ஐ. எஸ். ஐ. எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மூவர் கைது

செய்தி சுருக்கம் :
இந்தியாவின் முன்னணி பயங்கரவாத எதிர்ப்பு ஏஜென்சியான தேசிய புலனாய்வு ஏஜென்சி (என். ஐ. ஏ. ) கடந்த சனிக்கிழமையன்று மத்திய பிரதேச மானிலம் ஜபல்பூரில் உள்ள 13 இடங்களில் இரவு முழுவதும் நடைபெற்ற சோதனையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னணி :
மத்திய பிரதேச காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவுடன் இணைந்து புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சையத் மமூர் அலி, முகமது அடில் கான் மற்றும் முகமது ஷாகித் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இவர்கள் மூவரும் மத்திய பிரதேச மாநி ல தலைந கர் போபாலில் உள்ள என். ஐ. ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
ஏன் இது முக்கியமானது:
சன்னி இஸ்லாத்தின் சலாஃபி ஜிஹாதி கிளையைப் பின்பற்றும் பயங்கரவாத இஸ்லாமியக் குழு, 2014ல் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றதுடன், தெற்கு ஆசியாவில் – அதிக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட பிராந்தியத்தில் – தனது சுவடுகளை வேகமாகப் பரப்பிவருவாதாக நம்பப் படுகிறது..