ஆன்ட்ராய்ட் கிட்கேட் நியாபகம் இருக்கிறதா? இழுத்து மூடுகிறது கூகுள்.

செய்தி சுருக்கம்:
கூகுள் நிறுவனம் தனது ‘ஆன்ட்ராய்ட், கிட்கேட் ஓஎஸ்[OS] ற்கு இனி பாதுகாப்பு அம்சங்களை தொடர்ந்து வழங்க முடியாது என அறிவித்துள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
இன்று ஒருவரிடம் ஸ்மார்ட் ஃபோன் இல்லையென்றால் தான் அதிசயம். அந்தளவிற்கு அதன் பயன்பாடு உள்ளது. செல்பிக்கள் ஆரம்பித்து பேங்க் டீடெயில்ஸ் வரை அனைத்தும் ஸ்மார்ட் ஃபோனில் தான் இருக்கிறது. அத்தகைய சாதனத்திற்கு பாதுகாப்பு இல்லையென்றால் ஹாக்கர்கள் தங்களது கைவரிசையை காட்டத் துவங்கிவிடுவார்கள். அதனால் தான் ஓஎஸ் அப்டேட்கள் அத்தியவாசியமாகிறது. உங்கள் ஸ்மார்ட் ஃபோன் அப்டேட் ஆக இருக்கிறதா எனத் தெரிந்துகொள்ளுங்கள்.
பின்னணி:
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் மனித குலத்தின் வேராய் விளங்குவது தகவல் தொடர்பாகும். தகவல்களை முறையாகப் பரிமாறிக் கொண்டதால் தான் மனிதகுலம் இன்று உணவுச் சங்கிலியின் உச்சத்தில் உள்ளது. தொழில்நுட்பமானது இந்த தகவல் தொடர்பை மைய்யப்படுத்தி தான் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் உச்சகட்டம் தான் ஸ்மார்ட் ஃபோன்.
இதை உடலாக வைத்து தான் உயிர்/ஆன்மா என்னும் இணையம் வேலைசெய்கிறது. ஆம் இந்த ஸ்மார்ட் ஃபோன் இல்லாமல் இலகுவாக இணையத்தைப் பயன்படுத்த முடியாது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வரை 2ஜி, 3 ஜி வரை தான் இணையத்தின் அதிகபட்ச வேகமாய் இருந்தது. ஆனால் இன்று 4 ஜியை கடந்து 5ஜியை நோக்கி செல்கிறோம். அவ்வாறு செல்லும்போது அந்த வேகத்திற்கு ஏற்றவாறு நம்முடைய ஸ்மார்ட் ஃபோன்’களை அப்டேட் செய்ய வேண்டியது கட்டாயமாகிறது. யோசித்துப்பாருங்கள் 2ஜி இணையத்தை வைத்துக்கொண்டு ரயில் முன்பதிவில் ஒரு தட்கல் பயணச்சீட்டை வாங்க முடியுமா? அதே போல நமது ஃபோன்களில் சேமித்து வைத்திருக்கும் முக்கியத் தகவல்கள், பெர்சனல் போட்டோக்கள் ஆகியவை திருடு போகமல் இருக்க நிறுவங்கள் கொடுக்கும் அப்டேட்களை முறையாக அப்டேட் செய்து கொள்ளவேண்டும்.
ஆன்ட்ராய்ட் என்னும் வார்த்தையை கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. இன்றைய பல ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்தும் முக்கியமான ‘ஆப்பரேட்டிங் சிஸ்டம்’ ஆக இது இருக்கிறது. இதனை சுருக்கமாக ‘ஓஎஸ்’ [OS] என்று அழைக்கிறோம். ஆன்ட்ராய்ட் ‘ஓஎஸ்’ கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பாகும். இது 2008 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை மெருகற்றி தான் ஒவ்வொரு அப்டேட்களாக வெளியிடுகிறார்கள். மேலும் அதற்கு இனிப்பு பண்டங்களின் பெயர்களை வைப்பது சுவாரசயமான விஷயமாகும்.
இதுவரை வந்த ‘ஓஎஸ்’ களின் பெயர்களாக இருந்தவை
1. கப் கேக் 2. டோநட் 3. எக்லேர் 4. பரோயோ 5. ஜிஞ்சர் பிரட் 6. ஹனி கோம்ப் 7. ஐஸ்கிரீம் சாண்ட்விச் 8. ஜெல்லி பீன் 9. கிட்கேட் 10. லாலிபாப் 11. மார்ஷ் மாலோ 12. நௌகட் 13. ஓரியோ 14. பை 15. திரிமாசு
இவ்வாறு ஒவ்வொரு வருடமும் புதிய பெயரில் ஓஎஸ் அப்டேட்களை கொடுக்கிறார்கள். அப்படியான சில அப்டேட்களுக்கு கொஞ்ச காலத்திற்குப் பிறகு செக்யூரிட்டி பாதுகாப்புகளை கொடுக்க இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பயனாளர்கள் கட்டாயமாக தங்களது ஸ்மார்ட் ஃபோன்களை புத்துப்பித்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தற்போது கூகுள் நிறுவனம், தனது பழைய ‘ஓஎஸ்’ ஆன ‘ஆன்ட்ராய்ட் கிட்கேட்’ டிற்கு பாதுகாப்பு அம்சங்களை தொடர்ந்து வழங்க முடியாது என அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன் ஜெல்லி பீன் சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
‘கிட்கேட் ஓஎஸ்’ சுமார் பத்து வருடங்களாக செயல்பாட்டில் இருந்து வந்தது. புதியதாக வாங்கும் ஸ்மார்ட் போன்களில், பெரும்பாலும் ஓஎஸ் அப்டேட் செய்யப்பட்டிருக்கும். ஆனால் சிலர், இன்னும் பழைய போன்களையே பயன்படுத்துவதால் அதன் ஓஎஸ் ‘கிட்கேட்’ ஆக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, ஆன்ட்ராய்ட் பயனாளர்கள் தங்களது ஸ்மார்ட் போனில் கிட்கேட் ஓஎஸ் இருந்தால் அதனை உடனடியாக அப்டேட் செய்துகொள்ள வேண்டுமாம் இல்லையென்றால் கம்பெனி பொறுப்பாகாதாம்.
இறுதியாக, ஆன்ட்ராய்ட் ஓஎஸ்’ களுக்கு உலகில் உள்ள பிரபலமான இனிப்பு பண்டங்களின் பெயர்களை வைக்கிறார்கள் ஏனென்றால், அவை நாம் வாழ்க்கையை இனிப்பாக்குகிறதாம்.