fbpx
LOADING

Type to search

இந்தியா சிறப்புக் கட்டுரைகள் பல்பொருள்

மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு அளிப்பது எப்படி – மனுக்களின் மீதான நடவடிக்கை எவ்வாறு இருக்கும்?

குறை தீர்ப்பு முகாம்

செய்தி சுருக்கம்:

தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது, அன்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுவின் தீவிரத்தை பொறுத்து உடனுக்குடனோ அல்லது சில நாட்களிலோ விசாரணை மேற்கொண்டு தீர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த குறை தீர்ப்பு முகாம்கள் மூலமாக, மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்த புகார்களும் உடனடியாக அந்தந்த துறை அலுவலர்கள் தீர்த்து வைக்க ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பொதுமக்கள் தங்கள் குறைகளையும், வேண்டுகோள்களையும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கட்கிழைமை நாட்களில் நேரில் சென்று அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து தர முடியும். இதேபோல தற்போது ஆன்லைன் வாயிலாகவும் புகார் மனுக்களை அளிக்க முடியும், இன்னமும் வாட்ஸ்அப் மற்றும் இமெயில் மூலமாகவும் புகார்களை சமர்ப்பிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. படிப்பறிவு இல்லாத பாமர மக்களும் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று 10 ரூபாய் கட்டணம் செலுத்தி தங்களது புகார்களை மாவட்ட ஆட்சியரிடம் சமர்பித்து கொள்ளலாம்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

காவல் துறை, வருவாய் துறை மற்றும் நீதித்துறை போன்ற அனைத்து அரசு நிர்வாகங்களும் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகின்ற துறைகளாகும். இதில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடக்கும் ஒவ்வொரு திங்கள் கிழமையும் பொதுமக்கள் தங்கள் புகார் மனுக்களை ஆட்சியரிடம் ஒப்படைக்கலாம். ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்ப படிவம் வாங்கி அதை நிரப்பி நேரிலும் தரலாம் அல்லது அரசு இணைய முகவரியான https://gdp.tn.gov.in என்ற பக்கத்தில் சென்று அங்கும் தங்களுடைய புகார்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இப்படி வந்து சேருகின்ற புகார் மனுக்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் சம்பந்தப்பட்ட துறைகளிடம் விவரம் சேகரித்து தீர்வுகள் வழங்கப்படுகின்றன.

பொதுமக்கள் தங்கள் மனு மீதான விசாரணை நடவடிக்கைகளை மற்றும் குறைகள் தீர்க்கப்பட்ட நிலவரத்தை தபால் மூலமாகவோ அல்லது இ மெயில் மற்றும் குறுந்தகவல் மூலமாகவோ அறிந்துகொள்ள வழிவகை செய்ய பட்டுள்ளது. ஆட்சியரிடம் சென்றடைந்த ஒவ்வொரு தனிப்பட்ட மனுவும் சீரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அதற்கு தொடர்புடைய இலாகா அதிகாரிகள் மூலம் பதில் பெறப்பட்டு தீர்வுகள் காணப்படுகின்றன.

கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், வருவாய், நீதி மற்றும் காவல் துறை என அனைத்து அரசு சம்பந்தமான துறைகளின் மீதும் பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம். இந்த துறைகளில் முன்னரே பொதுமக்களின் புகார்கள், விண்ணப்பங்கள் மற்றும் வேண்டுகோள்கள் நிராகரிக்க பட்டிருந்தாலும் கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு நாளில் அந்த குறிப்பிட்ட துறை மீது புகார் அளிக்கலாம்.

பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களின் மீதான தொடர் நடவடிக்கைகளை கண்காணிக்க துணை ஆட்சியர் பதவியில் இருக்கும் ஒரு தனி அலுவலர் ஒவ்வொரு வட்டத்திலும் நியமிக்கப்பட்டு அந்தந்த வட்டத்தில் இருக்கும் பொதுமக்களின் குறைகளை உடனடியாக களைய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இப்படி பொதுமக்களால் அளிக்கப்படும் புகார் மனுக்கள் வாரம்தோறும் எவ்வளவு வந்துள்ளன, அவற்றில் எத்தனை மனுக்கள் தீர்வு காணப்பட்டன என்பது போன்ற ஒவ்வொரு நடவடிக்கையும் ஆட்சியரின் தனிப்பட்ட கவனத்திற்கு செல்லும் விதமாக இந்த குறை தீர்ப்பு முகாம்கள் செயல்படுகின்றன. இதில் ஏதாவது மனுக்கள் தீர்வு எட்டப்படாமல் இருக்குமாயின் ஆட்சியர் உடனடியாக அதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு தீர்வு காண்பார். இதில் அரசு அலுவலர்களின் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அந்த அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் முழு அதிகாரமும் மாவட்ட ஆட்சியருக்கு உண்டு என்பதால் பெரும்பாலும் அனைத்து மனுக்களும் குறை தீர்க்கப்பட்டு பொதுமக்களின் இன்னல்கள் களையப்படுகின்றன. சமூக பிரச்சினைகள் முதல் குடும்பத் தகராறு வரையிலான அனைத்து விதமான புகார்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் ஒரு சிறந்த சேவையாக இந்த மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் முதலில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்கள் குறைகளை கூறி தீர்வு காண முற்பட்டு அங்கு எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் கலெக்டரிடம் தங்கள் புகார் மனுவை சமர்ப்பிக்கும் போது அந்த மனு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. எவ்வாறாயினும் பொதுமக்கள் தங்கள் குறைகளை சரிப்படுத்திக்கொள்ள இந்த ஆட்சியரிடம் நேரடியாக புகார் தெரிவிக்கும் முறையானது பெருமளவில் உதவியாக உள்ளது. ஆனால் சிறு சிறு பிரச்சினைகளுக்கு ஆட்சியரிடம் மனு அளிப்பதை தவிர்ப்பது நலம்.

மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து துறைகளும் இந்த புகார் மனுக்கள் மீதான விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டியிருப்பதால் பெரும்பாலும் அனைத்து மனுக்களும் விரைவில் தீர்வை எட்டிவிடுகின்றன. இதேபோன்று வேலைவாய்ப்பு மனு, பாதுகாப்பு மனு போன்றவையும் கலெக்டரிடம் பொதுமக்களால் சமர்ப்பிக்க படுகின்றன. இதுபோக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் அந்தந்த மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு, நீதி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வாரம்தோறும் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து துறைகளும் சிறப்பாக அதன் பணிகளை செய்வதை கண்காணித்து வருகின்றார்.

 

பின்னணி:

நம் அரசு ஒவ்வொரு குடிமகனின் நலனிலும் அக்கறை கொண்டு இதுபோன்ற நன்மை பயக்கும் திட்டங்களை செயலாற்றி வருகிறது. அரசு திட்டங்களால் ஆதாயம் கிடைக்காமல் இருப்பவர்களும், அரசு அலுவலகங்களால் அலைகழிக்கப்படும் நபர்களும், அடிப்படை வசதிகளை பெற முடியாமல் தவிக்கும் மக்களும் இந்த மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள் அன்று நடைபெறும் குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொண்டு மனுக்களை கொடுத்து தங்கள் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்து கொள்ள முடியும்.

கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத வயதானவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் நபர்கள் ஆன்லைன் மூலமாக தங்கள் மனுக்களை ஆட்சியரிடம் ஒப்படைக்கலாம். அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுக்களை அளிப்பதற்காக தனிப்பட்ட வாட்ஸ்அப் மற்றும் இ-மெயில் வசதிகள் தரப்பட்டுள்ளன. இவற்றின் வழியாகவும் பொதுமக்கள் தங்கள் மனுக்களை ஆட்சியரிடம் சமர்பித்துக் கொள்ள முடியும்.

 

தொடர்புடைய பதிவுகள் :

அமெரிக்கப் பொருட்கள் மீதான இந்தியாவின் பதிலடி சுங்க வரிகள் நீக்கப்படுவதன் பின்னணி என்ன?
சோஷியல் மீடியா மயக்கத்தில் இந்தியா - முளைக்கும் திடீர் பிரபலங்கள்
விண்வெளியில் சாதிக்க தயாராக உள்ள இந்தியா, 2040ல் வின்வெளித்துறையில் அசுர வளர்ச்சி அடைந்து விடும் என்...
சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் மரபணு ரீதியாக ஒத்திருக்கிறார்கள்: டிஎன்ஏ விஞ்ஞானிகள் கண்டுபிடிப்...
கருத்தடைக்கான தடையை உடைத்தது அமெரிக்கா! வரலாற்றில் முதன்முறையாக கருத்தடை மாத்திரைக்கு அமெரிக்காவில் ...
கஞ்சா பயன்பாடு உடலில் உலோக நஞ்சைக் கலக்கிறது..! மூளையும் சிறுநீரகமும் கடுமையாக பாதிக்கப்படுமாம்.. ஆய...
நுரையீரல் பிரச்சினைகளுக்குத் தீர்வு இலைக் காய்கறிகளைச் சாப்பிடுவதே! புதிய ஆய்வு முடிவு!
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பாக் ஜலசந்தியின் குறுக்கே பாலம் அமைப்பதால் ஏற்படும் பலன்கள்
அத்துமீறி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 22 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைத...
உடலுறவுக்குப் பிறகான செயல்பாடுகள் உங்கள் நெருக்கத்தைத் தீர்மானிக்கின்றன!! தம்பதிகளே தயாரா..?!
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *