fbpx
LOADING

Type to search

இந்தியா உலகம் வர்த்தகம்

ஆசிய பசிபிக் நாடுகளின் மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றது. S&P Global Ratings நிறுவனம் செய்தி

செய்தி சுருக்கம்:

GDP என்பது உலகம் முழுவதிலும் ஒரு தனிப்பட்ட நாட்டின் மொத்த உற்பத்தி பொருட்கள் மற்றும் முடிக்கப்பட்ட சேவைகளின்  மதிப்பை பொறுத்து வரையறை செய்யப்படுகிறது, நிதியாண்டு இறுதியில் நாடுகளின் வளர்ச்சியின் அளவும் சரிவின் அளவும் அந்நாட்டின் அதற்கு முந்தைய நிதியாண்டு உற்பத்தி மற்றும் சேவைகளின் தரவுகளை கொண்டு கணக்கிடப்படுகிறது.

ஆசிய பசிபிக் நாடுகளின் நடப்பு நிதியாண்டின் காலாண்டு நிதிநிலை அறிக்கையின் தரவுகளை கொண்டு கடன் மதிப்பீட்டு ஆய்வு நிறுவனம் (Credit Rating Agency) ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் பொருளாதார நிலை மிகவேகமாக உயர்ந்து முன்னேற்றத்தினை அடைந்து GDP வளர்ச்சி 6 சதவிகிதமாக இருக்கும் என்கின்றனர்.

சில்லறை விற்பனை (Retail) துறையில் நிகழும் பணவீக்க மாற்றங்களை கருத்தில் கொள்ளும்போது அந்த துறையின் விற்பனை மற்றும் கொள்முதல் அளவானது தற்போது இருக்கும் 6.7 புள்ளிகளில் இருந்து இன்னும் 5 சதவிகித அளவிற்கு இந்த நிதியாண்டு முடிவில் உயரலாம் என எதிர் பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆண்டின் பருவ மழைகளும் கால சூழ்நிலைகளும் உகந்ததாக இருக்கும் பட்சத்தில் இந்த உயர்வு சாத்தியம் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

S&P Global Ratings நிறுவன அறிக்கையின் திங்கட்கிழமை நிலவரப்படி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் GDP உயர்வு விகிதம் 6 சதவிகிதமாக இருந்தது. அதன்படி ஆசிய பசிபிக் நாடுகளில் இந்தியா மிக வேகமான முறையில் வளரும் பொருளாதார சந்தையினை கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரும் செய்தி நிறுவனமான ‘The Press Trust of India Ltd’ வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்ச் மாதம் தாங்கள் கணித்த அதே அளவில் தான் இந்த நிதியாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி இருக்குமென்றும் அதில் மாற்றங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மார்ச் மாத கணிப்பில் இந்தியாவின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு இருக்கலாம் என கூறியிருந்தனர்.

மேலும் S&P Global Ratings நிறுவனத்தின் தெய்திகுறிப்பில் Louis Kuijs என்ற பொருளாதார நிபுணர் இந்தியாவின் PTI வெளியிட்ட கீழ்காணும் அறிக்கையை சுட்டிக்காட்டி இருந்தார்.

மத்திய தர உற்பத்தி மற்றும் வியாபார நிறுவனங்களின் வளர்ச்சி விகிதமானது சென்ற நிதியாண்டில் இருந்த அளவிலேயே நீடிக்கும், மேலும் ஆசியா நாடுகளின் பெருகிவரும் நுகர்வு தன்மையும் பலவாறான சந்தை படுத்துதல்களும் மிக வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதார உயர்வினை சுட்டிக்காட்டுகிறது. 2026ம் நிதியாண்டு முடிவு வரை உலக பொருளாதார சந்தைகளில் மிக வேகமாக முன்னேறும் பொருளாதார வளர்ச்சியை கொண்டதாக ஆசிய பொருளாதாரம் இருக்கப் போகின்றது.

பின்னணி:

இந்தியாவும், வியட்நாமும், பிலிப்பைன்சும் ஆசிய பசிபிக் நாடுகளின் பட்டியலில் மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள் என GDP மதிப்பீட்டு நிறுவன அறிக்கை தகவல்.

S&P Ratings நிறுவன அறிக்கையின் படி சில்லறை விற்பனைத் துறையில் தற்போதுள்ள 6.7 சதவிகித பொருளாதார உயர்ச்சி இந்த நிதியாண்டில் எட்டப்படும் என்கிற கணிப்பை மாற்றி இந்தியாவின் பருவகால மழைகள் சரியாக பெய்யும் பட்சத்தில் இந்த வளர்ச்சி விகிதம் இன்னும் 5 சதவிகிதம் அதிகமாக உயர வாய்ப்புள்ளதாக கணித்துள்ளனர். இந்நிறுவனத்தின் மற்றொரு அறிக்கையின் படி RBI அடுத்த நிதியாண்டின் ஆரம்ப மாதங்களில் தான் கடன்களின் மீதான வட்டி விகிதங்களை குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளதாக தெரிகிறது.

இந்தியாவின் பருவமழைகள் இந்த ஆண்டில் எதிர்பார்த்த அளவு இருந்து விட்டால் நுகர்வோர் பணவீக்க மதிப்பானது 6.7 இல் இருந்து 5 சதம் உயர வாய்ப்புள்ளது, அதன் காரணமாக 2024 நிதியாண்டில் இந்திய GDP வளர்ச்சியில் ஒரு மகத்தான இலக்கை அடையமுடியும்.

கச்சா மூலப்பொருட்கள் விலையும் அதற்கான மாற்று மூலப்பொருள்கள் பயன்படுத்துவதன் மூலம் கச்சா எண்ணெய் பயன்பாட்டை குறைக்க அனைத்து நாடுகளும் மாற்று வழிகளை பின்பற்றுவதாலும் அது பெட்ரோலியத்துறை மற்றும் கச்சா எண்ணெயில் உருவாகும் உற்பத்தி பொருட்களின் சந்தையிலும் பணவீக்கத்தின் மதிப்பு சரியும் என்றும் S&P Ratings நிறுவனம் கூறியுள்ளது.

அவ்வறிக்கையில் Kuijs மேலும் தெரிவிக்கும் தகவலானது ” எங்கள் நிறுவன மதிப்பீடு ஆய்வின் படி விலைவாசி உயர்வும், பணவீக்க விகிதமும் மிகுந்த வேகத்தில் உச்சத்தை நோக்கி நகர்கின்றன, இச்சமயத்தில் நாங்கள் RBI 2024 ம் ஆண்டிற்கு முன்னதாகவே கடன் மீதான வட்டி விகிதங்களில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், RBI இதை தாமதப்படுத்தி அறிவிக்குமானால் நுகர்வோர் பணவீக்கத்தின் GDP வளர்ச்சியானது RBI கணித்து வைத்துள்ள 4 சதவிகிதமாகவே இந்த நிதியாண்டு இறுதியில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய பதிவுகள் :

பகவத் கீதையை அவமதிக்கும் பாலியல் காட்சியை நீக்குக - ‘ஓப்பன்ஹைமர்’ பட இயக்குநருக்கு இந்தியா கோரிக்கை!
ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதே புத்திசாலித்தனம் என்கிறார் ஓய்வு பெற்ற அமெரிக்க ராணுவ...
எப்படிப்பட்டவர்கள் தங்களுக்குள் ஈர்க்கப்படுகிறார்கள்? புதிய டேட்டிங் ஆப்கள் சொல்வதென்ன?!
செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து காண்பித்து புது சாதனையை படைத்த நாசா.
சோஷியல் மீடியா மயக்கத்தில் இந்தியா - முளைக்கும் திடீர் பிரபலங்கள்
பச்சை நிறமாக மாறிவரும் பெருங்கடல்கள்! நிலமல்லவா பசுமையாக இருக்க வேண்டும்…!! என்ன நடக்கிறது?
இந்தியாவின் ஆபாசத் தடைச்சட்டங்களும் பெண்கள் மீதான சமூகத்தின் கட்டுப்பாடுகளும்…
உக்ரைனுக்கு நேடோ உறுப்பினர் பதவி மற்றும் ரஷ்யாவிற்கு நெருக்கடி - லிதுவேனியா மாநாட்டில் என்னென்ன எதிர...
திசை மாற்றும் சமூக வலைத்தளங்கள்
ஒர்க்னி இங்கிலாந்தை விட்டு வெளியேறி நார்வேயுடன் இணையப் போகிறதா? காரணம் என்ன?
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *