய்யப்படும் உடற்பயிற்சிகள் அல்சைமர் நோய் ஏற்படுவதை குறைக்கும் என்று வெகு காலமாகவே கூறிவந்துள்ளனர். பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வு முடிவில் இது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது உடலில் மென்மையான தசைநார்களை உருவாக்கிக் கொள்வது உடலில் மொத்த நரம்பு மண்டலங்களையும் வலுவாக்குகிறதாம்.
மற்றொரு ஆய்வு முடிவு உடலில் அதிகமான மற்றும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடிய மென்மையான தசையினர்களை கொண்டவர்கள் அல்சைமர் நோய் பாதிப்பில் இருந்து 12 சதவீதம் குறைவாக பாதிக்கப்படுகிறார்களாம்.
பின்னணி:
முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள் நோய்க்கும் உடல் பருமனுக்கும் பாடி மாஸ் இன்டெக்ஸ் என படக்கூடிய உடல் நிறைக்கும் தொடர்பு இருப்பதை வெளிப்படுத்தின. உடல் நிறை மட்டுமே அல்சைமருக்கான காரணியாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் உடலில் இருக்கும் தசைனர்களும் கொழுப்பும் இந்த நோயோடு எவ்வாறு சம்பந்தப்படுகின்றன என்பதை ஆய்வு செய்து வந்தனர்.
ஆய்வு எவ்வாறு நடத்தப்பட்டது?
ஆயிரக்கணக்கான தனிநபர்கள் மீது நடத்தப்பட்ட இந்த ஆய்வில் புதிதாக பயோஇம்பட்டன்ஸ் என்ற சாதனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடல் முழுவதும் லேசான மின் அதிர்வை பாய்ச்சுகிறது. இந்த மின் அதிர்வு தசைநார்களிலும் கொழும்பிலும் வெவ்வேறு விதமான வேகத்தில் பாய்கிறதாம். இதைக் கொண்டு அவர்களது தசைநார்கள் மற்றும் கொழுப்பு நிறையின் அளவை அறிய முடிகிறது..
கிட்டத்தட்ட 584 மரபணுவில் வேறுபட்ட மென்மையான தசைநர்கள் உடலில் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றுகூட அல்சைமர் காரணியாக கண்டறியப்படவில்லை. மரபணு காரணமாக உடலில் அதிக மென்மையான தசைநார்களைக் கொண்டவர்கள் அல்சைமர் நோய்க்கு குறைவாக பாதிப்படைவதை கண்டறிய முடிந்தது.
ஒரு குறிப்பிடத்தக்க ஆய்வு முடிவு என்னவென்றால், உடலில் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் அல்சைமர் நோய்க்கு அதிகம் பாதிக்கப்படுவதாக அறியப்பட்டு வந்தது. ஆனால் அல்சைமர் நோய்க்கும் தசைநார்களுக்கும் உள்ள தொடர்பை வைத்து பார்க்கும் போது கொழுப்பு நிறைக்கும் இந்த நோய்க்கும் பெரிதாக தொடர்பில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு சொல்லாதது என்ன?
இந்த ஆய்வு முடிவுகள் தசைநார்களுக்கும் அல்சைமர் நோய்க்கும் உள்ள தொடர்பை வெளிக்காட்டினாலும் இன்னும் பல பகுதிகளில் விளக்கம் தேவைப்படுவதாக உள்ளது.
அதாவது இந்த மென்மையான தசைநார்கள் குறிப்பிட்ட வயதிற்கு முன்பாகவே உடலில் உருவாக்கிக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றா? அதாவது அல்சைமர் உருவாவதற்கு முன்பாகவே தசைநார்கள் உருவாக்கப்பட வேண்டுமா?
அதேபோல இந்த ஆய்வு மரபணு சம்பந்தமான தசைநார் பெருக்கத்தை பற்றி பெரிதான விளக்கத்தை அளிக்கவில்லை.
மேலும் அல்சைமர் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மென்மையான தசைநார்களை உருவாக்கிக் கொண்ட பின் இந்த நோயிலிருந்து விடுபடுவார்களா என்பது தெளிவாக கூறப்படவில்லை.
உண்மையில் இந்த ஆய்வு ஆரோக்கியமான உடற்பயிற்சியுடன் கூடிய ஒரு வாழ்க்கை முறையை நன்மை தரக்கூடியது என்று வலியுறுத்துவதாக மட்டுமே உள்ளது.
அல்சைமன் நோயை எப்படி தடுப்பது?
அல்சைமர் நோயை இரண்டு வழிமுறைகளில் தடுக்கலாம். ஒன்று பாதுகாத்தல் இரண்டு தூண்டுதல்.
நமது ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, எடை, உணவு பழக்கம், மற்றும் உறக்கம் ஆகியவற்றை சரியான அளவில் பாதுகாப்பதன் மூலம் அதை தடுக்கலாம்.
இரண்டாவது புதிய மொழி, இசைக்கருவி, பொழுதுபோக்கு, திறமை ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்வதன் மூலம் மூளையை இடைவிடாத தூண்டுவதன் மூலம் அல்சைமரிலிருந்து தப்பிக்கலாம்.
மென்மையான தசையினர்களை உருவாக்குவது எப்படி?
மென்மையான தசைநார்களை நம் உடலில் உருவாக்கிக் கொள்வது நாம் நினைப்பதை விட எளிதானது. அதாவது நமது தசைநார்கள் சாதாரணமாக செய்யக்கூடிய வேலையை விட சற்று கூடுதலான சுமையை அதற்கு அளிப்பதன் மூலம் அவற்றை வலுப்படுத்தலாம்.
மென்மையான தசைநார்கள் உருவாக்குவதற்கு நீங்கள் அதிகமான எடைகளை தூக்க வேண்டியது இல்லை. சாதாரண தண்ணீர் பாட்டில்களை தூக்கி இறக்குவதன் மூலமே கூட நீங்கள் இவற்றை செய்ய முடியும். ஸ்குவாட்ஸ் எனப்படும் உக்காந்து எழுந்திருக்கும் பயிற்சியே கால்களுக்கு போதுமானது.
அதே சமயம் சரியான ஓய்வும் தசையினர்களை உருவாக்குவதற்கு அவசியம். நினைவில் கொள்ளுங்கள் – “தசைநர்கள் உடற்பயிற்சிக் கூடத்தில் உருவாக்கப்படுவதில்லை. அவை உங்கள் உறக்கத்திலேயே உருவாக்கப்படுகின்றன”.