Grocery Meaning in Tamil

க்ரோஸரீ
Meaning – பொருள்:
மளிகை, மளிகைப் பொருள், பலசரக்கு பொருள்களின் தொகுப்பு, மளிகை கடை, சந்தை, கடை, உணவு, சேமிப்பு கிடங்கு, வணிகம், கூடாரம், வர்த்தகம், பலசரக்கு பொருள்.
Explanation – விளக்கம்:
உணவுப் பொருட்களின் தொகுப்பே மளிகை ஆகும். ஒரு மளிகை கடை அதாவது மளிகை பொருட்கள் கிடைக்கும் இடம். இதை வணிகம் என்கிறோம். மளிகை கடையில் விற்கப்படும் உணவுப் பொருட்கள். இங்கு ‘grocer’ என்பது மளிகை பொருட்களை விற்கும் கடைக்காரரை குறிப்பதாகும். இது மொத்த வியாபாரம், சில்லரை வியாபாரம் என வகைப்படுத்தலாம்.
‘Grocery list’ என்பது மளிகை பொருட்களின் பட்டியல் ஆகும்.
‘Grocery store’
என்பது மளிகை பொருட்கள் கிடைக்கும் இடம். சுருக்கமாக மளிகை கடை ஆகும்.
இவ்வாறு செயல்படுவதை வணிகம் என்கிறோம். தற்போது பேரங்காடி எனப்படும் சூப்பர் மார்க்கெட்டில் எல்லா பொருட்களையும் வாங்குகின்றனர். இங்கு தேவையானதை நாமே எடுத்துக் கொள்ளும் சுய சேவை உள்ளதால் மக்கள் ஈர்க்கப்படுகின்றனர். இங்கு மளிகை என்பது பருப்பு வகைகள், விதைகள், மாவு வகைகள், காய்கறி, பழங்கள், அரிசி, ஆகியனவாகும்.
Synonyms – ஒத்த சொற்கள்:
Market, grocery store, food market, supermarket, emporium, store.
சந்தை, பல்பொருள் அங்காடி, உணவு கடை, பேரங்காடி, வர்த்தக ஸ்தலம், கடை.
உதாரணங்கள் – Examples:
We have so many grocery stores in the city.
நகரத்தில் நிறைய பல்பொருள் அங்காடிகள் உள்ளன.
The price of groceries increases every month.
எல்லா மாதமும் மளிகைப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது.
I don’t buy groceries in the same shop every month.
எல்லா மாதமும் நான் ஒரே கடையில் மளிகை பொருட்கள் வாங்க மாட்டேன்.
Groceries are essential for our day-to-day cooking.
நமது அன்றாட சமையலுக்கு மளிகை பொருட்கள் இன்றியமையாததாகும்.
I worked in a grocery store.
நான் மளிகைக் கடையில் வேலை செய்தேன்.
I usually bag my own groceries.
நான் வழக்கமாக எனது மளிகை சாமான்களை நானே பையில் அடைப்பேன்.
There was a shortage of groceries during the COVID times.
கோவிட் காலத்தில் மளிகைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.