இந்தியாவின் பொருளாதாரக் கணிப்பு இங்க இருக்கு, எதிர்காலம் எப்படி இருக்கோ?

செய்தி சுருக்கம்:
பொருளாதார நிலைப்பாட்டில் அசுர வளர்ச்சி அடைய இந்தியா தயாராக உள்ளது என இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
கொரோனாவிற்குப் பிறகு உலகப் பொருளாதாரம் ஸ்தம்பித்தது. வளரும் நாடுகளைக் காட்டிலும் வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் கேள்விக்குறியானது. ஏற்கனவே, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற திட்டங்களால் சிறு, குறு வணிகங்கள் பலத்த அடிவாங்கியிருந்த நிலையில், இந்தியாவின் நிலமை மிக மோசமாகப் போனது. ஆனால் தற்போது அது நல்ல நிலையில் வளர்ச்சி அடைந்து வருவதாக அனந்த நாகேஸ்வரன் கூறியுள்ளார். இவர் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இந்தியாவின் பதினெட்டாவது தலைமை பொருளாதார ஆலோசகராவார்.
பின்னணி:
பொருளாதாரத்தில், வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளின் மத்தியில் போட்டிகள் அதிகமாக இருக்கும். இந்நிலையில், இந்தியாவின் வளர்ச்சியானது உலக நாடுகளின் மத்தியில் பேசுபொருளாகவே இருந்து வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் ‘பிக் எக்கானமி’ எனும் பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிவிட்டு ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியது இந்தியா. தற்போது அது மூன்றாம் இடத்திற்கு முன்னேறவும் வாய்ப்புள்ளது என்று தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதார நுண்ணறிவை பின்வருமாறு கூறுகிறார்.
கச்சா எண்ணெயின் விலை இறக்கத்தாலும் கடன் தேவைகளின் நிலை அதிகரித்திருப்பதாலும், வரும் 2023 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.5% ஆக உயரலாம். பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் தரும் குறியீடுகள் நேர்மறையாக இருப்பதாலும், கட்டிட வேலைகளின் பெருகத்தாலும் உலகப் பொருளாதார மந்த நிலையிலிருந்தும், வானிலை தொடர்பான அபாய நிலையில் இருந்தும் இந்தியா தன்னை தானே தற்காத்துக் கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.
முடிவடைந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 7% அதிகரித்துள்ளாராக தரவுகள் தெரிவிக்கப்படுகிறது. கொரோனாவிற்குப் பிறகு பொருளாதாரம் சூடு பிடித்து விட்டாலும், அதிக கடன் சுமையானது வளர்ச்சிக்கு ஒரு வேகத் தடையாகவே உள்ளது.
ஏப்ரல் மாதம் வெளியான இந்தியப் பொருளாதார கணக்கெடுப்பில், இந்தியாவின் வளர்ச்சிக்கான அடிப்படைப் புள்ளிகளை 6.5 சதவீதமாக நிர்ணயித்து இருந்தோம். ஏனென்றால், சில பல இடர்பாடுகளால் வளர்ச்சியானது 6.5% க்கு குறைவாக செல்லலாமே தவிர, அதற்கு மேல் செல்வதற்கு வாய்ப்பில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி பொருளாதார வளர்ச்சி துல்லியமாக 6.5% அளவிலேயே இருந்தது.
பருவநிலைக் கால அபாயங்களையும், ஜியோ பொலிட்டிக்கல் என்னும் உலக அரசியல் தடைகளையும் கடந்து தற்போது இந்தியாவின் வளர்ச்சியானது சீரான ‘ஆட்டோ பைலட் மோடில்’ செல்கிறது. நீங்கள் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் பொருளாதாரம் வளர்ந்து கொண்டே போகும் நிலை நிலவுகிறது.
பொருளாதாரக் கண்காணிப்பு நிறுவனங்கள் வெளியிட்ட புள்ளியில் ஆய்வறிக்கையின் படி, இந்தியாவின் வளர்ச்சி கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து வேகம் எடுக்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது.
சேவைத் துறை வளர்ச்சியின் பெருக்கத்தாலும், அதீத வரி வசூல்களாலும் இது சாத்தியப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு தான் இந்தியாவின் பொருளாதாரம் ஐந்தாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு எகிறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நாட்டின் வளர்ச்சி எப்போது அதிகரிக்கும் என்றால்? அந்நாட்டில் இறக்குமதி குறைவாகவும், ஏற்றுமதி அதிகமாகவும் இருக்க வேண்டும். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தியாவில் ஏற்றுமதியும் இறக்குமதியும் அதிக அளவில் குறைந்து விட்டது என்றும், ஆனால் இதுவும் வரும் காலங்களில் வேகம் எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்திய பொருளாதார ஆய்வறிக்கையின்படி, கிடைத்திருக்கும் தரவுகள் அனைத்தும் நேர்மறையான முடிவுகளை நோக்கி செல்வதாகவே தெரிகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் ஏற்றுமதிகள் குறைந்துள்ளது. கச்சா எண்ணெயின் விலை குறைவால் இந்தியாவில் இறக்குமதியும் குறைந்துள்ளது.
பணவீக்கமானது(Inflation) கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு 4.7% சதவீதமாக குறைந்துள்ளது. ஆர்பிஐயின் பரிந்துரையின்படி பணவீக்கமானது நான்கு சதவீதம் வரை தான் இருக்க வேண்டும். 2022 ஏப்ரல் மாதத்தில் 7.7% ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில் இது ஆர்பிஐ-யின் நிர்ணயத்திற்கு அருகே வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இந்த வருடத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பயிர்களின் அறுவடைக்குப் பிறகே உண்மை நிலை தெரிய வரும்.
இந்த நிலையானது தொடர்ந்தால், பணவீக்கம் நிச்சயம் நான்கு சதவீதத்திற்கு வந்துவிடும். ஆனால் அதற்கு கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டே வர வேண்டும் என பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய பதிவுகள் :
மாகாணத் தேர்தல்களை நடத்த விக்கிரமசிங்கேவிடம் மோடி வலியுறுத்த வேண்டும் - இலங்கை தமிழ்ச் சமூகம் மோடியி...
அரிசியை தொடர்ந்து சர்க்கரை ஏற்றுமதிக்கும் தடைவிதிக்கும் இந்தியா - கலக்கத்தில் உலக உணவு சந்தை.
கல்லீரல் பாதிப்புக்கு வழங்கப்படும் மருந்தில் போலிகள் கலந்துள்ளன - இந்தியா மற்றும் துருக்கியில் அதிகள...
கிழக்கு இந்தியாவில் ரயில் தடம் புரண்டதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது
$1.6 பில்லியன் பேட்டரி ஆலை ஒப்பந்தம் : தன் வசமாக்கிய இந்தியாவின் டாடா குழுமம்
மணிப்பூர்: பெண்களின் மீதான கொடூரமான பாலியல் தாக்குதல் நிகழ்ந்து இரண்டு மாதங்களுக்கு பின்னர் அந்த வீட...
நாடு முழுவதும் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளில் 76% நோட்டுகள் வங்கிகளில் திரும்ப ஒப்பட...
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் சீராகி வருகின்றன - ஜூலை மாதத்தில் அதன் பணவீக்கம் ஒற்றை இலக்கமாக கு...
இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பாக் ஜலசந்தியின் குறுக்கே பாலம் அமைப்பதால் ஏற்படும் பலன்கள்