fbpx
LOADING

Type to search

இந்தியா சிறப்புக் கட்டுரைகள் தெரிவு பல்பொருள்

இந்தியாவின் எதிர்கட்சிக் கூட்டணி பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

மே மாதம் உலகத்தின் ஆகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பொதுத்தேர்தல் நடக்க உள்ள சூழ்நிலையில் 26 கட்சிகளை உடைய இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸின் ‘இந்தியா’ என்று பெயரிடப்பட்டுள்ள கூட்டணி பற்றி நான் தெரிந்துகொள்ள நிறைய விசயங்கள் இருக்கின்றன. 

கடந்த வாரம் பிரதம் மோடியின் அரசியல் எதிரணியினர் “இந்தியா” என்ற கூட்டணியை அமைத்து மோடியின் ஹாட்ரிக் வெற்றியைத் தடுப்பதற்கும், வரும் தேர்தலில் பாஜக வை தோற்கடிப்பதற்கும் சூளுரைத்தனர். இந்த கூட்டணியில் இப்போது 26 கட்சிகள் உள்ளன. தேர்தலுக்குள் இன்னும் பல கட்சிகள் இந்த கூட்டணியில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கூட்டணியின் தலைமை யார்? 

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இருந்து இந்தியாவின் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் காங்கிரஸ் இந்த “இந்தியா” கூட்டணிக்கு தலைமை வகிக்கிறது. 

“நரேந்திர மோடிக்கும் இந்தியாவுக்கும், அவரது சித்தாந்தத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே தேர்தல் போர் உள்ளது” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , ஜூலை 18 அன்று பெங்களூருவில் நடந்த கூட்டணியின் இரண்டு நாள் கூட்டத்தில் கூறினார். 

ராகுல் காந்தியின் 136 நாள் நடை பயணமானது சமீபத்தில் அறங்கேறியது. இது நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவை வலுப்படுத்தியது என்றும், இந்தியாவின் மாபெரும் பழைய கட்சியை மீண்டும் அரசியல் முக்கியத்துவம் பெறச் செய்தது என்றும் பலர் கூறுகின்றனர்.

சமீபத்திய தேர்தல்களில், தெற்கு கர்நாடகா மற்றும் வடக்கு இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த மாநிலத் தேர்தல்களில் பாஜக அரசாங்கத்தை காங்கிரஸ் கவிழ்த்தது. அசைக்க முடியாத வல்லமையுடைய கட்சி என்ற பாஜகவின் பிம்பத்தை இந்த தேர்தல் தோல்விகள் உடைத்தெறிந்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 

“ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்கு ஒன்றாக நிற்பதே முக்கிய நோக்கம்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

காங்கிரஸ் கட்சி கூட்டணியை வழிநடத்தும் அதே வேளையில், பிரதமர் பதவியில் தமக்கு ஆர்வம் இல்லை என்று கூறியுள்ளது. மும்பையில் நடைபெறும் அடுத்த கூட்டத்தில் கூட்டணியை ஒருங்கிணைக்க 11 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று கார்கே கூறினார்.

கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சிகள் யாவை? 

காங்கிரஸைத் தவிர, இந்திய அளவில் வலுவான மாநில கட்சிகளான மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC), தமிழ்நாடு மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)  மற்றும் டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) ஆகியவை ஆகும். 

மற்ற முக்கிய கூட்டாளிகள் – ஜனதா தளம்-யுனைடெட் (ஜேடி-யு) மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), இவை ஒன்றாக பீகாரை ஆளுகின்றன; மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), ஜார்க்கண்டை அதன் கூட்டாளிகளுடன் ஆட்சி செய்கிறது.

தேசிய காங்கிரஸ் கட்சி (என்சிபி-சரத் பவார்), சிவசேனா (யுபிடி), சமாஜ்வாடி கட்சி (எஸ்பி), தேசிய மாநாடு (என்சி), மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (சிபிஎம்) , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (எம்டிஎம்கே), கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி (கேஎம்டிகே), விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிகே), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி), ), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் (சிபிஐ-எம்எல் லிபரேஷன்), பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்), கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி), அப்னா தளம் (காமராவாடி) ), மற்றும் மனிதநேய மக்கள் கட்சி (MMK) ஆகியவை 26 கட்சிகள் கொண்ட கூட்டணியில் உள்ள மற்ற உறுப்பினர்களாகும்.

இந்த கட்சிகள் தனது சொந்த பிராந்தியங்களில் ஒன்றை ஒன்று எதிர்ப்பவையாகவும், அரசியல் சித்தாந்தகளில் வேறுபட்டவையாகவும் உள்ளன. ஆகவே, தனது மாநிலங்களில் மற்ற கட்சிகளுக்கு இடத்தை விட்டுக்கொடுப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 

இந்தியத் திருநாட்டில் தற்போது நடப்பவை என்ன? 

இந்தியாவில் மோடியின் ஏறக்குறைய ஒரு தசாப்த கால ஆட்சியானது, பொருளாதார பிரச்சனைகள், அதிகரித்து வரும் வேலையின்மை, நாட்டின் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான இந்து தேசியவாதிகளின் தாக்குதல்கள், ஊடகங்களுக்கான கருத்து சுதந்திரம் கேள்விக்குள்ளானது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. 

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கொடிய இனக்கலவரம் பாஜக ஆட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு என்று 26-கட்சி கூட்டணி நம்புகிறது .

மே 3 முதல் 130 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட மற்றும் 50,000 பேர் இடம்பெயர்ந்த மணிப்பூர் வன்முறை தொடர்பாக மோடியின் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் புதன்கிழமை பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை மேற்கொண்டன.

இந்தியாவின் இத்தகைய தலையாய பிரச்சனைகளை பாஜக மற்றும் மோடியின் எதிர்ப்பலையாக மாற்றவும் கூட்டணிக்கு சாதகமான ஓட்டாக மாற்றவும் இயலுமா என்பதை காலம்தான் சொல்லவேண்டும். 

காங்கிரஸின் ராஜீவ் கவுடா, நாட்டில் “ஜனநாயகத்தை மீட்டெடுக்க” எதிர்க்கட்சிகள் ஐக்கிய முன்னணியை உருவாக்கியது என்கிறார்.

“மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் உள்ளன. முதலாவது பொருளாதாரத்தில் ஏற்பட்ட தோல்வி. புதிய வேலை வாய்ப்புகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. நாட்டில்  மதத்துவேஷம், வெறுப்பு மற்றும் வன்முறை பரவியுள்ளது. இவை அனைத்தும் மாற்றப்பட வேண்டும். அதனால்தான் நாங்கள் ஒன்றாக வந்துள்ளோம். இந்த அரசின் தோல்விகளை அம்பலப்படுத்த விரும்புகிறோம்,” என்றார்.

மோடியின் பாஜகவின் பதில் என்ன? 

“ஊழல் மற்றும் பரம்பரை கட்சிகளின்” குழு இது என்று  இந்த கூட்டணியை பாஜக நிராகரித்துள்ளது.

பாஜகவின் செய்தித் தொடர்பாளர் குரு பிரகாஷ் பாஸ்வான் கூறுகையில், ” இந்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் ஒரே பொதுவான அம்சம் அதிகாரத்தைப் பின்தொடர்வது மட்டுமே”  என்று கூறினார்.

“தேசத்தின் வளர்ச்சி அல்லது தேசத்தின் வேறு எந்த நலன் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை. அதிகார மோகம், ஊழல், பரம்பரையாக பதவிக்கு வரும் ஆசை மட்டுமே இவர்களை ஒன்றிணைக்கிறது.” என்றார்.

காங்கிரஸ் தனது கூட்டணியை அறிவித்த அதே நாளில் வலதுசாரி பிஜேபி தனது சொந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) மாநாட்டை மற்ற 37 கட்சிகளுடன் நடத்தியது. 

இந்த இந்தியா கூட்டணியைப் பற்றி மோடி கூறுகையில்,  “இந்தியா என்ற பெயரில் ஒரு கூட்டணியை அமைப்பதால் பெரிய அர்த்தம் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் கூட இந்தியா என்ற வார்த்தை இருந்தது” என்று புதுதில்லியில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் மோடி கூறினார்.

மோடியின் கருத்துக்கு பதிலளித்த காந்தி, ட்விட்டரில், “நீங்கள் என்ன வேண்டுமானாலும் எங்களை அழைக்கவும், திரு மோடி. நாங்கள் இந்தியா” என்று கூறியிருந்தார். 

தொடர்புடைய பதிவுகள் :

இலங்கையில் கண்பார்வை சேதம் : இந்தியா கண் சொட்டு மருந்து உற்பத்தியாளர் காரணம்
பங்குச் சந்தை முதலீட்டில் வெற்றி ரகசியம் என்ன?
கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர இலங்கை அரசுக்கு உலகவங்கி 700 மில்லியன் டாலர்கள் நிதிய...
அதானி நிறுவன ஆடிட்டர் பதவி விலகுகிறார்! - Hindenburg, அதானி குழும நிதிநிலை அறிக்கை பற்றி கேள்வி எழுப...
புது பொலிவு பெறும் ஏர் இந்தியா - வண்ணங்கள், அடையாளங்கள், சீருடைகள் அனைத்திலும் மெருகேற்றப்பட்டு நவீன...
Autism Meaning in Tamil
கல்லீரல் பாதிப்புக்கு வழங்கப்படும் மருந்தில் போலிகள் கலந்துள்ளன - இந்தியா மற்றும் துருக்கியில் அதிகள...
சேமிக்கும் பழக்கம் அதிகம் கொண்ட  புத்திசாலி தலைமுறை 90ஸ் கிட்ஸ்
Quite Meaning in Tamil
சர்வேஎண்பார்ப்பதுஎப்படி?
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *