fbpx
LOADING

Type to search

அறிவியல் உலகம் பல்பொருள்

அதிகம் புரோட்டீன் வேணுமா? பிக்கி சோய் சாப்பிடலாம்

plant based meat

Moolec என்ற இங்கிலாந்தை தளமாகக் கொண்ட நிறுவனம் மரபணு மாற்றப்பட்ட சோயா தாவரங்களை உருவாக்கியுள்ளதாகவும், இது ‘அனிமல் புரோட்டீன்’ ற்கு மாற்றாக அமையும் என்றும் ஆய்வக அறிக்கை வெளியிட்டுள்ளது.

Moolec நிறுவனம் மைக்ரோ பார்மிங் மூலம் உருவக்கியிருக்கிற இந்த சோயா பீன்ஸ்க்கு “piggy Sooy” என்றும்  பெயரிடபட்டுள்ளது. “பிக்கி சோய்” பீன்ஸில் கால் பங்கு புரதம் பன்றி இறைச்சி புரதமாம். நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த சோயா விதைகளில் உள்ள மொத்த கரையக்கூடிய புரதத்தின் அளவு  26.6%.  இது ஆய்வின் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டதை விட நான்கு மடங்கு அதிகம்.

புரத சத்து, அதன் செயல்பாடு வகையில் பல வகையில் இருந்தாலும் கரைதல் வகையில்  இரண்டு வகைகள், கரைய கூடிய குளோபுலார் புரதம், கரையா நார்சத்து புரதம். இந்த பிக்கி சோய்யில் இருப்பது கரைய கூடிய குளோபுலார் புரதம். அதாவது உடலுக்குள் ஜீரணம் ஆகி வலு சேர்க்கும் புரதம்.

piggy sooy

பார்க்க பிங்க் நிறத்தில் இருக்கும் பிக்கி சோய் பீன்ஸ், இறைச்சி உண்ணும்போது கொடுக்கும் அதே உணர்வு,சுவை, சத்து கொடுக்கும் என்கிறது moolec நிறுவனம்.

Moolec  நிறுவனம் மைக்ரோ பார்மிங் மூலம் தாவரங்களில் விலங்கு புரதங்களை மரபணு மாற்றம் செய்து உற்பத்தி செய்யும் நிறுவனம். இவர்கள் இதற்கு முன்பே பட்டாணியில் மாட்டிறைச்சி புரதங்களை மரபணு மாற்றம் செய்து காட்டி இவை இறைச்சி போலவே சுவை,அமைப்பு,மற்றும் ஊட்டச்சத்து வழங்க கூடியது என்றும் அதிக செலவு இல்லாமலும் இவை செய்ய முடியும் என்றும் நிரூபணம் செய்திருக்கிறார்கள்.பிக்கி சோய் பீன்ஸில் எவ்வகையான பன்றியின் மரபணு உபயோகப்படுத்தியிருக்கிறார்கள் என்று இவர்கள் வெளியிடவில்லை.

“நெதர்லாந்து, அமெரிக்காவில் இருக்கும் எங்கள் ஆய்வகங்களில் தாவரங்கள் கொண்டே மிருகளில் கிடைக்கும் புரதத்தை பெறுவதற்கு நிறைய பணியாற்றி வருகிறோம். இந்த ஆய்வுகளின் மூலம் மருந்தகம், அழகுசாதனப் பொருட்கள், நோயறிதல், எதிர்வினைகள் மற்றும் பிற உணவுத் தொழில்கள் போன்ற பரந்த அளவிலான தொழில்களுக்கு பல்வேறு வகையான புரதங்கள் கிடைப்பது சுலபமாகும்.  பிக்கி சோய்  போன்ற தயாரிப்புகள் நமது உணவு விநியோகத்தை இன்னும் நிலையானதாக மாற்ற உதவும். இப்போதைய சூழ்நிலையில் அறிவுசார் சொத்துரிமை காரணங்களுக்காக, எவ்வகையான பன்றியின் மரபணு உபயோகப்படுத்தியிருக்கிறோம்  என்பதை நாங்கள் வெளியிட முடியாது” என்றிருக்கிறார் moolec நிறுவனத்தின் தலைமை அறிவியல் அதிகாரி முனைவர் அமித் திங்ரா.

பார்க்க பிங்க் நிறத்தில் இருக்கும் பிக்கி சோய்யில் “மையோகுளோபின்” சேர்க்க பட்டிருக்கலாம். மயோகுளோபின் என்பது தசைகளில் காணப்படும் ஒரு வகை புரதமாகும். சிவப்பு இறைச்சிகளில் அந்த நிறத்திற்கு காரணம் இந்த மயோகுளோபின் இருப்பதனால் தான். ஆதலால் பிக்கி சோய்யில் மயோகுளோபின் இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.

ஏற்கனவே Impossible foods என்கிற நிறுவனம் சோயா செடி வேர்களில் காணப்படும்  ‘சோயா லெகிமோகுளோபின்’ என்கிற புரதத்தை அவர்கள் விற்கும் பர்கர்களில் சேர்த்து இறைச்சி உண்ணும் உணர்வை கொடுக்கும் என்று  விற்கிறார்கள். இதில் முக்கிய தகவல் என்னவென்றால் இவர்கள் பர்கரில் சேர்க்கும்  இந்த லெகிமோகுளோபின் புரத்ததை மரபணு மாற்றம் செய்த ஈஸ்ட் மூலம் உற்பத்தி செய்கிறார்கள். தாவர அடிப்படையிலான லெகிமோகுளோபின் உற்பத்தி செய்வது கடினம் என்பதே இதற்க்கு காரணம்.

Motif FoodWorks  என்ற மற்றொரு நிறுவனம் மாட்டிறைச்சி மயோகுளோபினை இறைச்சிக்கு  மாற்றாக “ஹெமானி” என்ற சேர்க்கையை  உற்பத்தி செய்கிறது. இவர்கள் ஈஸ்ட் கொண்டு மக்கா சோளத்தை நொதித்து அதிலிருந்து “ஹெமானி”யை தயாரிக்க பணியாற்றிக்கொண்டிருக்கிறன்றனர்.

மாலிகுலார் ஃபார்மிங் ஜெனெடிக்  எஞ்சினீரிங், மைக்ரோ ஃபார்மிங், போன்ற புதிய தொழிலுட்பங்கள் உலகம் முழுவதும் இப்போது பிரபலமடைந்து வருகிறது. இவை உணவிற்கான மிருக வதையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் நாம் உண்ணும் காய் கனிகளிலே இன்னும் ஊட்டச்சத்து கூடுதலாக கிடைக்க வழிவகை  செய்கிறது.

Good Food Institute என்கிற இலாப நோக்கற்ற உலகளாவிய நிறுவனம் மாற்று புரத கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்த வேலை செய்யும் நிறுவனங்களின் சர்வதேச நெட்வொர்க் ஆகும். சமீபத்தில் இந்த நிறுவனம் “மாலிகுலார் ஃபார்மிங்” ஐ மாற்று புரத ஆராய்ச்சியின்  ‘நான்காவது தூண்’ என்று அறிவித்திருன்றனர். இவர்களின் அறிக்கைபடி உலகளவில் விலங்குகள் இல்லாத பால் புரதங்கள் உட்பட பல்வேறு தயாரிப்புகளை வளர்க்க தற்போது 12 நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.

“அமெரிக்காவில் பிக்கி சோய்யை வளர்க்கவும் விற்கவும் தேவையான அனுமதிகளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது நிறுவனம். அமெரிக்காவில், புதிய வகையான உணவுகள்  FDA ன் தன்னார்வ முன்சந்தை ஆலோசனை திட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்படும்.ஆதலால் ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் அமெரிக்காவில் சுலபமாக அனுமதி கிடைக்கலாமென்று எதிர்பார்க்கிறோம்” என்கிறார் முனைவர் அமித் திங்ரா.

பிற இனங்களிலிருந்து சேர்க்கப்பட்ட மரபணுக்களைக் கொண்ட மரபணு மாற்றப்பட்ட தாவரங்கள் பல தசாப்தங்களாக ஐரோப்பா உட்பட உலகின் பல பகுதிகளில் பரவலாக வளர்க்கப்படுகின்றன. உதாரணமாக, Bt பயிர்கள் என்று அழைக்கப்படுபவை பெரிய விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் பூச்சிகளைக் கொல்லும் பாக்டீரியா புரதத்திற்கான கூடுதல் மரபணுவைக் கொண்டுள்ளன.

மரபணு மாற்றம் செய்த உணவுகள்  என்ற சர்ச்சையில் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசு கட்டுப்பாட்டாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் விஞ்ஞானிகள்  என்றும் பலரும் உள்ளனர். உண்மையில் இவர்களுடன் நுகர்வோரும் உள்ளனர். மார்கழியில் மழையும், மே மாதங்களில் கடும் வெயிலும் சுற்றுச்சூழலின் மாற்றங்களின்  பாதிப்புகள் என்று அறியாமலா இருக்கிறோம். “ட்ரான்ஸ்ஜெனிக்” தாவரங்களுக்கென தீவிர கண்டீப்பான விதிமுறைகள் வருமாயின் எதிர்காலம் அதை ஆதரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

விரைவில் பிக்கி சோய் மார்க்கெட்டில் எதிர்ப்பார்க்கலாம்.

தொடர்புடைய பதிவுகள் :

ஒர்க்னி இங்கிலாந்தை விட்டு வெளியேறி நார்வேயுடன் இணையப் போகிறதா? காரணம் என்ன?
தனிமை இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கலாம்
செவ்வாய் கிரகத்தில் ஓடிய ஆறுகளுக்கு என்ன நடந்தது?
பங்குச் சந்தை முதலீட்டில் வெற்றி ரகசியம் என்ன?
செவ்வாய் கிரகம் கடலால் சூழப்பட்டிருந்ததா..? செவ்வாயில் உயிர்கள் உள்ளனவா..? இக்கிரகத்திலுள்ள நிலச்சரி...
படைப்பாற்றலில் கற்பனைத்திறனில் மனிதனை மிஞ்சும் சாட்ஜிபிடி (ChatGPT)!! ஆகச்சிறந்த படைப்பாளிகள் கூட சா...
சர்வேஎண்பார்ப்பதுஎப்படி?
2023 செப்டம்பரில் நிகழவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய மல்யுத்த வீரர்கள் இந்திய அடையாளத்துடன...
விண்வெளியில் சாதிக்க தயாராக உள்ள இந்தியா, 2040ல் வின்வெளித்துறையில் அசுர வளர்ச்சி அடைந்து விடும் என்...
எப்படிப்பட்டவர்கள் தங்களுக்குள் ஈர்க்கப்படுகிறார்கள்? புதிய டேட்டிங் ஆப்கள் சொல்வதென்ன?!
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *