உலகில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை உயர்வது நின்றுள்ளது, ஆனாலும் கோவிட் காலத்திற்கு முந்தைய எண்ணிக்கையை ஒப்பிட்டால் தற்போது உள்ளது மிக அதிகம் – அமெரிக்காவின் உணவு, விவசாயம் மற்றும் மக்கள் நலன்சார் அமைப்புகள் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர்.

செய்தி சுருக்கம்:
உணவில்லாமல் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை கடந்த ஏழு வருடங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இந்த வருடம் மேற்கொண்டு உயராமல் சென்ற ஆண்டின் எண்ணிக்கையிலேயே இருந்து வருகிறது, ஆனாலும் இந்த எண்ணிக்கையானது கோவிட் ஊரடங்கு காலத்திற்கு முந்தைய எண்ணிக்கையை விட அதிகமாகவே உள்ளது. 2030 இல் உணவும் ஊட்டச்சத்தும் இல்லாமல் பசியோடு இருப்பவர்கள் யாருமே இல்லை என்கிற உயரிய இலக்கோடு பசிக்கொடுமையை அகற்ற போராடி வருவதாக WHO உட்பட அமெரிக்காவின் ஐந்து உலகளாவிய நிறுவனங்கள் கடந்த புதன் கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு நிலவரப்படி 691 மில்லியன் முதல் 783 மில்லியன் வரையிலான மக்கள் பசியின் கொடுமையில் இருக்கின்றதாக தெரிய வருகின்றது. மேற்கூறிய ஐந்து நிறுவனங்களும் தாங்கள் சேகரித்த தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களை கொண்டு சராசரியாக 735 மில்லியன் மக்கள் உலகம் முழுவதிலும் போதிய உணவு கிடைக்காமல் பசியால் துன்பப்படுகின்றனர் என்று கூறுகின்றனர்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
பல நாட்கள் போதுமான உணவு இன்றி பசிக்கொடுமையால் வாடும் மக்களின் எண்ணிக்கை கோவிட் தொற்று காலத்திற்கு முந்தைய 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி உலக மக்கள் தொகையில் 7.9% இருந்தது, அது தற்போதைய கணக்கெடுப்பின் படி 2022 இல் 9.2% ஆக உயர்ந்துள்ளது. 2023 இல் மொத்த மக்கள் தொகையில் அதே 9.2 சதவிகித மக்கள் இன்னும் போதிய உணவும் ஊட்டச்சத்தும் இல்லாமல் பசியோடு தினம் தினம் வாழ்வை ஓட்டிக்கொடுள்ளனர்.
அமெரிக்காவின் State of Food Security and Nutrition அமைப்பு உலகம் முழுவதிலும் எடுத்த சர்வேக்களின் இறுதி அறிக்கையின் படி, வருடா வருடம் உயர்ந்து கொண்டிருந்த பசி கொண்டோரின் எண்ணிக்கை உயர்வடைவது நின்று விட்டது, எனினும் 2021 – 2022 இடப்பட்ட காலங்களில் மட்டும் 3.8 மில்லியன் மக்கள் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர், உலகம் முழுவதும் இந்த பசிக்கொடுமை இன்னமும் தீராமல் தான் உள்ளது.
மேலும் அவ்வமைப்பு “இந்த எண்ணிக்கைகள் உயர்வது நின்று போனது என்பது மனதிற்கு ஆறுதல் அளிக்கும் விஷயமல்ல, இன்னமும் ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் கரீபியன் நாடுகளில் உள்ள மக்களில் போதிய உணவு இல்லாமல் பசியால் வாடும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து இந்த வருடமும் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது” என்று எச்சரிக்கை செய்கிறது. மேலும் அவர்கள் கூற்றுப்படி “உலக மக்கள் இன்னும் கோவிட் தொற்று கால ஊரடங்குகளால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து முழுதாக மீண்டு வரவில்லை என்பதற்கு இந்த பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை உயர்வு ஒரு சாட்சியாக நிற்கிறது. தற்போது உக்ரைனில் நிகழ்ந்த போரினால் ஏற்பட்ட பின்விளைவுகள் பலருக்கு வாழ்கையை போராட்டமாக மாற்றியுள்ளது, ஏனெனில் அந்த போரினால் விளைந்த உடனடி விளைவாக அத்தியாவசிய தேவைகளான உணவு மற்றும் எரிபொருள் சந்தைகளில் விலை உயர்வு என்பது கோவிட் காலத்திற்கு பிறகு உணவு பற்றாக்குறைக்கு மற்றொரு காரணமாக உக்ரைன் ரஷ்ய போர் பார்க்கப்படுகிறது.
2019 க்கு பிறகு நிகழ்ந்த விலைவாசி மாற்றங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியும் புதிதாக 122 மில்லியன் மக்களை பசிக்கொடுமை எனும் சிறையில் தள்ளியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார நிலவரப்படி நகர்ப்புறங்களில் இல்லாமல் வெளியே கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் வசிக்கும் மக்கள் இதனால் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர் என்கின்றனர்.
ஊரடங்கு காலத்திற்கு பிறகு 2022 ஆண்டில் அடைந்த பொருளாதார முன்னேற்றங்கள் இந்த நிலை சற்றே மாறுவதற்கு உதவி செய்துள்ளது, மேலும் உக்ரைனில் நிகழ்ந்த போரின் காரணமாக உலக சந்தைகளில் மிகவும் விலை ஏறியுள்ள உணவு மற்றும் எரிபொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வராமல் அல்லது மாற்று வழிகளை கண்டறியாமல் விட்டுவிட்டால் நிலைமை மிகவும் மோசம் ஆகும் என்று அறிக்கை தெளிவாக வருங்கால அபாயத்தை சுட்டி காட்டுகிறது.
UN Food and Agricultural Organization,
The International Fund for Agricultural Development,
UNICEF,
The World Food Programme மற்றும்
World Health Organization.
ஆகிய உலக மக்கள் நலன் சார்ந்த இந்த ஐந்து அமைப்புகளும் பல்வேறு நாடுகளில் தகவல்களை திரட்டி வருடா வருடம் உணவில்லாமல் பசியால் வாடும் மக்களின் கணக்கை எடுத்து வருகிறது.
இந்த வருடத்தின் கணக்கெடுப்பில் அவர்களின் எண்ணிக்கை சென்ற வருட அளவிலேயே இருந்தது, ஆனாலும் கோவிட் காலத்திற்கு முந்தைய நிலவரத்தை பார்க்கும் போது இப்போது சற்று அதிகமாகவே பசியால் வாடுவோர் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது என்கின்றனர். மேலும், பசியில்லா உலகம் என்ற இலக்கை நோக்கிய நம் பயணம் அதன் சிறந்த முடிவினை எட்ட இன்னும் பலதூரம் கடக்க வேண்டியுள்ளது என்றனர். ‘நிலையானதொரு வளர்ச்சி – இலக்கு 2’ என்ற பெயரில் அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்நிறுவனங்கள் முன்வைக்கும் மிக முக்கிய திட்டங்களான உணவு பொருட்களின் உற்பத்தியை இருமடங்கு அதிகரிப்பதன் மூலம் நாம் நம் இலக்கை அடைவதற்கான முதல் முயற்சியை துவங்கலாம், அதை தவறவிட்டால் 2030 இல் பசியின் கொடுமையை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் திட்டம் தோல்வியுறும் அபாயம் இருப்பதாக தெரிவித்தது, மேலும், உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்றவை சரிசெய்ய முடியாத அளவில் கைக்கெட்டா உயரத்திற்கு வளர்ந்து விடும் என்று எச்சரிக்கின்றனர்.
அமெரிக்காவின் பொதுச்செயலாளர் Autonio Guterres தன்னுடைய ஒரு அறிக்கையில் பின்வருமாறு கூறியிருந்தார். “பசியில்லாத உலகம் எனும் இலக்கை நோக்கிய பயணத்தில் சிறிதளவு நம்பிக்கையின் வெளிச்சக்கீற்று தென்படுகிறது, உலகின் சில பகுதிகள் 2030 இல் ஊட்டச்சத்து நிறைந்த உலகம் என்னும் திட்டத்தை முழுமையாக பயன்படுத்தி முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.” என்று கூறுகிறார். மேலும், “இவை யாவற்றிலும் முக்கியமானது நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து உடனடியாக பலனளிக்க கூடிய உலகார்ந்த நலன்சார்ந்த முயற்சிகளை (Sustainable Development Goals) நிலையானதொரு வளர்ச்சியை அடைவதற்காக முன்னெடுக்க வேண்டிய தருணம் இது” என்றும் கூறினார்.
இந்த Sustainable Development Goals எனப்படும் திட்டம் 2015 இல் அமெரிக்க பொதுக்குழு ஒன்றினால் துவங்கப்பட்டது, இத்திட்டத்தின் குறிக்கோள்களாக ஏழ்மையை ஒழித்தல், பசியில்லா உலகம் உருவாக்குதல் போன்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய 17 விதமான மக்கள் நலன் சார்ந்தவை தீர்மானிக்கப்பட்டு உள்ளன. தற்போதைய சிக்கலான காலகட்டத்தில் 2030 இல் பசியை ஒழிக்கும் இலக்கோடு செல்லும் வழியில் சரியான வேகத்தையும் கவனிப்பையும் காட்டத்தவறும் பட்சத்தில் 2030 ஆம் ஆண்டில் இன்னும் 600 மில்லியன் மக்கள் பசியால் வாடும் நிலைக்கு தள்ளப்படு்வர். அதுவும் ஆப்பிரிக்க நாடுகளில் இந்த பசிக்கொடுமை மிக அதிகமாக இருக்கும்.
மேலும் அமெரிக்காவை சேர்ந்த அமைப்புகள் உணவு பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைவான உணவுகளுக்கு முக்கியமான காரணங்களாக கூறுவது “நாடுகளுக்குள் சச்சரவு, பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிர்வுகள் மற்றும் இயற்கை பேரிடர்கள் போன்றவற்றை தான். மேலும், உலகில் வெளிப்படையாக உள்ள சமத்துவமின்மை, மக்களின் நுகர்வுப்போக்கு, தற்காலத்தில் ‘ தான் வாழ எதுவும் சரிதான் ‘ என்கிற மனப்போக்கு போன்றவையும் காரணங்கள் தான் என்கின்றனர்.
International Fund for Agricultural Development அமைப்பின் தலைவர் Alvaro Lario அவர்கள் கூறும்போது, “நாம் சரியான அளவு உணவுப்பொருட்களின் மீது முதலீடு செய்வதில்லை எனவும், அரசியல் ரீதியான ஆர்வத்துடன் உணவு உற்பத்திக்காக நிரந்தரமான தீர்வுகளை உருவாக்க முற்படுவது இல்லை எனவும், இவற்றையெல்லாம் நாம் சரியாக கையாளததால் பசிக்கொடுமை இன்னமும் உலகில் உள்ளது” எனவும் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் World Food Programme அமைப்பு விடுத்திருந்த அறிக்கையில் கடந்த 40 வருடங்களில் இல்லாத வகையில் கடுமையான வறட்சி தற்போது ஆப்பிரிக்காவின் எல்லையோரங்களில் தாக்கத் துவங்கியுள்ளது, இது வரும் காலங்களில் கடுமையான பஞ்சத்தை உருவாக்கி அதன் காரணமாக சோமாலியா, கென்யா மற்றும் எத்தியோப்பியாவில் வாழும் 23 மில்லியன் மக்களை இது பாதிக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளது.
பின்னணி:
2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலகத்தில் சுமார் 2.14 பில்லியன் மக்கள், அதாவது சுமார் பத்து நபர்களில் மூன்று நபர்கள் என்கிற விகிதத்தில் உலக மக்கள் தினசரி சாதாரண அளவிலானது முதல் மிக கொடுமையான அளவு வரை உணவுத் தட்டுப்பாட்டை எதிர் கொள்கின்றனர்.
கோவிட் ஊரடங்கு காலம் பல தனிநபர்களின் வருமானத்தின் மீது சம்மட்டி அடியாய் இறங்கியது, அதேபோல உக்ரைன் போரானது அத்தியாவசிய பொருட்களின் விலையை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக பல பில்லியன் சாமானிய மக்கள் சரியான ஊட்டச்சத்து விகிதாச்சார உணவினை எடுத்துக் கொள்ள இயலாமல் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என அமெரிக்காவின் இவ்வமைப்புகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க தரவுகளின் கணக்குப்படி கடந்த 2022 ஆம் ஆண்டில் சுமார் 3.1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் உடல்நலத்தை பேணக்கூடிய வகையில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வாங்கி உண்ணும் அளவுக்கு போதுமான பணம் வைத்திருக்கும் வசதியில்லை என்று கூறுகின்றனர்.
World Food Programme வின் நிர்வாக இயக்குநர் Cindy McCain கடந்த புதன்கிழமை “பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகமாகிறது, ஆனால் பசியால் பாதிக்கப்பட்டோரின் நலதை காப்பாற்ற நமக்கு தேவையான உற்பத்தி மற்றும் விளைச்சல் அதிகரிப்பு, விலைவாசி குறைவு மற்றும் எரிபொருட்களின் விலை குறைவு போன்ற சாதகமான அம்சங்கள் நடைபெற வாய்ப்பில்லை, மாறாக இந்த வருடம் விளைச்சல், உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவை குறைந்து உணவு பொருட்களின் விலை உலக சந்தைகளில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது” என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
மனித குலம் வாழ்வில் இதுவரை கண்டிராத மிகப்பெரும் சவாலை நம்முடைய காலத்தில் சந்திக்க இருக்கிறோம் என்பதே உண்மை. மக்கள் அனைவரும் இந்த உணவு பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் சோதனை மிகுந்த தருணங்களில் இருந்து விரைவில் மீண்டு வந்து பசியில்லா ஏழ்மையில்லா உலகம் அமைப்போம் என்று நம்புவோமாக.