எச்.ஐ.வி எனும் இந்நூற்றாண்டின் மாபெரும் கொடிய சாத்தான்

எச்.ஐ.வி என்று அழைக்கப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திகளை அழிக்கும் நோய் (Human Immuno Deficiency Virus), மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் வைரஸ். உலக சுகாதார அமைப்பு (WHO) 2020 ஆம் ஆண்டில் உலகளவில் 37.7 மில்லியன் மக்கள் (உலக மக்கள்தொகையில் சுமார் 0.7%) எச்.ஐ.வி உடன் வாழ்கின்றனர், மேலும் 1.5 மில்லியன் மக்களுக்கு வரக்கூடும் என்றும் கணித்தது. இதில் 73 சதவிகிதம் மக்கள் ஆன்டி ரெட்ரோ வைரல் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆனாலும் எய்ட்ஸ்(Acquired immune deficiency syndrome) போன்ற கொடிய நோயால் 680,000 பேர் இறந்ததாகவும் மதிப்பிட்டுள்ளது.
நோய்க் கிருமிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் எச்.ஐ.வியால் சீரழிக்கப்படுவதே எய்ட்ஸ் நோய்யால் மனிதர்கள் இறப்பதற்க்கு காரணமாகும்.
எச்ஐவியின் மூன்று நிலைகள்:
எச்.ஐ.வி மூன்று தனித்தனி நிலைகளில் தீவிரமடைகிறது.
கடுமையான எச்.ஐ.வி தொற்று – எச்.ஐ.வி நோய்த்தொற்றின் ஆரம்ப நிலை.
எச்.ஐ.வி செல்கள் உடலில் வேகமாகப் பெருகி, ஹோஸ்டில் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம், மேலும் உடலின் CD4, T லிம்போசைட் செல்களை அழிக்கத் தொடங்கும். பாலியல் தொடர்பு மூலம் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்.
நாள்பட்ட எச்.ஐ.வி தொற்று (மருத்துவ தாமதம் / செயலற்ற நிலை) – எச்.ஐ.வி நோய்த்தொற்றின் இரண்டாம் நிலை.
எச்.ஐ.வி நோய் பரவல் அளவு குறைவாக இருக்கலாம் , ஆனால் தொடர்ந்து பரவும். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம் மற்றும் மற்றவர்களுக்கு பரவும் ஆபத்து இந்நிலையில் வெகுவாகக் குறைகிறது.மேலும் பல தசாப்தங்களாக இந்த கட்டத்தில் நோய் தொற்று ஏற்பட்டவர்கள் வாழலாம்.
எய்ட்ஸ் – எச்.ஐ.வி நோய்த்தொற்றின் மூன்றாம் நிலை.
நீண்ட காலத்திற்கு எச்.ஐ.வி சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், நாள்பட்ட எச்.ஐ.வி தொற்று எய்ட்ஸாக முன்னேறுகிறது. நோயெதிர்ப்பு அமைப்பு பல வகையான நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட முடியாமல் போகும். இந்நிலையில் மற்றவர்க்கு பரவுவது அதிகமாகும். எய்ட்ஸ் தொற்றில் மூன்று ஆண்டுகளுக்குள் மரணம் வரை கொண்டு சென்றுவிடும்.
எச்.ஐ.வி நோயின் அறிகுறிகள் பல வருடங்களுக்கு வெளியே தெரியாமல் இருந்து, பின்னர் வெளிவரும். எச்.ஐ.வி தொற்று உள்ளதாக சந்தேகப்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது உத்தமம். எச்.ஐ.வி நோய் உள்ளதா என்று சோதனை செய்யச் செல்வதே சற்றே சங்கோஜத்தை உண்டு பண்ணுவதாக இருந்தாலும், வேறு பல வழிமுறைகளிலும் இந்நோய் பரவியுள்ளதை உறுதிப்படுத்த முடியும். இன்றைய அரசு மருத்துவ மையங்களில் எச்.ஐ.வி பரிசோதனை செய்யவும், உரிய சிகிச்சையளிக்கவும் வசதிகள் இருப்பதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளின் பதிவேடுகளை இரகசியமாக பராமரிக்கவும் செய்யும் வசதிகள் உள்ளன.
எச்.ஐ.வி-ஐ ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம், அது எய்ட்ஸ் என்ற முழு வல்லமை வாய்ந்த உயிர்க்கொல்லி நோயாக வளர்வதை தவிர்த்திட முடியும்.
ஆரம்பகால அறிகுறிகள்
எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட 2 முதல் 4 வாரங்களுக்குள், மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு காய்ச்சல் போன்ற நோய் ஏற்படும். இது எச்.ஐ.வி தொற்றுக்கு உடலின் இயற்கையான எதிர்வினை.
காய்ச்சல் போன்ற அறிகுறிகள் பின்வருமாறு:
- காய்ச்சல்
- குளிர்
- சொறி
- இரவில் வியர்ப்பது
- தசை வலிகள்
- தொண்டை வலி
- சோர்வு
- வீங்கிய நிணநீர் கணுக்கள்
- வாய் புண்கள்
இந்த அறிகுறிகள் சில நாட்கள் முதல் பல வாரங்கள் வரை நீடிக்கும். ஆனால் சிலருக்கு எச்.ஐ.வி.யின் ஆரம்ப கட்டத்தில் இந்த எந்த அறிகுறிகளும் இல்லாமலும் போகலாம்.
எடை குறைதல்
உடல் எடையில் வேகமான மாற்றங்கள் – அதாவது வழக்கத்தை விடவும் வேகமாக உடல் எடை குறைந்து வந்தால் இந்நோயின் முன்னேற்றத்தை குறிப்பதாக இருக்கும். இதன் அர்த்தம் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதே குறிக்கும்.
தொடர் இருமல்
தொடர்ச்சியான இருமல் எச்.ஐ.வி நோயின் அறிகுறியே. சளி,காய்ச்சலால் வரும் இருமல் மருந்து எடுத்தால் குறையும், உடல் இடை குறைவதோடு தொடர்ந்து வரும் காலங்களில் எச்.ஐ.வி வளர்ந்து வந்தால், இருமலும் அதிகரிக்கும். குறையாது.
நகம் சொல்லும் கதை
எச்.ஐ.வி கிருமியின் பாதிப்பை நகங்களில் கண்டறிய முடியும். எச்.ஐ.வி நோயின் அறிகுறிகளில் நகம் பிரிவதும், அவற்றின் வண்ணங்கள் குறைவதும் இதன் ஒரு பகுதியாகும். எனவே, இந்த அறிகுறியை கண்டால் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.
களைப்பு
பெரும்பாலான நேரங்கள் மந்தமாகவும், சோர்வாகவும் இருப்பதாக உணர்ந்தால், அதனை எச்.ஐ.வி பாதிப்பாக கருத முடியும்.
தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி
தசைகள் மற்றும் மூட்டுகளில் தாங்கவொண்ணாத வலிகள் இருந்தால், எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்ளலாம். இதுவும் எச்.ஐ.வி-ன் அறிகுறிதான். ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் உலக எய்ட்ஸ் தினங்களில் எய்ட்ஸ் தொடர்பான உண்மைகளும், விளக்கங்களும் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகின்றன அதில் சமீபத்திய ஆய்வுகள் எய்ட்ஸ் வந்த பெரும்பாலும் நோயாளிகள் தாங்கவொண்ணாத தசை வலிகளை அதிகம் சொல்லியிருக்கின்றனர்.
தலைவலி
சதா தலைவலி எச்.ஐ.வி பாதிப்பின் அறிகுறியாக கருதலாம். இதை எச்.ஐ.வி-க்கான ஆரம்ப அறிகுறியாக காணப்படுவதால் நோயாளிகள் ARS (autonomic reflex screen test) பரிசோதனைக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.
தோலை கவனியுங்கள்
எச்.ஐ.வி நோயின் ஆரம்ப மற்றும் முற்றிய நிலைகளில் தோல் சொரசொரப்பாக மாறிவிடும். இதனால்தோலில் எரிச்சல் மற்றும் அரிப்பு அதிகரிக்கும்.
எச்.ஐ.வி பாதிப்புகளை சிகிச்சை செய்வதை விட, வராமல் தவிர்ப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுவோம். அறிவோம், வளர்வோம்!