இந்தியாவின் ரஷ்யாவில் இருந்தான எண்ணெய் இறக்குமதி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது

சுருக்கம்:
கடந்த மே மாதம் ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியானது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்தியா ஒரு நாளைக்கு 1.96 மில்லியன் பீப்பாய்களை இறக்குமதி செய்துள்ளது.
ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு , அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை விட ரஷ்யாவில் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.
ஏன் இது முக்கியம் பெறுகிறது:
போர் தொடங்கி ஓராண்டிற்கு பின்னர், இந்தியா ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை ஓரளவிற்கு வாங்குவதில் இருந்து சீனாவுடன் இணைந்து மாஸ்கோவின் எண்ணெய்க்கு மிக முக்கியமான சந்தையாக மாறியுள்ளது. இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், G7 விலை உச்சவரம்பை பின்பற்றாமல், மலிவான கொள்வனவுகளை நாடுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்கு முன்னர் வடமேற்கு ஐரோப்பாவிற்கு சென்று வந்த ரஷ்ய யூரல்ஸ் எண்ணெய்யை அவை தம் கைக்குள் கொண்டு வந்தன.