fbpx
LOADING

Type to search

இந்தியா உலகம் தெரிவு

அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தை தடுக்க இந்திய தூதரகங்கள் முன்பு போலீசார் குவிப்பு – சுதந்திர தின நிகழ்ச்சியை தடுக்க போட்டிருந்த திட்டம் முறியடிப்பு.

செய்தி சுருக்கம்:

அமெரிக்காவின் San Francisco வில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் தீவைக்க முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்கள் காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர். இந்த சம்பவதின் போது எந்தவொரு அசம்பாவிதங்களோ, பாதிப்பகளோ ஏற்படவில்லை என தகவல் வெளிவந்துள்ளது. காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர்கள் இந்திய சுதந்திர தினத்தில் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறும் போது அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்த அழைப்பு விடுத்திருந்தனர். இதனை முன்னிட்டு தூதரகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ANI செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட வீடியோவில் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்புறம் பல காவல் அதிகாரிகள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

இந்த ஆண்டு இந்திய சுதந்திர தினத்தில் அமெரிக்காவின் வாஷிங்டன் DC யில் உள்ள இந்திய தூதரக அரங்கத்தில் சுதந்திர தின கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அந்த சமயத்தில் தூதரகத்தின் முன்புறமாக போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நிகழ்த்த காலிஸ்தான் ஆதரவு கலகக்காரர்கள் திட்டமிட்டு ஒன்று கூடினர், இவர்கள் கூட்டமாக சேர்ந்து சுதந்திர தினத்தன்று காலை இந்திய தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றுள்ளனர். ஆனால் இவர்களின் எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் பாதுகாப்பு படைவீரர்கள் இந்திய தூதரகத்தின் வாசலில் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்கப்பட்டு போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்த பட்டனர். US Park Police, US Secret Service மற்றும் வாஷிங்டன் DC Police என அமெரிக்காவின் அனைத்து முக்கிய பாதுகாப்பு துறைகளும் அன்றைய தினம் இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பு அளித்துள்ளனர்.

அமெரிக்காவின் இந்திய தூதராக தற்போது இருக்கும் Taranjit Singh Sandhu ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை அங்குள்ள இந்தியா ஹவுசில் அவரது அலுவலக குடியிருப்பில் உள்ள இடத்தில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பெரிய எண்ணிக்கையிலான அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

அமெரிக்காவில் இதுபோன்று காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டங்கள் நிகழ்த்துவது புதிதான விஷயமல்ல, இதற்கு முன்னர் பலமுறை பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். அமெரிக்காவில் மட்டுமன்றி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மீது குறிவைத்து இவர்கள் கலவரங்களை செய்வது சமீப காலங்களில் அடிக்கடி நிகழும் ஒன்றாகிவிட்டது.

இந்த நிகழ்ச்சியின் போது இந்தியா ஹவுசிலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய Taranjit Singh Sandhu, உலகில் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும், இந்திய மரபினருக்கும் மற்றும் இந்தியாவின் நண்பர்களாக இருக்கும் அனைத்து அமெரிக்க மக்களுக்கும் இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துகளை இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்து மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொண்டார்.

 

பின்னணி:

தீவிரவாத கும்பல்களுக்கு இடையே நடந்த ஒரு சண்டையில் காலிஸ்தான் நாட்டை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் இறந்து போனதே இந்த போராட்டங்களுக்கு காரணம் என தெரிய வருகிறது. இதற்கு காரணம் இந்தியர்கள் என்ற முடிவோடு காலிஸ்தான் ஆதரவாளர்கள் தொடர்ந்து இந்தியர்களை குறிவைத்து தாக்குவதும், இந்தியர்களுக்கு எதிராக போராட்டங்கள் மற்றும் கலவரங்களில் ஈடுபடுவதும் அமெரிக்காவில் வாடிக்கையாகி வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இதுபோன்ற போராட்டங்கள் பலவற்றை நிகழ்த்தி பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

சட்டம் தன் கடமையை சரியாக நிறைவேற்றி இதுபோன்ற பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் போராட்டக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. அமெரிக்க அரசிடம் பொதுமக்களும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலரும் புகார் அளித்துள்ளனர். அதன் பிரகாரம் இம்மாதிரியான கலகங்களுக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 

தொடர்புடைய பதிவுகள் :

வதந்தி பரவும் வேகத்தைப் பாருங்கள்! இலங்கையின் புனிதமான போதிமரத்தை மொபைல் சிக்னல்கள் பாதிக்கின்றன என்...
1983  கறுப்பு யூலை படுகொலைகள்: 40 வருடங்களாக ஆறாத ரணம்…
தமிழ்நாட்டின் கீழடியில் ‘படிக குவார்ட்ஸ் எடை அலகு’ கண்டுபிடிப்பு
காட்டுத் தீயில் சிக்கித் தவிக்கும் கனடா!! ஆயிரத்துக்கும் அதிகமான காட்டுத் தீ பகுதிகள்..!!
மிகப்பெரும் இந்திய - அமெரிக்கா ஒப்பந்தங்கள்: H-1B விசா விதிகளில் மாற்றங்கள், விண்வெளித் துறையில் ஒரு...
இலங்கையில் கண்பார்வை சேதம் : இந்தியா கண் சொட்டு மருந்து உற்பத்தியாளர் காரணம்
‘த்ரெட்ஸ்’ செயலியின் இலச்சினை தமிழ் எழுத்தான ‘கு’ வடிவில் உள்ளதா?
நீண்ட ஆயுள் வேண்டுமா? எட்டு பழக்கவழக்கங்களைக் கையாளுங்கள்!
மார்பகப்புற்றுநோயின்அறிகுறிகள்
முக வீக்கம் காரணம் என்ன?
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *