இந்திய பிரதமரின் எகிப்து பயணம் : பரஸ்பர பலன்கள் என்னென்ன?

செய்தி சுருக்கம்:
1997 க்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து பயணிப்பது அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் கைரோவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசியை சந்தித்தார்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
எகிப்து நாடு உண்மையில் அதன் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் ஒரு முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. உலக நாடுகளில் இருந்து அத்தியாவசியமான முதலீடுகளை ஈர்க்கும் கட்டாயத்தில் எகிப்து தற்போது உள்ளது. செப்டம்பர் மாதம் புது தில்லியில் நடக்க உள்ள ஜி 20 மாநாட்டிற்கு முன்பாக இந்திய பிரதமர் தங்கள் நாட்டிற்கு வருகை தந்ததை எகிப்து முக்கியமாக கருதுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை உலக அளவில் வீழ்ந்து வரும் வட்டி விகிதங்கள், பரவலான பணவீக்கம், அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளால் ஏற்பட்டிருக்கும் இடைவெளியை பூர்த்தி செய்தல் ஆகியவை இந்த பயணத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
உலக அரசியலைப் பொறுத்தவரை இந்தியா தெற்காசியாவின் குரலாக இருப்பதன் ஒரு பகுதியாக அரபுலகில் எகிப்தின் ஆதரவையும் ஆப்பிரிக்காவில் இந்தியாவின் கால்கள் ஊண்றப்படுவதையும் உறுதி செய்கிறது.
நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் எகிப்து ஜனாதிபதி உடனான பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்தது. நாங்கள் இருநாட்டு உறவுகளின் பொருளாதார மற்றும் கலாச்சார தொடர்புகளை மேலும் அதிகரிக்க ஒப்புக்கொண்டோம் என்று கூறியுள்ளார்.
ஜி 20 தலைவர் பதவிக்கு பார்வையாளராக எகிப்தை இந்தியா அழைத்திருப்பது இருநாட்டு உறவின் முக்கியத்துவத்தை பற்றி பேசுகிறது. எதிர்காலத்தில் இவ்விரு நாடுகளும் பல தலங்களில் ஒன்றிணைந்து பணியாற்ற வாய்ப்புகள் உள்ளது.
பின்னணி:
உண்மையில் எகிப்தும் இந்தியாவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வர்த்தக உறவு கொண்டவையாகும். 1950 களில் நேருவும் நாசரும் அணிசராக இயக்கத்தை உருவாக்க ஒன்றாக இணைந்து பணியாற்றினார். 1970 மற்றும் 80களில் இரு நாடுகளும் தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கின.
கடந்த ஆண்டு வரை எகிப்தின் ஐந்தாவது பெரிய வர்த்தக பங்களிப்பு நாடாக இந்தியா திகழ்ந்துள்ளது. ஜனவரி மாதம் எகிப்து ஜனாதிபதி டெல்லிக்கு விஜயம் செய்திருந்தார்.
பொருளாதார பயன்கள்
இரு நாடுகளும் பல துறைகளில் ஒன்று இணைந்து செயல்பட போவதால் இந்திய பிரதமரின் இந்த பயணம் பல பொருளாதார நன்மைகளை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.
எகிப்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டு தனியார் முதலீடுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பாரதப் பிரதமரின் வருகை புதிய முதலீட்டை கொண்டு வந்து எகிப்தின் ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் என்பது அதன் எதிர்பார்ப்பு. வரவிருக்கும் நிதியாண்டில் அதன் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை EGP 848.8 பில்லியன் ($27.4 பில்லியன்) ஐ எட்டும் என்று எகிப்து எதிர்பார்க்கிறது.எகிப்திய அரசு நிறுவனமான கேப்மாஸின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவிற்கான எகிப்தின் ஏற்றுமதி கடந்த ஆண்டு 3.5 பில்லியன் டாலரிலிருந்து 1.7 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது . இந்தியாவுடன் வலுவான வர்த்தகத்திற்கு திரும்புவது எகிப்தின் பற்றாக்குறையை குறைக்கும். பொருளாதார ரீதியாக, இரு நாடுகளும் இருதரப்பு உறவுகளை $7.26 பில்லியனில் இருந்து $12 பில்லியனாக அதிகரிக்க முயல்கின்றன.
பாதுகாப்புத் துறையை பொறுத்த வரை இந்தியா எகிப்தை அதன் இலக்கு சந்தையாக பார்க்கிறது. பாதுகாப்பு துறையில் இந்தியா தற்போது அசுர வளர்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
உணவு உற்பத்தி மற்றும் இறக்குமதியை பொருத்தவரை ரஷ்யா உக்கரின் மீது போர் தொடுத்ததால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி எகிப்தால் நேர் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பிரதமரும் எகிப்து ஜனாதிபதியும் உணவு பாதுகாப்பு மற்றும் விவசாய பொருட்கள் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இனிவரும் நாட்களில் இந்திய விலை பொருட்கள் எகிப்து ஒரு நல்ல சந்தையாக இருக்கும்.
சூயஸ் கால்வாயும் இந்தியாவும்
சூயஸ் கால்வாயை தன்வசம் வைத்திருக்கும் எகிப்து ஐரோப்பாவுடன் சிறந்த வர்த்தகம் செய்ய திட்டமிடும் இந்தியாவிற்கு மிகப்பெரிய உதவிகளை செய்ய முடியும்.
ஐரோப்பிய சந்தைகள் உடனான உறவை மேம்படுத்த சூயஸ் கால்வாய் வழியாக அதன் வழிகளை பயன்படுத்தவும் எகிப்துடன் இணைந்து பணியாற்றவும் இந்தியா வாய்ப்பை எதிர்நோக்கி இருக்கிறது.
உலக வர்த்தகத்தில் பன்னிரண்டு சதவீதத்திற்கும் அதிகமானவை சூயஸ் கால்வாய் வழியாக நடக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அரசியல் நன்மைகள்
டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜி 20 கோட்டங்களுக்கு முன்னதாக இந்தியா தனது நிலைப்பாட்டை உலக நாடுகளில் உறுதி செய்து வருகிறது. காலநிலை மாற்றம், கோவிட்-19 தொற்றுநோய், பயங்கரவாதம் மற்றும் நிதி நெருக்கடிகள் போன்ற சமகால சவால்களை தெற்காசிய நாடுகள் சிறப்பாக சமாளிக்க தற்போது இருக்கும் அரசியலமைப்பை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
அரசியலைப் பொறுத்தவரை இந்தியா மட்டுமே தெற்காசியாவின் குரலாக இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அதன் ஒரு பகுதியாக அரபு லீக்கில் எகிப்தின் ராஜதந்திர நிலைப்பாட்டையும், ஆப்பிரிக்காவில் அதன் நிலைப்பாட்டையும் இந்தியா பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது.
BRICS மற்றும் டாலரின் மேலாதிக்கம்
இந்தியா பிரிக்ஸ் உறுப்பினருடன் சேர்ந்து சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு மாற்ற நாணயம் பற்றி விவாதித்து சர்வதேச வர்த்தகத்தில் டாலரின் மேலாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்று வருகிறது.
அமைப்பில் சேர எகிப்து முயன்ற வரும் நிலையில் டாலருக்கு எதிரான நடவடிக்கைகளில் எகிப்து முழு ஒத்துழைப்பு வழங்கும் என தெரிகிறது.
பல நூறு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்திய எகிப்து உறவில் புதிய அத்தியாயமாக பாரத பிரதமரின் எகிப்து பயணம் விளங்குகிறது. பலவிதமான பொருளாதார மற்றும் அரசியல் ஆதாயங்களை இப்பயணம் இவ்விரு நாடுகளுக்கும் வழங்கும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.