fbpx
LOADING

Type to search

உலகம் தொழில்நுட்பம் பல்பொருள்

கூகுள் ஏன் தொடர்ச்சியாக பணிநீக்கம் செய்கிறது?பின்னணி என்ன?

Google

செய்தி சுருக்கம்:

கூகுள் நிறுவனத்தில் பத்து வருடங்களாக வேலை செய்த பெண் ஊழியர் திடீர் என பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் அந்நிறுவனத்தில், ஊழியர்கள் மனநல மற்றும் நல்வாழ்வு துறையில் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

சமீபகாலமாக, கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்துவருகிறது. அமேசான், மைக்ரோ சாஃப்ட், பைஜுஸ் போன்ற எம்.என்.சி க்களும் பெருமளவில் பணியாளர் ஆட்குறைப்பை மேற்கொள்கிறது. எதிர்காலத்தில் இது இன்னும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வித ஆட்குறைப்புகளுக்கு பல காரணங்கள் இருப்பதாக அந்நிறுவன உயர்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னணி:

ஒரு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு மற்றும் வேலையிழப்பு என்பது அந்நிறுவனத்தின் தேவையைப் பொருத்தே அமையும். தேவை எப்போது அதிகரிக்கும் என்றால் எதிர்பாராத சூழ்நிலையின் காரணமாக அதிகரிக்கும். எடுத்துக்காட்டிற்கு கோவிட் தொற்றின் போது உலகமே ஸ்தம்பித்தது. பல நாடுகளில் பொதுமுடக்கத்தை அமல் படுத்தினர். அப்போது இணையத்தின் தேவை மிகவும் அதிகமாகத் தேவைப்பட்டது. ஆன்லைன் வேலை, ஆன்லைன் படிப்பு, ஆன்லைன் பொழுதுபோக்கு என இணையதளம் சார்ந்த சேவை நிறுவனங்களின் மதிப்பு எகிறியது. மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது, அதனால் ஊழியர்களின் தேவை அதிகரித்தது. அவர்களின் சம்பளமும் எதிர்பார்த்ததை விட உயர்ந்தது. ஆனால் அது சில காலத்திற்கு மட்டுமே என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தது.

கோவிட் தொற்று முடிந்த பின்னர், வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியது.  ஆன்லைன் மோகம் குறைந்தது, இதனால் தேவையும் குறைந்தது, தேவை குறைந்ததால் வேலையிழப்பு அதுவாக நிகழத்துவங்கியது. இன்று அதன் வெளிப்பாடாய் பல நிறுவனங்கள் தமது ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறார்கள். மற்ற நிறுவங்களுக்கு வேண்டுமானால் தேவை குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று கூறலாம். ஆனால் இணைய ராட்சனான கூகுள் நிறுவனத்திற்கும் ஊழியர் தேவை இல்லாமலா போகும் என்ற கேள்வி இருக்கிறது.

ஆம், பொருளாதார கோட்பாடு அனைவருக்கும் ஒன்றுதான். தேவைக் குறைவு தான் கூகுளின் இந்நடவடிக்கைக்கு காரணமாகும். கூகுள் நிறுவனம் தனது 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஏனென்றால் கூகுள் நிறுவனத்தின் கீழ் இயங்கும் ‘வேஸ் மேப்ஸ்’ நிறுவன சேவையை ‘கூகுள் மேப்ஸ்’ உடன் இணைத்ததே காரணம்.

வேஸ் மேப்ஸ்

வேஸ் மேப்ஸ் என்பது ஒரு இணைய வரைபட வழிகாட்டியாகும். இது  வேஸ் மொபைல் எனும் இஸ்ரேல் நிறுவனத்தின் தயாரிப்பாகும். கடந்த 2006 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டின் நிரலாளரால் அறிமுகப்படுத்தப்பட்டது. வேஸ் மேப்ஸ், கூகுள் மேப்ஸ் போன்ற ஒரு செயலி தான் ஆனால் அது இஸ்ரேல் நாட்டில் மட்டும் இயங்கி வந்தது. 2013 ஆண்டில் கூகுள் நிறுவனம் இந்த வேஸ் மேப்ஸ் நிறுவனத்தை 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடுத்து வாங்கியது. எனினும் அதனை கூகுள் மேப்ஸ் உடன் இணைக்காமல் தனியொரு செயலியாகவே வைத்திருந்தது. ஆனால் தற்போது வேஸ் செயலியை இனி கூகுள் மேப்புடன் இணைக்கும் நேரம் வந்துவிட்டது என்று கூகுள் நிறுவனத்தின் செயலதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கூகுளின் அற்புதமான தயாரிப்புகளில் கூகுள் மேப்ஸ் மிகவும் முக்கித்துவம் வாய்ந்தது. அதை மேம்படுத்துவதில், கூகுளின் முன்னாள் செயலதிகாரி சுந்தர் பிச்சை அதீத ஆர்வம் காட்டினார். இன்று கூகுள் மேப்ஸ் மிகவும் பிரபலமாக விளங்குகிறது. ஆனாலும் வேஸ் மேப்ஸ் பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது போல கூகுள், வேஸ் மேப்ஸ் சேவையை நிறுத்துகிறது. அதனால் அதில் பணிபுரிந்த வேலையாட்களை பணியில் இருந்து நீக்குகிறது.

பெரும்பாலான வேலை நீக்க செய்திகள் இ-மெயில் வழியாகவே அனுப்பப்படுகிறது. கூகுள் நிறுவனத்தில் சுமார் பத்து வருடங்களாக வேலைபார்த்த பெண் ஊழியர் ஒருவர், காலையில் எப்போதும் போல தனது மெயிலைத்  திறந்து பார்த்திருக்கிறார். பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டீர்கள் என்னும் மெயிலைக் கண்டவுடன் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அவர் தற்போது பிரசவ விடுமுறையில் இருப்பதாகவும் இந்த நேரத்தில் இவ்வித செய்தி சற்று மனக்கலக்கம் ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பலரும் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பல வருடங்கள் பணிபுரிந்த ஊழியர்களின் சம்பளம் மிகவும் அதிகமாக இருப்பதால், அவர்களை பெருநிறுவனங்கள் குறிவைத்து பணிநீக்கம் செய்துவருகிறது என்ற ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய பதிவுகள் :

26 ரஃபேல் ஜெட் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்சிடமிருந்து வாங்க போகும் இந்திய...
Nutmeg in Tamil
உடல் பருமன் அதிகரிப்பதற்கு பிரக்டோஸ் காரணமாகிறதா? ஆய்வுகள் சொல்வதென்ன?
தமிழால் தலை நிமிர்வோம்! தமிழில் கையோப்பமிடுவோம்!
சிங்கப்பூரில் துவங்கவுள்ள தமிழ் இளைஞர் திருவிழா - மூன்றாம் ஆண்டு கோலாகல கொண்டாட்டம் ஆரம்பம்.
ஆப்பிள் நிறுவனம் சொன்னது இதுதான். சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பக்கத்தில் படுக்கலாமா?
காட்டுத் தீயில் சிக்கித் தவிக்கும் கனடா!! ஆயிரத்துக்கும் அதிகமான காட்டுத் தீ பகுதிகள்..!!
விவேக் ராமசாமி என்னுடைய இசையைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்: ராப் ஸ்டார் எமினெம்
இந்தியா-குடிகளும் அவர்கள் குடிப்பழக்கமும் 
ஒர்க்னி இங்கிலாந்தை விட்டு வெளியேறி நார்வேயுடன் இணையப் போகிறதா? காரணம் என்ன?
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *