இந்தியா-ஜெர்மனி இடையே 5.2 பில்லியன் டாலர் மதிப்பில் ஆறு நீர்மூழ்கி கப்பல்கள் உருவாக்க ஒப்பந்தம்.

செய்தி சுருக்கம்:
இந்திய கடற்படைக்கு ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் $5.2 பில்லியன் திட்டத்திற்காக தைசென்குரூப் ஏஜியின் கடல்சார் பிரிவும் இந்தியாவின் மஸகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனமும் கூட்டாக ஏலம் விடக்கூடும் என்று அறிய வந்துள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவிடன் கூட்டாக நீர்மூழ்கி கப்பல்களை உற்பத்தி செய்ய கீலை(Kiel, Germany) தளமாகக் கொண்ட இந்த பாதுகாப்பு உற்பத்தி நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை. இப்போது உக்ரைன் போர் இரண்டாவது ஆண்டை அடைந்த நிலையில், மேற்கு நாடுகளும், குறிப்பாக ஜேர்மனியும், பெய்ஜிங்கின் வளர்ந்து வரும் இராஜதந்திர மற்றும் இராணுவ உறுதிப்பாட்டிற்கு எதிராக இந்தியா ஒரு பாதுகாப்பு அரணாக மாற வேண்டும் என்று கருதுகின்றன.
பின்னணி:
இந்த நீர்மூழ்கிக் கப்பல்களைப் பொறுத்தவரை, டீசல் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க வெளினாட்டு பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய மஸகான் கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ ஆகியவற்றை இந்தியா அடையாளம் கண்டுள்ளது. நீர்மூழ்கிக் கப்பல்கள் நீண்ட நேரம் நீருக்கடியில் இருக்க உதவும் தொழில்நுட்பத்தை உலகில் இரண்டு நிறுவனங்களே அறிந்துள்ளன். இதில் Thyssencrupp Marine Systems ஒன்றாகும். இது ஒரு கூட்டு முயற்சிக்கான முக்கிய இலக்காக இருந்தது.