கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர இலங்கை அரசுக்கு உலகவங்கி 700 மில்லியன் டாலர்கள் நிதியுதவி.

செய்தி சுருக்கம்:
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF – International Monetary Funding) கடந்த மார்ச் மாதம் செய்துகொண்ட நெருக்கடி நிலை ஒப்பந்தத்தின் படி, கடும் பொருளாதார பின்னடைவை சந்தித்திருக்கும் இலங்கை அரசின் நிதி நிலமையை சீர் படுத்தவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு சிறப்பு திட்டங்களை உருவாக்கவும் 700 மில்லியன் டாலர்களை உலகவங்கி கடந்த வியாழனன்று (29-06-2023) இலங்கை அரசுக்கு ஒதுக்கியுள்ளது.
நிதி நெருக்கடியால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அரசின் நலனை கருத்தில் கொண்டு, இந்த நிதியில் 500 மில்லியன் டாலர்களை பயன்படுத்தி நாட்டின் நிதி நிலமையை உடனடியாக சீர்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மீதமுள்ள 200 மில்லியன் டாலர்களை கொண்டு நாட்டு மக்களின் நலன் சார்ந்த விஷயங்களை கவனிக்கவும் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
உலகவங்கியின் இலங்கை நாட்டிற்கான நிர்வாக இயக்குநர் Faris Hadad Zervos அவர்கள் இந்த நிதி ஒதுக்கீட்டின் விவரங்களை தெரிவிக்கும் போது கூறியதாவது, இலங்கையின் தற்போதைய நெருக்கடியை சரிசெய்ய முனைந்துள்ள உலகவங்கியின் குழுவானது இந்த ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை பல கட்டங்களாக பிரித்து பயன்படுத்த திட்டமிட்டுள்ளது, இலங்கையின் தடுமாறும் பொருளாதார நிலையை விரைவில் சீர்படுத்தும் நோக்கத்தோடும், இடிந்த பழுதடைந்த அரசு கட்டிடங்களையும் குடியிருப்புகளையும் சரி செய்யவும், ஏழை மக்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சிறந்த பாதுகாப்பினை அளிக்கவும் பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
இந்த நிதியானது சரியான முறையில் பயன்படுத்தப்படும் போது இந்த வகையான சீர்திருத்தங்கள் மூலமாக நாட்டினை மீண்டும் அதனுடைய சிறந்த பாதையில் பயணிக்க செய்ய முடியும் என்றாகிறது, இதன் பிறகான முன்னேற்றமானது மீள் தன்மையுடன் கால சூழல்களை கருத்தில்கொண்டு நாட்டினை மேலும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று கூறினார்.
1948 இல் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் வாங்கியது முதல் இலங்கை சந்தித்த மாபெரும் பொருளாதார பின்னடைவு இதுதான், இந்த பொருளாதார சிக்கல்களை சரி செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த இலங்கையின் அந்நிய செலாவணி மதிப்பு மிகவும் குறைந்து போனதால் வெளிநாடுகளிடமிருந்து வாங்கியிருந்த கடனுக்கான தவணை தொகையை கட்டமுடியாமல் சென்ற ஆண்டில் முதல் முறையாக தடுமாறி நின்றது.
கடந்த மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியம் (MIF) இலங்கைக்கு ஜாமீனாக 3 பில்லியன் டாலர் அளவிலான வெளிநாட்டு கடன்களுக்கு பிணையம் வழங்கியது. இந்த பிணையத்தை விடுவிக்க இலங்கை அரசானது உலகவங்கி, Asian Development Bank மற்றும் பலதரப்பட்ட நிதி நிறுவனங்களிடம் இருந்து சுமார் 4 பில்லியன் டாலர்களை கூடுதல் நிதியுதவியாக எதிர்பார்க்கிறது.
இந்த வாரங்களில் இலங்கை அரசானது தனது உள்நாட்டு கடன்களை மறுசீராய்வு செய்து வெளியிடும் என்று எதிர்பார்க்க படுகிறது. இதனால் தன் நாட்டின் பங்கு பத்திரங்களின் மீதான கடன் மற்றும் இந்தியா சீனா ஜப்பான் போன்ற நாடுகளுடன் கொண்டிருந்த இருதரப்பு கடன் ஒப்பந்தங்களில் இலங்கை சில மாற்றங்களை செய்ய முடியும் என எதிர்பார்க்க படுகிறது.
பின்னணி:
2022 இன் முற்பகுதியில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியின் காரணமாக அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. பொருளாதாரத்திலும், எரிபொருள் மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத அளவு பெரும் பின்னடைவை சந்தித்தது. இலங்கை அரசால் வெளிநாடுகளில் இருந்து எந்தவொரு அடிப்படை தேவைக்கான பொருட்களையும் வாங்க முடியாதவாறு நிலைமை மிகவும் மோசமடைந்தது. 2022 இல் முதன் முதலாக வெளிநாட்டுக் கடன்களின் தவணையை கட்ட முடியாமல் தடுமாறியது.
இம்மாதிரியான பாதிப்புகள் கடன் கொடுப்பவர்களுக்கு அந்நாட்டின் மீதான நம்பிக்கையை சிதைத்தது. 2022 இல் வணிக ரீதியான நிதி பற்றாக்குறை உயர்ந்து பொருளாதார கையிருப்பு 5.2 பில்லியன் டாலர்கள் இருந்தது, அதுவே 2021ம் ஆண்டு நிலவரப்படி 8.1 பில்லியன் டாலர்களாகஇருந்தது. 2022 அறிக்கையின்படி அந்நாட்டின் ஏற்றுமதி (முக்கியமாக துணி வகைகள்) உயர்ந்து இறக்குமதி குறைந்து இம்மாதிரியான வணிக நிர்வாகத்தில் பற்றாக்குறையை உருவாக்கியது. சுற்றுலா பயணிகளின் வருகையும் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க முறையில் குறைந்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இத்தகைய நெருக்கடிகளில் இருந்து அனைத்து வகையிலும் மீண்டு வர உலக வங்கி தருகின்ற இந்த நிதியுதவியும் மேலும் சில உதவிகளும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாமும் இணைந்து இலங்கை அரசின் நலத்திற்காகவும் நெருக்கடிகளில் இருந்து விரைவில் மீண்டு வரவும் பிரார்த்திப்போம்.