Guilty Tamil Meaning

English: guilty
Tamil: குற்ற உணர்வுள்ள; குற்றமான; குற்றமுள்ள; குற்றம் சாட்டத்தக்க
Explanation:
குற்ற உணர்ச்சி என்பது நம் செயல்கள் நம்மைச் சுற்றியுள்ளவர்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதிலிருந்து எழும் ஒரு உணர்ச்சி. ஒருவருக்குத் தன் குடும்பம், உணவு, பணம், வேலை, உடல்நலம் போன்ற எதைப் பற்றியும் குற்ற உணர்ச்சி எழலாம்.
நம்மில் பெரும்பாலோர் எது சரி எது தவறு என்று முடிவுசெய்ய நமது மனசாட்சியை நம்பியிருக்கிறோம். நமது தரம் மற்றும் மதிப்புக்கு ஏற்காத ஒரு செயலைச் செய்யும்போது நாம் குற்ற உணர்வு கொள்கிறோம். குற்றத்தை உணர்வது வேதனைக்குரியதாக இருந்தாலும், அது ஒரு சமூகம்சார் நோக்கத்திற்குப் பயன்படுகிறது. மரியாதையாக அல்லது தார்மீகரீதியாகச் செயல்படவும் எதிர்காலத்தில் சரியானதைச் செய்யவும் குற்ற உணர்வு நமக்கு நினைவூட்டலாம்.
ஆனால் எல்லா நேரங்களிலும் குற்றவுணர்வு கொண்டிருப்பது ஆக்கபூர்வமானது அல்ல. தொடர்ச்சியான அல்லது அதிகப்படியான குற்றவுணர்ச்சி நம் வாழ்க்கையின் பல அம்சங்களைத் தீவிரமாக பாதிக்கலாம். தவறுகள் செய்வது மனிதராக வாழ்வதன் ஒரு பகுதி என்பதை உணர்வது அதிகப்படியான குற்ற உணர்ச்சி அடையாமலிருக்க உதவும்.
Examples:
- மோசமான குழந்தைகளா? குற்றமிழைத்தது பெற்றோர்களே! (Bad children? Guilty parents!)
- அவர் ஒரு நீரிழிவு நோயாளி; இனிப்புகளை சாப்பிடும் ஒவ்வொரு முறையும் அவருக்குக் குற்ற உணர்வு ஏற்படுகிறது. (He is a diabetic and feels guilty every time he eats sweets.)
- தன் பெற்றோரைப் புறக்கணித்த குற்றத்தை அவள் செய்யவில்லை. (She is not guilty of ignoring her parents.)
- எதிர்பாராதவிதமாக, அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். (Unexpectedly, they pleaded guilty.)
- குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். (The guilty mind stays perturbed.)
- ஜான் குற்றவாளி அல்ல என்று நடுவர்குழு கண்டறிந்துள்ளது. (A jury has found John not guilty.)
- வெட்கமும் குற்றவுணர்ச்சியும் நாகரிகமான சமுதாயத்தைப் பேண இன்றியமையாத உன்னதமான உணர்ச்சிகளாகும். (Shame and guilt are noble emotions essential in the maintenance of civilized society.)
- ஒரு நபர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும்வரை நிரபராதியே. (A person is innocent until proven guilty.)
- குற்றவுணர்வுள்ள மனசாட்சி இருப்பது சில நேரங்களில் நல்லது என்று மனநல மருத்துவர் நோயாளியிடம் கூறினார். (The psychiatrist told the patient that a guilty conscience can sometimes be a good thing.)
- காபி குடிப்பது எனக்கு குற்றவுணர்வூட்டும் இன்பம் தரும் செயல். (Drinking coffee is my guilty pleasure activity.)