fbpx

Goggle Meaning in Tamil

இன்றைக்குஇணையம்என்றால்கூகுள்தான். எதைத்தேடுவதென்றாலும்மக்கள்கூகுளைத்தான்பயன்படுத்துகிறார்கள். ‘தேடுங்கள்’ என்பதைக்கூடக் ‘கூகுள்செய்யுங்கள்’ என்றுசொல்லும்அளவுக்குஅதுநம்வாழ்வில்கலந்துவிட்டது.

கணினி, செல்பேசிஎன்றுஎதிலும்கூகுளைப்பயன்படுத்தித்தகவல்களைத்தேடலாம். எழுத்துவடிவிலானபக்கங்கள், படங்கள், வீடியோக்கள், இடங்கள்என்றுபலவற்றையும்கூகுள்கொண்டுவந்துகொடுக்கிறது. நாம்தெரிந்துகொள்ளவிரும்பும்விஷயம்எதுவானாலும்சிலநிமிடங்களுக்குள்அதைப்பற்றியஅடிப்படைப்புரிந்துகொள்ளலைவழங்கிவிடுவதால்கூகுள்எல்லாருக்கும்பிடித்த, எல்லாருக்கும்பயன்படுகிறஒருகருவியாகஇருக்கிறது. அத்துடன், யூட்யூப், ஆன்ட்ராய்ட்என்றுஇன்னும்பலபுகழ்பெற்றகருவிகளைச்சேர்த்துக்கொண்டுமிகப்பெரியநிறுவனமாகவளர்ந்திருக்கிறது.

ஆனால், Google என்கிறபெயரைச்சிலர் Goggle என்றுதவறாகஎழுதுகிறார்கள். அதன்பொருள்முற்றிலும்மாறுபட்டது. அதைஇந்தக்கட்டுரையில்தெரிந்துகொள்வோம்.

காகிள்

ஆங்கிலத்தில் Goggle என்ற சொல்லை இருவிதமாகப் பார்க்கலாம். ஒன்று பெயர்ச்சொல், இன்னொன்று வினைச்சொல்.

பெயர்ச்சொல் என்பது ஒரு பொருள் அல்லது இடம் அல்லது மனிதருடைய பெயரைக் குறிப்பதாகும். ஆங்கிலத்தில் Goggle என்ற பெயர்ச்சொல்லின் பொருள், நன்கு பொருந்துகிற மூக்குக்கண்ணாடி, அதன் இருபுறமும் பாதுகாப்புப் பட்டைகள் பொருத்தப்பட்டிருக்கும்.

கண்ணாடியில் எதற்குப் பாதுகாப்பு?

சில நேரங்களில் வெளியில் ஒளி கூடுதலாக இருக்கலாம், அல்லது, ஒளி மிகுந்த விளக்கு ஒன்றைப் பார்க்கவேண்டியிருக்கலாம், நீச்சலடிக்கும்போது தண்ணீர் கண்ணுக்குள் பட்டு எரிச்சல் தரலாம், தூசு காற்றில் பறந்து வந்து கண்ணுக்குள் நுழைந்துவிடலாம், இதுபோன்ற ஆபத்துகளிலிருந்து கண்ணைப் பாதுகாக்கத்தான் காகிள் பயன்படுகிறது. பல தொழிற்சாலைகளில் ஊழியர்களுக்குக் காகிள் கொடுத்துதான் இயந்திரங்களில் பணி செய்ய அனுப்புவார்கள். கண்டிப்பாகச் செய்யவேண்டியவை என்ற தலைப்பில் இடம்பெறும் சுவரொட்டிகளில்கூடக் காகிள் இடம்பெற்றிருக்கும். மருத்துவக்காரணங்களாலும்சிலர்காகிள்பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், வழக்கமாகக் கண்ணாடி விற்கும் கடைகளில் காகிள் எளிதில் கிடைப்பதில்லை. இதற்கென்று சில தனிப்பட்ட கடைகள் இருக்கின்றன. அல்லது, இணையத்தில் உள்ள கடைகளில், மொபைல் செயலிகளில் காகிள் என்று தேடிப்பார்த்து வாங்கலாம். இதன் அளவுப் பொருத்தம் முக்கியமானது என்பதால், இயன்றவரை நேரில் பார்த்து வாங்குவது பிரச்சனைகளைக் குறைக்கும்.

வினைச்சொல் என்பது ஒரு செயலைக் குறிப்பதாகும். ஆங்கிலத்தில் Goggle என்ற வினைச்சொல்லின் பொருள், கண்களைத் திறந்துபார்ப்பது. அதாவது, எதையோ வியப்புடன் காண்பது. அப்படிப் பார்க்கும்ப்போது நம் கண்கள் நன்கு விரிந்துகொள்ளும், ‘அட, இது புதுமையா இருக்கு’ என்று சொல்வதுபோன்ற முகக்குறிப்புடன் பார்ப்போம், அதைத்தான் காகிள் என்கிறார்கள்.

தமிழில்காகிள்

கண் பார்வைக் குறைபாடு கொண்டவர்கள் அல்லது ஸ்டைலுக்காகக் கண்ணாடி அணிகிறவர்கள் பயன்படுத்தும் வழக்கமான பார்வைக் கண்ணாடிகளைத் தமிழில் ‘மூக்குக்கண்ணாடி’ என்று அழைக்கிறோம். அதன் நடுப்பகுதி மூக்கில் அமர்ந்துகொள்வதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

காகிள் என்பதும் மூக்குக்கண்ணாடிதான். ஆனால், இது மற்ற கண்ணாடிகளிலிருந்து மிகவும் வேறுபட்டுள்ளது. அதனால் இதைப் பாதுகாப்புக்கண்ணாடி அல்லது காக்குங்கண்ணாடி என்று அழைக்கலாம்.

காகிள்என்றசெயலைத்தமிழில்எப்படிஅழைக்கலாம்?

கண்களை நன்கு விரித்துப் பார்ப்பதுதான் காகிள் என்ற வினைச்சொல். அதைத் தமிழில் ‘விழி விரியப் பார்த்தல்’, ‘வியப்புடன் பார்த்தல்’, ‘வியந்து பார்த்தல்’ என்றெல்லாம் அழைக்கலாம். ‘அவன் அந்தப் பெண்ணை வியப்புடன் பார்த்தான்’, ‘நடிகர் மேடையில் தோன்றியதும் அனைவரும் வியந்து பார்த்தார்கள்’ என்பதுபோல் சொற்றொடர்களில் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *