fbpx
LOADING

Type to search

இந்தியா உலகம்

மிகப்பெரும் இந்திய – அமெரிக்கா ஒப்பந்தங்கள்: H-1B விசா விதிகளில் மாற்றங்கள், விண்வெளித் துறையில் ஒருங்கிணைப்பு மற்றும் தூதரகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

செய்தி சுருக்கம்:

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் இரண்டாவது நாளில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவினை மேம்படுத்தும் வகையில் பலதரப்பட்ட பெரிய ஒப்பந்தங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவையாவன, இரு நாடுகளின் பாதுகாப்பு துறைகளின் ஒத்திசைவு, எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிப் பயணங்கள் மற்றும் விசா விதிகளில் தளர்வுகள் என்றவை போன்ற நீண்ட பட்டியலை கொண்டுள்ளது.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

இவற்றில் மிகப்பெரும் ஒரு அறிவிப்பாக அமெரிக்காவின் GE Aerospace அமைப்பு இந்தியாவின் HAL அமைப்புடன் இணைந்து இந்தியாவில் போர் ஜெட்விமான இயந்திரங்களை உற்பத்தி செய்வதாக ஒப்பந்தம்.

அமெரிக்காவின் H1-B விசா விதிகளில் மாற்றங்களும் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு படிப்படியாக இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை செய்யவும் வாழவும் எளிதான வழியில் விதிகளை அமைக்க முடிவு எட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரும் மெமரி கார்டு உற்பத்தி ஆலையான மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்திற்கு இந்தியாவில் ஆய்வகம் அமைத்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இது இந்திய சிப் தொழில்துறையில் மிக நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக அமையும்.

பின்னணி:

இரு நாடுகளின் புரிந்துணர்வு ஒப்பந்த அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ள 10 முக்கிய அம்சங்கள் என்னவென்று இங்கே காணலாம்.

1. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு இயற்றிய “மேக் இன் இந்தியா” திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமெரிக்காவின் Genaral Electric’s Aerospace அமைப்பானது இந்திய அரசின் Hindustan Aeronautics Ltd அமைப்புடன் இணைந்து இந்திய விமானப்படைக்கு தேவையான போர் விமான இயந்திரங்களை இந்தியாவிலேயே தயாரித்து தர முன்வந்துள்ளது.

2. அமெரிக்கா தனது தொழில்நுட்ப விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள எந்த அளவிற்கு அனுமதிக்கும் என்பன போன்ற கேள்விகள் இருந்தாலும் GE Aerospace மற்றும் HAL இவற்றிற்கிடையேயான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது (MoU – Memorandum of Understanding) இந்தியாவை பொறுத்தமட்டில் பாதுகாப்பு துறையில் நிகழும் மிகப்பெரும் ஒப்பந்தம் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

3. மேலும், இந்தியாவும் அமெரிக்காவும் H-1B விசா நடைமுறை விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தவும், இரு நாடுகளின் உறவில் ஒரு பெரிய மைல்கல்லாக இன்னும் சில புதிய தூதரகங்களை நிறுவவும் முடிவெடுத்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட தயாராக உள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

4. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் ஐந்து இடங்களில் இந்திய தூதரகங்கள் உள்ளன. புதிதாக Seattle -ல் ஒரு தூதரகத்தை அமைக்க முடிவெடுத்து உள்ளனர், இது அலாஸ்கா நகரத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். அலாஸ்கா இந்தியாவிற்கு விருப்பமான இடம் என்பது இங்கு குறிப்பித்தக்கது. அதேபோல இந்தியாவில் பெங்களூர் மற்றும் அகமதாபாத்தில் அமெரிக்க தூதரகங்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளன.

5. இந்தியர்கள் அமெரிக்காவில் வசிப்பதற்கும் வேலை பார்ப்பதற்கும் எளிதாக்கும் படி இந்த புதிய விசா விதிகள் இருக்கும், இந்த புதிய விசா நடைமுறைக்கு வந்தால் H-1B விசா வைத்துள்ள குறைந்த அளவிலான இந்தியர்கள் மற்றும் பிற நாட்டை சேர்ந்தவர்கள் இனிமேல் விசாவினை புதுப்பிக்க தங்கள் சொந்த நாட்டிற்கு செல்லாமல் அமெரிக்காவில் இருந்துகொண்டே புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தகவல் அளித்துள்ளனர்.

6. H-1B விசா விதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த முன்னோடி தளர்வுகளானது வரும் ஆண்டுகளில் விரிவு படுத்தப்பட்டு அதிக அளவில் இந்தியர்கள் பயனடையும் படி மாற்றப்படும் என அத்தகவல் தெரிவிக்கிறது. மேலும், Reuters செய்தி நிறுவன அறிக்கையின் படி இந்திய குடிமக்களே மிக அதிக அளவில் H-1B விசா திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். 2022- ம் நிதியாண்டு கணக்கின்படி H-1B விசா கிட்டத்தட்ட 442000 பயனீட்டாளர்களை கொண்டிருந்தது, அதில் 73 சதவிகிதம் இந்தியர்கள் ஆவர்.

7. வெள்ளை மாளிகயின் தகவலின் அடிப்படையில் 2025- ல் மீண்டும் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துடன், முக்கிய லட்சியமாக செவ்வாய் மற்றும் அதையும் தாண்டிய விண்வெளி பயணங்களையும் ஆராய்ச்சிகளையும் உள்ளடக்கிய திட்டங்களை கொண்ட அமெரிக்காவின் தலைமையில் இயங்கிவரும் Artemis Accords உடன்பாட்டில் இந்தியாவும் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.

8. மற்றுமொரு மிகப்பெரும் முன்னெடுப்பு நடவடிக்கையாக இந்திய பிரதமரின் இந்த அமெரிக்க பயணத்தில் பார்க்கப்படுவது, Micron Technology என்ற அமெரிக்க சிப் தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்தியாவில் தயாரிப்பு ஆலையை அமைக்க அழைப்பு விடுத்ததாகும், இது இந்திய சிப் உற்பத்தி தொழிலை ஊக்குவிக்கும். செமிகண்டக்டர் (குறைக்கடத்தி) துறை தற்போதய வாழ்வு நடைமுறையில் எலக்ட்ரானிக் முதல் ஆட்டோமொபைல் துறை அனைத்திலும் முக்கியப்பங்கு வகிப்பதால் இந்நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது.

9. நம் தினசரி வாழ்வில் குறைகடத்திகளின் பங்களிப்பானது கோவிட் தொற்று காலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தது, உலகளாவிய குறைக்கடத்தி பற்றாக்குறை அவற்றை பயன்படுத்தும் அனைத்து விதமான பொருட்களின் விலையையும் உயர்த்தியது. டிஜிட்டல் இந்தியாவின் பாதையை விரிவாக்கும் இந்திய அரசின் தொடர் முயற்சிகளில் குறைகடத்திகளின் பங்களிப்பும் மிக முக்கியமானது.

10. ஜனாதிபதி ஜோ பிடனின் அழைப்பை ஏற்று பிரதமர் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார், இந்த சந்திப்பானது குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. ஏனெனில் அமெரிக்கா தனது நெருங்கிய நட்பு நாடுகளை மட்டுமே அரசு சிறப்பு விருந்தினர் வருகை என்ற மதிப்பளித்து கவுரவிக்கும். எனவே இந்த அழைப்பானது இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் உறவினை மேலும் பலப்படுத்தி உள்ளதை சுட்டிக்காட்டுகிறது.

தொடர்புடைய பதிவுகள் :

பேர்லினில் வளர்ப்புப் பராமரிப்பில் இருக்கும் குழந்தை அரிஹாவை திருப்பி அனுப்புமாறு ஜேர்மனிக்கு இந்திய...
அமேசான் மழைக்காடுகளில் எண்ணெய் எடுக்க நிரந்தர தடை - இயற்கையை மதித்து வாக்களித்த ஈக்வடார் நாட்டு மக்க...
இந்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தடை, இதனால் உலக சந்தையில் உண்டாகப்போகும் பாதிப்புகள் - எல் நினோ ஏற்பட...
செயற்கை நுண்ணறிவு அலையில் வெற்றிகரமாகச் சவாரி செய்ய இந்தியா தயாராக உள்ளது என்கிறார் ஐபிஎம் சிஇஓ அரவி...
பருவமழையில் ஏற்படும் பகீர் மாற்றங்கள்! 
முதுகு மற்றும் கழுத்து வலிக்கு ஓபியாய்டுகள் தீர்வு அல்ல: சிட்னி பல்கலைக்கழக ஆய்வு முடிவு
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து பதவிநீக்கம் செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - சட்ட வல்...
சென்னையில் சுந்தர் பிச்சையின் பூர்வீக வீட்டை வாங்கிய தமிழ் நடிகர்
காவல்துறையில் புகார் அளிப்பது எப்படி?
இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க அரசு முடிவு.
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *