Freelancer Meaning in Tamil

Freelancer meaning in Tamil: ‘Freelancer’ என்கிற இந்த ஆங்கிலச் சொல்லின் தெளிவான தமிழ்ப் பொருள், அதன் ஒத்த சொற்கள் (Synonyms) எதிர்ச் சொற்கள் (Antonyms) மற்றும் எளிதான பயன்பாட்டு எடுத்துக்காட்டுகளோடு (Easy usage examples) சேர்த்து இங்கு சற்று விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
‘Freelancer’ உச்சரிப்பு = ஃப்ரீலான்சர்.
‘Freelancer’ என்பதன் பொருள், ‘பணி அடிப்படையில் சம்பளம் பெறும் சுயாதீன வேலையாள்’ என்பதாகும்.
‘Freelancer’ என்கிற சொல், noun (பெயர்ச் சொல்) ஆக செயல்படுகிறது.
Freelancer-(noun) தமிழ்ப்பொருள்:
சுயாதீன வேலையாள்.
Freelancer-noun (பெயர்ச்சொல்):
- ஒரு குறுகிய கால வேலைக்காக, ஒப்பந்தப் பணி அடிப்படையில் சம்பளம் பெறும் சுயாதீன வேலையாள்.
- குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்காக மட்டுமல்லாமல், அனைத்து நிறுவனங்களுக்காகவும் பொதுவாக வேலை பார்ப்பவர்.
- பகுதி நேரப் பணியாளர்.
Example (உதாரணமாக):
English: Hire a freelancer to write this article.
Tamil: இந்த கட்டுரையை எழுத ஒரு பகுதி நேர எழுத்தாளரை நியமிக்கவும்..
English: Many people have turned as freelancers due to unemployment in the country.
Tamil: நாட்டில் நிலவும் வேலையின்மை காரணமாக, அதிகமானோர் பகுதி நேர வேலையாட்களாக மாறியுள்ளனர்.
English: A freelancer has to obey his contract.
Tamil: ஒரு ஒப்பந்தப் பணியாளர் தன் ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும்..
English: He prefers to work as a freelancer than a usual worker.
Tamil: அவர் வழக்கமான ஒரு வேலையாளாக இருப்பதை விட, சுயாதீனப் பணியாளராக இருக்கவே விரும்புகிறார்.
‘Freelancer’ Synonyms-antonyms:
‘Freelancer’ என்பதன்ஒத்த (Synonyms) சொற்கள்பின்வருமாறு:
Adviser
Condottiere
Consultant
Servicer
Self employed
Free agent
Mercenary
Non-Staff
Part-timer
Temporary
Toil
Unaffiliated
Independent
‘Freelancer’ என்பதன்எதிர்ச்சொற்கள் (Antonyms) பின்வருமாறு:
Abiding
Conformist
Continual
Conservative
Dependent
Emulator
Enduring
Everlasting
Salaried