fbpx
LOADING

Type to search

இந்தியா சிறப்புக் கட்டுரைகள் பல்பொருள்

2023 செப்டம்பரில் நிகழவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய மல்யுத்த வீரர்கள் இந்திய அடையாளத்துடன் கலந்து கொள்ள தடை – உலக மல்யுத்த கூட்டமைப்பு முடிவு.

மல்யுத்த வீரர்கள் போராட்டம்

செய்தி சுருக்கம்:

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரையிலும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்காமல் இருப்பதால் இந்திய அரசின் சார்பாக சர்வதேச மல்யுத்த போட்டிகளில் வீரர்கள் பங்கேற்க இடைக்கால தடை விதித்து உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிவிப்பு.

Wrestling Federation of India (WFI) அமைப்பின் முன்னாள் தலைவர் Brij Bhushan Singh மீது 1990 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட குற்ற வழக்குகளில் இன்னும் தீர்ப்பளிக்கப்படாமல் உள்ளது, இந்நிலையில் இவர் மீது இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்களை அளித்துள்ளனர், தற்போது திருட்டு, கொலைமுயற்சி மற்றும் தேர்தல் நேரத்தில் முறைகேடாக பணப்பட்டுவாடா செய்தது போன்ற நான்கு விதமான குற்ற வழக்குகளோடு பாலியல் குற்ற வழக்கும் Brij Bhushan மீது சேர்ந்துள்ளது.

இது இவ்வாறிருக்க இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பொறுப்புக்கு புதிதாக வேறு யாரையும் தேர்ந்தெடுக்காமல் இருப்பதால் உலக மல்யுத்த அமைப்பு அதன் உறுப்பினர் நிபந்தனைகளை மீறியதாக சொல்லி இந்தியாவின் சார்பாக சர்வதேச போட்டிகளில் யாரும் பங்கேற்க முடியாது என்று இடைக்கால தடையை விதித்துள்ளது. இதை பற்றிய விரிவான தகவல்களை தற்போது பார்க்கலாம்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

WFI தலைவர் பொறுப்பிலிருந்து Brij Bhushan பதவி விலக கோரி பல சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்ற இந்தியாவின் முதல்தர மல்யுத்த வீராங்கனைகள் தலைநகர் டெல்லியில் கடந்த மே மாதம் போராட்டங்களை நிகழ்த்தினர். இதன் உச்ச கட்டமாக இந்தியாவின் சார்பாக பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசி அவர்கள் எதிர்ப்பை தெரிவிக்க முயன்றனர், ஆனால் பலரது தலையீட்டால் அத்தகைய சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.

ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த பிரமுகரான Brij Bhushan அவருடைய 66 ஆம் வயதில் உள்ளார், இவர்மீது மல்யுத்த மற்றும் தடகள வீராங்கனைகள் பல்வேறு பாலியல் புகார்களையும், அவரால் தொடர் பாலியல் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியதாகவும் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இந்த புகார்களின் மீது விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது, தற்போது Brij Bhushan நீதிமன்ற பிணையத்தால் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

இவர் மீது விசாரணை நடந்து கொண்டிருப்பதால் WFI தலைவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டு, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில் இம்மாத ஆரம்பத்தில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது, ஆனால் கடைசி நேரத்தில் தேர்தல் கைவிடப்பட்டு தேதி அறிவிக்காமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப் பட்டால் தான் தூக்கில் தொங்க தயார் என Brij Bhushan செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழன் United World Wrestling (UWW) வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் “இந்திய மல்யுத்த சம்மேளனம் தலைவர் இல்லாமல் இருப்பதாலும், தன்னிச்சையாக தலைவர் இன்றி போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என்ற விதிமுறை இருப்பதாலும் UWW நிபந்தனைகளை இந்தியா ஏற்கவில்லை என்றாகிறது, இதனால் உலக மல்யுத்த கூட்டமைப்பின் உறுப்பினராக இந்தியா தொடர முடியாது” என்று இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செய்திக்குறிப்பில் அடுத்த மாதம் சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த மல்யுத்த வீரர்கள் இந்திய அடையாளங்கள் ஏதுமின்றி பங்கேற்க அனுமதிக்க படுவார்கள், ஆனால் அவர்கள் இந்திய கொடியை பயன்படுத்தவும் இந்தியாவின் சார்பாக பங்கேற்கவும் தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் விளையாட்டு வீராங்கனைகளிடம் பாலிய ரீதியான ஒத்துழைப்பை தர வேண்டியும், அவர்களிடம் பதவியை பயன்படுத்தி அத்துமீறி நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள Brij Bhushan இந்த குற்றச்சாட்டை மறுப்பதோடு, இந்த புகார்களானது தான் பாராளுமன்றத்தில் உள்ளே நுழைய கூடாது என்ற சதி திட்டத்தோடு எதிர்கட்சிகள் சேர்ந்து கட்டமைத்த போலியான புகார்கள் என்றும் கூறியுள்ளார். இவர் மீது ஒரு மைனர் பெண் உட்பட ஏழு பெண் வீராங்கனைகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ச்சியான பாலியல் அத்துமீறல்கள், உள்நோக்கத்தோடு கூடிய தொடுதல்கள் மற்றும் விரசமாக பேசுவது போன்ற புகார்களை Brij Bhushan மீது அடுக்கியுள்ளனர். பொறுமையை இழந்த வீராங்கனைகள் தற்போது ஒன்றுகூடி அவருக்கு எதிராக பொங்கியெழுந்து தங்கள் நியாயத்தை பெறுவதற்கு நீதி மன்றத்தை நாடியுள்ளனர்.

தற்போது பாலியல் வழக்கில் சிக்கியுள்ள Brij Bhushan மீது ஏற்கனவே 1990 ஆம் ஆண்டில் நான்கு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதற்கான தீர்ப்புகள் இன்னும் வெளியாகாமல் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். கடந்த மே மாதத்தில் பல்வேறு மூத்த தடகள மற்றும் மல்யுத்த வீரர்கள் இவர் மீது குற்றம் சுமத்தி பாராளுமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது காவல் துறையினர் தடியடி நடத்தியும் சிலரை கைது செய்தும் நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்களும் வீடியோக்களும் அந்த சமயத்தில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. பாராளுமன்றத்தை முற்றுகை இட சென்ற பல நட்சத்திர வீராங்கனைகள் போலீசாரால் தடுக்கப்பட்டு குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்த பட்டது அனைவரும் அறிந்ததே.

புகார் அளித்தவர்களின் ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர், பின்னர் நிகழ்ந்த பேச்சுவார்த்தையில் புகார் அளித்துள்ள வீராங்கனைகள் முற்றுகையை கைவிடுவதாகவும் இந்த பிரச்சினைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தனர். இந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய ஒலிம்பிக் பதக்கம் பெற்ற தடகள வீரர் Vinesh Phogat செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் இதற்கு முன்னரே பல தடவை இந்த Brij Bhushan மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்துள்ளதாகவும் ஆனாலும் அவரது அரசியல் பலத்தால் அவற்றை பெரிதாக வளர விடாமல் செய்தார் எனவும், மீறி வெளியே கொண்டு சென்றால் அடுத்த போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று மிரட்டியும் இதுவரை இவர் தன்னை பாதுகாத்து வந்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

மல்யுத்தம் என்பது வடஇந்திய கிராமங்கள் பலவற்றில் பிரபலமான விளையாட்டாக உள்ளது, சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதுவரை சர்வதேச போட்டிகளில் 21 பதக்கங்களை தனிநபர் விளையாட்டு பிரிவில் பெற்றுள்ளது, இதில் 7 பதக்கங்கள் மல்யுத்த வீராங்கனைகள் பெற்று தந்தவை ஆகும்.

காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று தந்த Anita Sheoran எனும் வீராங்கனை இந்த பாலியல் புகார் சம்பவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார், இவர் மீதும் பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளார். WFI அமைப்பின் தலைவர் பதவிக்கான தேர்தலில் தன் பெயரை நாமினேட் செய்துள்ள Anita தேர்தல் நிகழும் நாளுக்காக காத்திருக்கிறார். இவர்தான் Brij Bhushan செய்த குற்றங்களுக்கு தண்டனை வாங்கி தர தீவிரமாக போராடி வருகிறார்.

 

பின்னணி:

அரசியல் அதிகாரம் கொண்டுள்ள Brij Bhushan எந்த தேர்தலிலும் எளிதில் வெற்றியடைவது தெரிந்துள்ள நிலையில் இவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த WFI தலைவர் தேர்தலில் நிற்க தடை விதித்துள்ளது இந்திய அரசு. இதனால் கூட தேர்தல் தள்ளிப்போகிறது என்ற கருத்தும் உள்ளது. ஆனாலும் பாதிக்கப்பட்ட நம் வீராங்கனைகள் தேர்தலை முறையாக நடத்தி Brij Bhushan இனி தலைவர் பதவியில் நீடிக்க முடியாமல் செய்து தூக்கி எறிய முடிவெடுத்துள்ளனர்.

Brij Bhushan க்கு எதிரான இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வரும் Bajrang Punia நம் இந்திய நாட்டின் சார்பாக 2020 Tokyo வில் நிகழ்ந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலம் வென்றுள்ளார். தற்போது எதிர்வரும் செப்டம்பரில் சீனாவின் Hangzhou நகரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான மல்யுத்த அணியில் இடம்பிடித்துள்ளார், இந்நிலையில் உலக மல்யுத்த கூட்டமைப்பு இந்தியாவிற்கு தடை விதித்துள்ளது. எனவே தனிப்பட்ட முறையில் இந்திய மல்யுத்த வீரர்கள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பார்களா அல்லது இந்திய அணி வீரர்கள் என்ற அடையாளத்துடன் பங்கேற்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

தொடர்புடைய பதிவுகள் :

படைப்பாற்றலில் கற்பனைத்திறனில் மனிதனை மிஞ்சும் சாட்ஜிபிடி (ChatGPT)!! ஆகச்சிறந்த படைப்பாளிகள் கூட சா...
Goggle Meaning in Tamil
Imposter Syndrome: இம்போஸ்டர் சிண்ட்ரோம்:
இனிப்பதெல்லாம் இனிப்பல்ல! செயற்கை இனிப்பூட்டிகள் புற்றுநோயை உண்டாக்கலாம் - ஆய்வு முடிவு!!
Logistics Meaning in Tamil
Occupation Meaning in Tamil
சந்திராயன்-3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது, பின்னணியில் தமிழக ரயில்வே தொழிலாளியின் ம...
இந்தியாவின் எதிர்கட்சிக் கூட்டணி பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
வர்த்தகம் மற்றும் பொருளாதார அளவுருக்களில் இந்தியா சீனாவை விட 16.5 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது: திடுக்க...
கல்லீரல் பாதிப்புக்கு வழங்கப்படும் மருந்தில் போலிகள் கலந்துள்ளன - இந்தியா மற்றும் துருக்கியில் அதிகள...
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *