சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவை பதவி விலகுமாறு பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்கள் கோரிக்கை

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்கள் கடந்த ஜூன் 08 ஆம் திகதி தமது தொடர் போராட்டத்தின் 2300th ஆவது நாளைக் குறிக்கும் வகையில் பின்வரும் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.
“காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளைக் கண்டுபிடிக்கவும், இலங்கையில் சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலையில் இருந்து அனைத்து தமிழர்களையும் காப்பாற்றும் வகையில், தமிழ் இறையாண்மையை அடைய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைக் கோரவும் நாம் தொடர்ந்து போராடும் போராட்டத்தின் 2300வது நாள் இன்றாகும்,
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவின் கீழ், இந்த அமைப்பு இலங்கைக்கு வழங்கும் நிதி, தமிழர்களுக்கு எதிரான இடைவிடாத ஆக்கிரமிப்புக்கும் ஒடுக்குமுறைக்கும் சேவை செய்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பின் பின்னர் இலங்கை இராணுவமும் பௌத்த பிக்குகளும் தமிழர்களிடம் இருந்து பலவந்தமாகவும் சட்டவிரோதமாகவும் காணிகளை அபகரித்து பௌத்த சிங்கள மக்கள் வாழாத தமிழர் தாயகம் முழுவதும் மகாசங்க சிங்கள பௌத்த சின்னங்களை அமைத்து .
தமிழர்களின் சுதந்திரத்தை அழிக்கவும், தமிழர்களின் இருப்பை அவர்களது சொந்த மண்ணில் இருந்து அழிக்கவும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவி வருகிறது என்பதே யதார்த்தம்.
எனவே சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.