Goosebumps Meaning in Tamil

Goosebumps-கூஸ்பம்ஸ்
பொருள்: Meaning
சிலிர்ப்பு, புல்லரிப்பு, கூச்ச உணர்வு, குளிர், பயம் அல்லது உற்சாகத்தால் ஏற்படும் தோலின் நிலை.
விளக்கம்: Explanation
குளிர், பயம் அல்லது உற்சாகத்தால் ஏற்படும் தோலின் நிலை- இதில் முடிகள் நிமிர்ந்து, உடல் தோலின் மேற்பரப்பில் சிறிய புடைப்புகள் தோன்றும். இதை ஒரே வார்த்தையில் சிலிர்ப்பு என்கிறோம். புல்லரித்தல் எனும் வார்த்தையும் உண்டு.
நம் உடலில் தோன்றும் ஓர் உணர்வினை விளக்க இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். பயத்தின் வெளிப்பாடுகள் நடுக்கம், சிலிர்ப்பு என்பவை. இதை மெய்சிலிர்ப்பு என்கிறோம். உடல் அல்லது உள்ளம் அடையும் கிளர்ச்சி உணர்வு சிலிர்ப்பாகும். ஒருவருக்கு குளிரும் போது அல்லது பயம் கொள்ளும் போது அல்லது உற்சாகமாக உணரும்போது புல்லரிப்பு என்பதை உணர்வார்கள். இது கை, கால்களில் ஏற்படக்கூடும்.
வார்த்தையால் விவரிக்க முடியா வண்ணம் ஒருவர் அடையும் உணர்வுப் பெருக்கு சிலிர்ப்பு ஆகும். இவ்வாறு நாம் சிலிர்ப்பு அடைவது மகிழ்ச்சி என்னும் ஓர் உணர்வுக்கு மட்டுமல்லாமல் குளிர், பயம் கொள்ளும் பொழுது, ஒருவரின் செயல்களை பார்க்கும் பொழுது, ஒருவர் பேச்சை கேட்கும் பொழுது, பாடல் வரிகளை ஆழ்ந்து கேட்கும் பொழுது, இசையில் லயிக்கும் பொழுது, கவிதைகளைப் படிக்கும்போது என பல்வேறு நிகழ்வுகளின் பொழுது, இதை அனுபவிக்கின்றோம். மேற்கண்ட நிகழ்வுகள் நடக்கும்போது நாம் அவர்களை அவர்களின் செயல்களை ஒரு வார்த்தையில் வர்ணிக்க வேண்டுமெனில் புல்லரிக்கிறது, நெகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிடலாம்.
ஆகையால் சில உணர்வுகளை ஒரு வார்த்தையில் வர்ணிக்க உபயோகப்படுத்துவதே சிலிர்ப்பாகும்.
ஒத்த சொற்கள்: (Synonyms)
Ecstasy, horripilation, rapture ( பெருமகிழ்ச்சி, பேருவகை, பரவசம்)
எதிர்ச்சொற்கள்: (Antonyms)
Calm, composure, tranquility, self- possession ( தன்னடக்க அமைதி, சமாதானம், அமைதி)
உதாரணங்கள்: Examples
When we see a lion unexpectedly, we get goosebumps
- திடீரென ஒரு சிங்கத்தை பார்த்ததால் அவளுக்கு மெய்சிலிர்த்தது. சிங்கத்தை பார்க்கும்பொழுது பயத்தால் நமக்கு சிலிர்ப்பு ஏற்படுகிறது. ஏனெனில், நாம் சாதாரணமாகப் பார்க்கும் விலங்குகளை விட உருவத்தில் பெரியதாக இருப்பதால் நமக்கு சிலிர்ப்பு ஏற்படுகிறது.
Some of the lines in the poem, will make us get goosebumps
- கவிதைகளின் சில வரிகள் சிலிர்க்க வைத்தது. கவிதையின் சில வரிகள் நாம் யோசிக்கா வண்ணம், நம்மை ஆச்சரியப்படுத்துவதால், அவை சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.
When I came to know that, I am going to meet my friend after few years, I got goosebumps
- தன் நண்பனை நீண்ட வருடங்கள் கழித்து பார்க்க போகிறோம் என்ற நினைவே அவனுடைய உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது
When I hear his voice with the music, I got goosebumps
- அவரின் குரலில் பாடலை இசையோடு கேட்கும் பொழுது எனக்கு சிலிர்க்கிறது. சில பாடல் வரிகள் நம் வாழ்வியலோடு ஒத்துப் போகிறது என்னும் நம் எண்ணமும், பாடுபவர் இனிமையான குரலும், இசையின் தன்மையும் நம்மை நெகிழவைக்கிறது.
When I see the matured activities of kids, I get goosebumps
- குழந்தையின் புரிதலோடான நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது எனக்கு சிலிர்ப்பு ஏற்படுகிறது. பொதுவான கருத்து குழந்தை அடம் பிடிக்கும் என்பது. ஆகையால், பக்குவம் கொண்ட குழந்தையை பார்க்கும் பொழுது சிலிர்க்கும்.