தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் ஶ்ரீலங்கா காவல் துறையால் கைது

செய்தி சுருக்கம்:
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை அவரது கொழும்பு இல்லத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை சிறிலங்கா பொலிஸார் கைது செய்துள்ளனர். போலீஸ் கடமைகளுக்கு இடையூறு என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
இலங்கையின் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் பொன்னம்பலம் மற்றும் உள்ளுர் விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் கூட்டமொன்றில் சாதாரண உடையில் வந்த இருவர் அவரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு பிறகு இந்த கைது இடம் பெற்றுள்ளது.
Police insisting that @GGPonnambalam should go to #Maruthankerni today itself to make a statement or threatening to #arrest him is totally #illegal and violates his #privilege as an #MP. He is being prevented from attending the ongoing #Parliament sessions today. #repression https://t.co/PZwtB9HAnK
— M A Sumanthiran (@MASumanthiran) June 7, 2023
பின்னணி:
இவர் காலஞ்சென்ற தமிழ் அரசியல்வாதியும் சட்டத்தரணியுமான குமார் பொன்னம்பலத்தின் மகனாவார்