fbpx
LOADING

Type to search

இலங்கை

மக்களை கொன்று புதைத்த வழக்கில் காவல் துறையின் ஆதாரங்களை அழிக்க உத்தரவிட்டதாக முன்னாள் இலங்கை அதிபர் மீது ஆய்வறிக்கை புகார்.

செய்தி சுருக்கம்:

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே மீது காவல்துறையின் ஆய்வறிக்கைகளை அழித்து விட்டதாக குற்றச்சாட்டு. அவர் 1989-ல் இராணுவ அதிகாரியாக பணியாற்றிய போது நிகழ்ந்த மார்க்சிஸ கலவரத்தின் போது கொன்று புதைக்கப்பட்ட மக்களின் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை தடுக்க அதுசம்பந்தமான காவல்துறையின் ஆதாரங்களை முற்றிலும் அழித்ததாக கடந்த வியாழனன்று (22-06-2023) வெளியிடப்பட்ட அறிக்கையில் தகவல்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

கடந்த 30 ஆண்டுகளில் 20க்கும் மேற்ப்பட்ட இடங்களில் தோண்டியதில் நூற்றுக்கும் மேலான மனித உடல்களின் மிச்சங்கள் கிடைத்த போதிலும் யார்மீதும் வழக்கு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை, மேலும் உடல்களை அடையாளம் கண்டு அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவும் இல்லை என்று சமூக செயல்பாட்டாளர்கள் அமைப்பு சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வமைப்பின் உறுப்பினர்களாக பாதிக்கப்பட்டோரின் உறவினர்களும், International Truth and Justice மற்றும் Journalist of Democracy ஐ சேர்ந்தவர்கள் உள்ளனர். இன்னும் பல ஆயிரக்கணக்கான மனித உடல்கள் இந்த பகுதியில் புதையுண்டு இருக்கலாம் என்ற பகீர் தகவலையும் அவ்வமைப்பு வெளியுளிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
<span;>இந்த படுகொலைகள் மீதான விசாரணைகளை மேற்கொள்ள இதுவரையிலும் இலங்கை அரசு உத்தரவிடவில்லை எனவும், மாறாக உண்மைகளை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டும் முயற்சிகளை இலங்கை அரசு தடுத்துள்ளது எனவும் அவ்வறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளனர்.

பின்னணி:

இந்த படுகொலைகளின் மீதான விசாரணைகள் துவங்கியதும் இதில் சம்பந்தப்பட்ட நீதிபதிகளையும், தடயவியல் துறையினரையும் திடீரென இடமாற்றம் செய்துள்ளனர். மேலும் அவ்விடங்களையோ அல்லது உடல்களையோ பார்வையிட முயன்ற பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் வக்கீல்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இத்தகைய கொடூரமான படுகொலைகளுக்கு காரணமறிய சாட்சியங்களை சேகரிக்கவும் அரசு எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை, பிரேத பரிசோதனைகள் எதுவும் செய்யவில்லை.

அதிசயமான நிகழ்வாக ஒருமுறை நீதிமன்றத்தின் தைரியமான தீர்ப்பினால் ஒருவர் குற்றவாளி என தண்டிக்கப்பட்டார், பின்னர் சில நாட்களில் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலையானார் என்று அறிக்கை கூறுகிறது.

மேலும் அவ்வறிக்கை “இது ஒரு அரசாங்கத்தின் மாபெரும் தவறு எனவும், படுகொலைகளுக்கு காரணமான ஆட்களுக்கு ஆதரவு காட்டுதல், தன் அனைத்து பிரஜைகளையும் சமமாக பாவிக்காத தன்மை, மேலும் போதுமான ஆதாரங்களை திரட்டுவதில் அரசின் விருப்பமின்மை ஆகியவற்றை தெளிவாக காட்டுகிறது. தங்களுடைய சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இது என்றுமே தீராத சோகக்கதை ஆகும் என்று குறிப்பிட்டுள்ளனர். குடும்பத்தினர் தாங்கள் இழந்த உறவை கானமலேயே தங்கள் வாழ்நாளை முடித்துக்கொள்ள நிற்பந்திக்கப் படுகிறார்கள் இங்கே” என்று இலங்கை அரசின் மீது குற்றச்சாட்டினை முன்வைக்கிறது.
<span;>ராஜபக்சேவின் தலையீடு அரசியலிலும் அரசாங்க நடவடிக்கைகளிலும் இன்னமும் சக்தி வாய்ந்ததாகவே உள்ளது என்பதற்கு இந்நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு. கடந்த 2013- ல் இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இருந்த ஐந்து ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட மனித இனப்படுகொலையின் ஆய்வறிக்கைகள் அனைத்தையும் அழித்துவிட அப்போதைய இராணுவ பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய ராஜபக்சே உத்தரவிட்டதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1989- ல் நிகழ்ந்த மார்க்சிஸ கலவரத்தின் போது அரசு தரப்பில் இராணுவ அதிகாரியாக இருந்தவர் ராஜபக்சே, அன்றுமுதல் இன்றுவரை இந்த மனித உடல்கள் புதைக்கப்பட்டுள்ள புதைகுழிகள் மறைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கின்றனர் அறிக்கையை சமர்ப்பித்தவர்கள்.

இந்த படுகொலைகளின் மீதான விசாரணைக்கு இடையூறாக இருந்ததாக ராஜபக்சே மற்றும் சில மூத்த காவல்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 2019- ல் இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜபக்சேவின் மீதான எதிர்ப்பை அச்சமயத்தில் ஏற்ப்பட்ட வரலாற்றின் மிகப்பெரும் பொருளாதார சரிவின் காரணமாக ஆத்திரமடைந்த மக்கள் பலவாறு போராட்டங்களை நடத்தி வெளிப்படுத்தினர். அதன் காரணமாக ராஜபக்சே அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு ஆளானார்.

ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை ஆன பின்பு இந்த 75 வருடங்களில் இலங்கை மூன்று முறை மிகப்பெரும் கலவரங்களை சந்தித்துள்ளது, 25 வருடங்களாக நடைபெற்ற உள்நாட்டுப் போரும் அதில் அடங்கும்.

இந்த கலவரங்களால் காணாமல் போனவர்களின் அடையாளங்களை கண்டறிய 2017- ல் அரசு தரப்பில் அமைக்கப்பட்ட அலுவலகத்திற்கு இதுவரை 21,374 புகார்கள் வந்துள்ளன. இலங்கை பாதுகாப்பு படையை சேர்ந்தவர்களின் மனுக்களும் இதில் அடங்கும்.

மேலும் இந்த ஆய்வறிக்கையானது மனித புதைகுழிகளை தோண்டி எடுக்கவும் அதனை சரியான முறையில் நிர்வகிக்கவும் சிறப்பு சட்டம் மற்றும் வரைமுறைகளை இயற்றி மேற்கொண்டு விசாரணை செய்யவும், காணாமல் போனவர்களின் அடையாளங்களை காணவும் அரசுக்கு பரிந்தரை செய்துள்ளது. உள்நாட்டின் தடயவியல் துறையை பலப்படுத்தவும், புதைகுழிகள் தொடர்பான வழக்குகளை பாரபட்சமின்றி நடப்பதை உறுதிப்படுத்தவும் வேண்டும், அதற்காக ஒரு அதிகாரம் மிக்க வழக்கு ஒன்றை தொடர வேண்டியும் மேலும் இன்னும் கண்டறியப் படாத புதைகுழிகள் பற்றி ஆய்வு செய்ய திறமை மிக்க காவல் துறையின் பிரிவை நிறுவ வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளது.

தொடர்புடைய பதிவுகள் :

இலங்கை ஜனாதிபதி மாளிகை சூரையாடப்பட்டபோது பியானோ வாசித்த போலீஸ் அதிகாரி பணிநீக்கம் ..!!
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவை பதவி விலகுமாறு பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் ம...
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பாக் ஜலசந்தியின் குறுக்கே பாலம் அமைப்பதால் ஏற்படும் பலன்கள்
இலங்கையில் கண்பார்வை சேதம் : இந்தியா கண் சொட்டு மருந்து உற்பத்தியாளர் காரணம்
கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர இலங்கை அரசுக்கு உலகவங்கி 700 மில்லியன் டாலர்கள் நிதிய...
கேரளாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா.!! கடற்படையிடம் சிக்கிய 130 கி...
இலங்கையின் வெகுஜன படுகுழிகள் : ஜனநாயகமும் மனிதமும் சேர்த்துப் புதைக்கப்பட்டது குறித்த 75 பக்க அறிக்க...
இலங்கைத் தமிழரான சங்கரி சந்திரனுக்கு ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த மைல்ஸ் பிராங்கிளின் இலக்கிய விருது
இலங்கை அரசியலில் வலுவிழக்கும் புத்த பிக்குகள்! பலவீனமான அத்தியாயத்தின் தொடக்கம்!!
சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் மரபணு ரீதியாக ஒத்திருக்கிறார்கள்: டிஎன்ஏ விஞ்ஞானிகள் கண்டுபிடிப்...
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *