fbpx
LOADING

Type to search

உலகம் வர்த்தகம்

ஏன் வீடுகளின் விலை வீழச்சி அடைகிறது? ஏனென்றால் நாம் போதுமான அளவு செக்ஸ் வைத்துக்கொள்வதில்லை!

பிரிட்டன்

செய்திச் சுருக்கம்:

பிரிட்டன் மக்கள் போதுமான அளவு செக்ஸ் உறவில் ஈடுபடவில்லையென்றால் அந்நாட்டில், வீடுகளின் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் என பொருளாதார நிபுணரும் சந்தைக் கண்காணிப்பாளரும் ஆன மைல்ஸ் கூறுகிறார்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

தாம்பத்திய வாழ்க்கைக்கும் வீட்டின் விலை மதிப்பிற்கும் தொடர்பு இருக்கிறதா எனக் கேட்டால், நிச்சயம் இருக்கிறது என்கிறார் பிரிட்டன் பேராசிரியர் மைல்ஸ். தனது காப்பி கோப்பையுடன், இந்த தொடர்பில்லா விஷயத்திற்கு எவ்வாறெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதை சொல்கிறார் அதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

பின்னணி:

குரங்கிலிருந்து மனிதன் பரிணாமித்துக் கொண்டே வர வர, உணவு, உடை மற்றும் உறைவிடத்தை மட்டுமே மிக முக்கியமாக கருதினான். இயற்கை பேரழிவுகளில் இருந்து தப்பிக்கவும், கொடிய விலங்குகள் மற்றும் விஷப் பூச்சிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவும் அவனுக்கு பாதுகாப்பான இருப்பிடம் தேவைப்பட்டது. பிறகு மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் உலகெங்கிலும் கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனிக் குடும்பங்கள் உருவாகின.

இதனால் வீடுகளின் தேவை மனிதனுக்கு அதிகமானது. வேலைக்காகவும், உயர் வாழ்க்கைத் தரத்திற்காகவும் நகரங்களை நோக்கி படையெடுத்தான். இதனால் வீடுகளின் தேவையும், வீட்டின் விலைமதிப்பும் வானுயரச் சென்றது. தொழில் நுட்பத் துறையின் வளர்ச்சியினால் பல சார் தொழில்கள் வளர்ந்தது போல ரியல் எஸ்டேட் என்னும் வீடு மற்றும் நில வணிகமும் வேகமெடுத்தது. ஆனால் இன்று அதன் இறங்கு நிலை துவங்கியுள்ளதாக பேராசிரியர் மைல்ஸ் தெரிவிக்கிறார். இந்த ஏற்றம் இறக்கம் இதெல்லாம் ஒரே ஒரு விஷயத்தை அடிப்படையாக வைத்து தான் நடைபெறுகிறது, அதுதான் டெமோகிராபி அல்லது பாப்புலேஷன் எனப்படும் மக்கள் தொகை.

பொருளாதாரத்தின் அடிப்படையே ஒரு பொருளின் தேவையை சார்ந்து தான். தற்போது, பிரிட்டனில் கதவிற்குப் பின்னால் செய்யும் காதல் செயலற்றுக்  கிடக்கிறது, இதனால் வீடுகளின் தேவை இப்போது குறைந்து கொண்டு வருகிறது என்று மைல்ஸ் கூறுகிறார். இதனை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் பிரெஞ்ச் நிறுவனம் ஒன்று வெளியிட்ட புள்ளியியல் தகவல் அறிக்கை பின்வருமாறு.

ஐஃபோப் என்னும் பிரெஞ்ச் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் இந்த வருடம் நடத்திய ஆய்வில், பதினெட்டு வயது நிரம்பிய நாற்பத்தியாறு சதவீத பிரிட்டிஷ் இளம்பெண்கள், கடந்த பனிரெண்டு மாதங்களாக பாலுறவில் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளனர். இது கடந்த 2016 ஆம் ஆண்டைக் காட்டிலும் நான்கு சதவீதம் குறைவு என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே நேரம், பிரிட்டனை சுற்றியுள்ள ஐரோப்பிய நாடுகளில் நடத்திய ஆய்வில் ஸ்பெயினில் இருபத்தெட்டு சதவீதமும், இத்தாலியில் முப்பத்தி இரண்டு சதவீதமும், ஜெர்மனியில் முப்பத்தாறு சதவீதமும், பிரெஞ்சு நாட்டில் நாற்பத்தி ஒன்று சதவீதமும் பதிவாகியுள்ளது. பிரிட்டனின் சதவீதம் இதில் அதிகமாக உள்ளது.

ஸ்பெயின் – 28%

இத்தாலி     – 32%

ஜெர்மனி   – 36%

பிரெஞ்சு    – 41%

பரிட்டன்    – 46%

இதற்கு குறைந்த ‘ஃபெர்டிலிட்டி ரேட்’ தான் முக்கிய காரணம். ஃபெர்டிலிட்டி ரேட்டை தமிழில் கருவள வீதம் என்பர், உலக நாடுகளின் மத்தியில் பிரிட்டனின் கருவள வீதம் அதர பாதாளத்தில் கிடக்கிறது. சராசரியாக ஒரு பெண்ணிற்கு அவளின் பேறுகாலத்தில் எத்தனை குழந்தைகள் பிறக்கிறது என்பதையே கருவள வீதத்தின் வரையறை. பிரிட்டனின் கருவள வீதம் வெறும் 1.94 தான்.

பிரிட்டனில், கடந்த பத்து வருடங்களாக, அனைத்து பின்புலத்தில் இருக்கும் மகளிரும் குறைந்த அளவிலேயே குழந்தையை பெற்றுக்கொள்கிறார்கள். அதுவும் நன்கு படித்து, கல்லூரி படிப்பை முடித்த பெற்றோர் மத்தியில் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் நாட்டம் குறைந்துள்ளது. சொல்லப்போனால் உலகம் முழுவதிலும் உள்ள மேல்தட்டு வர்கத்தில் இப்போக்கு இயல்பாகவே காணப்படுகிறது.

மக்கள் தொகை குறைவதால் வீடுகளின் தேவை குறையும். இதனால் தற்போது வரை அதிகம் பெருகிக்கொண்டுள்ள வீடுகளின் தேவை குறைந்து அதன் மதிப்பு பல மடங்கு குறைந்து விடும். இது இப்போது பெரியதாக தெரியவில்லை என்றாலும் காலப்போக்கில் மிகப்பெரிய மாற்றத்தைக் காணலாம் என்கிறார் மைல்ஸ். ஒருவகையில் இதுவும் நல்லதிற்கே என்றும் கூறுகிறார். சொந்த வீட்டை ஒரு கனவாக மட்டும்  கொண்டிருக்கும் நபர்களுக்கு குறைந்த விலையில் வீடு கிடைக்க வாய்ப்புகள் அமையும்.

மக்கட்தொகை விகிதத்தைத் தாண்டி நம்முடைய அன்றாட வாழ்க்கை முறைக்கும் வீடுகளின் விலை மதிப்பிற்கும் சம்மந்தம் இருக்கிறதாம். அதாவது நீண்ட காலமாக திருமணம் செய்யாமல் தனித்து வாழும் இளைஞர்கள் பெரும்பாலும் சிறிய ரக வீடுகளையே நாடுவர். அவர்களுக்கு தோட்டமும், மாடியும் கொண்ட பெரிய வீடுகள் தேவைக்கு மிகுதியானவையாக இருக்கிறது. இதனால் வில்லா போன்ற வீடுகளுக்குப் போட்டி குறைகிறது விலையும் வீழ்ச்சி அடைகிறது.

கொரோனா தீநுண்மித் தொற்றுக்குப் பிறகு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் போக்கு அதிகம் காணப்படுகிறது. இதனால் பலரும் அவரவரது கிராமங்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் நகரத்தில் புற்று போல பெறுகியுள்ள வீடுகள் இன்று தனிமையில் பூட்டிக்கிடக்கிறது. அவற்றின் தேவை வெகுவாகக் குறைந்துவிட்டது, இனி வரும் காலங்களில் பல நிறுவங்கள் இந்த ‘ஹைபிரிட்’ வேலை முறையை தான் செயல்படுத்த உள்ளன. அதனால் நகரங்களில் இன்னும் மக்கள் தொகை அடர்த்தி குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இத்தனை எதிர்மறை வாதங்கள் இருந்தாலும், வீடு என்பது ஒரு தலைசிறந்த முதலீடு அதை ஊக்குவிக்க வேண்டும் என்று சொல்லி முடிக்கிறார் மைல்ஸ். மக்கள் தொகையை கண்காணிப்பதும், கட்டுப்படுதுவதும், தேவையென்றால் பெருக்குவதும் அந்நாட்டு அரசங்கத்தின் கையில் தான் இருக்கிறது. அதனால் அரசு எவ்வழியோ மக்களும் அவ்வழி.

தொடர்புடைய பதிவுகள் :

பருவமழையில் ஏற்படும் பகீர் மாற்றங்கள்! 
உடல் பருமன் அதிகரிப்பதற்கு பிரக்டோஸ் காரணமாகிறதா? ஆய்வுகள் சொல்வதென்ன?
கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு 12 வருடங்கள் கால அவகாசம் அளித்தது இந்தியா.
நீங்கள் சைவ உணவு பிரியரா? இடுப்பு கவனம்!
அதிகச் சம்பளம் வாங்குபவர்கள் புத்திசாலிகளாக இருப்பதில்லையா? ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?
உலகப்போரில் வீசிய வெடிகுண்டுகள், தோண்டத் தோண்ட அச்சுறுத்தல்கள்!
வறுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி புத்தக வாசிப்பினால் பாதுகாக்கப்படுமா?
திசை மாற்றும் சமூக வலைத்தளங்கள்
ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதே புத்திசாலித்தனம் என்கிறார் ஓய்வு பெற்ற அமெரிக்க ராணுவ...
அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிக் கலாச்சாரம்: அதிர்ச்சி ரிப்போர்ட்
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *