வெளிநாட்டு மாப்பிள்ளைகள் செய்யும் புதுவித மோசடி! பெற்றோர்களே எச்சரிக்கை!!

செய்தி சுருக்கம்:
NRI மாப்பிள்ளைகள் என்ற மாயை இந்தியர்களின் திருமண சந்தையில் புதுவிதமான மோசடி ஒன்றை தோற்றுவித்துள்ளது. அதிக வரதட்சணையை வாங்கிக் கொண்டு திருமணம் செய்தல், திருமணத்திற்கு பிறகு மனைவியை கண்டு கொள்ளாமல் விடுதல், வன்கொடுமை, சுரண்டல் போன்ற பிரச்சனைள் தலைதூக்கி வருகின்றன.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
வெளிநாட்டு மாப்பிள்ளைகள் மீதான மோகம் இப்போது வேறு விதமான பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. பெற்றோர்கள் அனைவருக்கும் வெளிநாடுகளில் செட்டிலான மாப்பிள்ளைகள் தங்கள் பெண்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கையையும் புதிய வாய்ப்புகளையும் வழங்க முடியும் என்று நம்புகின்றனர்.
அதில் உண்மை இல்லாமல் இல்லை. இன்றைக்கும் இலட்சக்கணக்கான வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல்ல முறையில் திருமணம் செய்து கொண்டு தங்கள் மனைவிகளை தங்கள் பணிபுரியும் நாடுகளுக்கே அழைத்துச் சென்று விடுகின்றனர் அல்லது அவர்களை இந்தியாவிலேயே வைத்து பராமரிக்கின்றனர்.
உலகத்தில் உருப்படியான ஒன்று உருவாகி வரும் போது அதைப்போலவே போலிகள் உருவாகுது இயல்பு. வெற்றிகரமான வெளிநாடு வாழ் மாப்பிள்ளைகளை கண்டு ஆசை கொள்ளும் இந்திய மணப்பெண்களையும் அவர்களது பெற்றோர்களையும் குறி வைத்து புதிதாக மோசடி ஒன்று நடந்தேறி வருகிறது.
பின்னணி:
2018 ஆம் ஆண்டு இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த 8 பெண்கள் தம் மனுவில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனைவிகள் வெளிநாட்டில் வசிக்கும் தங்கள் கணவர்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
2015 முதல் 2019 வரை 6000க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்திய ஆண்களுக்கு எதிரான புகார்களை இந்திய அரசாங்கம் பெற்றுள்ளது. இந்த பிரச்சினையை விளக்கும் மனதை கணக்க வைக்கும் உதாரணங்கள் பல இருக்கின்றன.
பஞ்சாப்பை சேர்ந்த ஒரு குடும்பம் தன் மகளுக்கு ஜெர்மனியின் ஹாம்பார்க் நகரில் வசிக்கும் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியரை மணமகனாக தேர்ந்தெடுக்கிறது. கிட்டத்தட்ட 8500 டாலர்களை இக்குடும்பம் மணமகனுக்கு வரதட்சணையாக வழங்குகிறது. தங்கம், விலை உயர்ந்த ஆடைகள், மர சாமான்கள் போன்றவை திருமண பரிசாக அளிக்கப்பட்டுள்ளன.
2009இல் திருமணமான ஒரு மாதத்திலேயே மணமகன் ஜெர்மனிக்கு திரும்பி விடுகிறார். அங்கு அவர் ஒரு உணவகத்தில் வேலை செய்வதாகவும் விரைவில் தன் மனைவியை அங்கு அழைத்துக் கொள்வதாகவும் உறுதியளித்திருக்கிறார். இப்போது அந்த மணப்பெண்ணுக்கு 43 வயதாகிறது. இத்தனை வருடங்களில் அந்த கணவர் சில முறைகள் மட்டுமே அந்த பெண்ணை சந்தித்து இருக்கிறார்.
உண்மை என்னவென்றால், அந்த கணவருக்கு ஜெர்மனியில் ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த உண்மை இவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு தெரிய வருகிறது. இப்போது அந்த குடும்பம் மணப்பெண்ணின் குடும்பத்தின் மீது வன்கொடுமை, மோசடி மற்றும் ஏமாற்றுதல் போன்றவற்றிற்காக வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞான ரீதா கோக்லி கூறுகையில், இவ்வாறு வெளிநாடு வாழ் ஆண்களை திருமணம் செய்து பிரிந்து வாழும் இந்திய பெண்களை “ திருமண விதவைகள்” என்று குறிப்பிடுகிறார். கணவனை பிரிந்து வரும் கொடுமையோடு சேர்த்து தங்களது மாமியார் வீட்டில் ஒரு பணிப்பெண்ணாக வேலை செய்யும் கொடுமையையும் இப்பெண்கள் அனுபவிக்கின்றனர். இப்பெண்களின் இவ்வாழ்க்கை சூழல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு வழிவகுக்கும் என்கிறார் கோக்லி.
இத்தகைய கணவனால் கைவிடப்பட்ட பெண்களைப் பற்றி ஆய்வு செய்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் வித்யா ராமச்சந்திரன் அவர்கள் கூறுகையில் இந்த பெண்கள் பெரும்பாலும் தங்கள் மாமியார்களிடமிருந்து துஷ்பிரயோகத்தை அனுபவிப்பதாக குற்றம் சாட்டுகிறார். பெரும்பாலும் இந்த பெண்கள் வரதட்சணைக்காக துன்பப்படுத்தப்படுகின்றனர்.
1961 முதல் இந்தியாவில் வரதட்சணை சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் இந்த ஆய்வாளர்கள் சட்டத்தை ‘பல் இல்லாதது’ என்று அழைக்கின்றனர். ஏனெனில் இன்று வரை அச்சட்டத்தின் அமலாக்கத்தை கண்காணிக்க உருப்படியாக எந்த வழிமுறையும் இல்லை.
2021 இல் உலக வங்கியால் நடத்த பெற்ற ஒரு ஆய்வில் இந்தியாவில் நிகழும் பெரும்பாலான திருமணங்களில் மணமகளின் குடும்பம் சராசரியாக மணமகனின் குடும்பத்தை விட ஏழு மடங்கு அதிகமாக செலவழிக்கிறதாம்.
இங்கு நாம் சத்வேந்தர் கவுர் சத்தி என்ற 42 வயதான பெண்ணை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். பல ஆண்டுகளாக இந்திய பெண்களை ஏமாற்றி வரும் வெளிநாடு வாழ் ஆண்களுக்கு எதிராக இவர் போராடி வருகிறார்.
தனிப்பட்ட முறையில் சத்தியும் இவ்வாறு பாதிக்கப்பட்டவர் தான். தனது NRI கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடியது மட்டுமல்லாமல் லூதியானாவில் உள்ளூர் நீதிமன்றத்தில் விவாகரத்து பெரும் வரை பஞ்சாப் மற்றும் புதிதில்லியில் பல போராட்டங்களை நடத்தியவர் இவர். அதன் விளைவாக தன் கணவரிடமிருந்து விவாகரத்தும் ஜீவனாம்சமும் பெற்றார்.
2016 ஆம் ஆண்டு சக்தி தன்னை போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக NRI ஹஸ்பண்ட்ஸ் இன்டர்நேஷனல் (ABBNHI) என்ற அமைப்பை நிறுவி நூற்றுக்கணக்கான பெண்களுக்கு உதவி வருகிறார்.
புதிய தட்டணைச் சட்டம் 498 ஏ பிரிவின் கீழ், ஒரு பெண்ணை அவர் கணவர் அல்லது அவரது உறவினர்கள் கொடுமைப்படுத்தினால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் பெற்று தரலாம். குடும்ப வன்முறையில் இருந்து பாதுகாக்கும் இச்சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பெண்கள் தனக்கான நீதியையும் இழப்பீட்டையும் பெறுவதோடு தங்கள் திருமண வீட்டில் வாழ்வதற்கான உரிமையையும் பெற முடியும்.
சத்தியின் அமைப்பு கையாண்ட பெரும்பாலான வழக்குகளில் குற்றம் புரிந்த என் ஆர் ஐ கணவர்களின் பாஸ்போர்ட்டுகள் இந்திய அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டதாக கூறுகிறார். நீதிமன்றம் அந்த கணவர்களை பிரகனப்படுத்தப்பட்ட குற்றவாளி என அறிவித்து அவர்களது பாஸ்போர்ட்டை ரத்து செய்யலாம். இதன் விளைவாக அந்த NRI கணவர்கள் தங்கள் மனைவிகளிடம் ஒரு தீர்வை எட்டுவதற்கு உந்துதலாக அமையும்.
2019 பிப்ரவரியில் இந்தியாவின் தற்போதைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சிவராஜால் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமண பதிவு மசோதாவை நிறைவேற்றுமாறு வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து திருமணங்களும் 30 நாட்களுக்குள் உள்ளூர் அமைப்புகளில் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் அவர்களது பாஸ்போர்ட்டை ரத்து செய்ய மரியாதைகளுக்கு வழங்க வேண்டும்.
மார்ச் 2020ல் வெளி விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் வெளிநாடு வாழ் ஆண்களின் கூடுதல் தகவல்களை பதிவு செய்வதன் மூலம் இந்த மசோதாவை முழுமையானதாக மாற்றுவதற்கு திருத்தங்களை கோரியது. மூன்று ஆண்டுகளாகியும் இந்த இன்னும் மசோதா சட்டமாக மாறவில்லை.
இவ்வாறு வெளிநாடு வாழ் ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்ததோடு பணரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் கணவரால் முற்றிலுமாக கைவிடப்பட்ட பெண்கள் முதுமை மற்றும் ஏழ்மை குறித்த கவலையில் உள்ளனர். தாங்கள் செலவழித்த வரதட்சணை தொகை மற்றும் நஷ்டஈட்டை பெறுவதன் மூலம் தங்களது பிற்கால வாழ்க்கையை பாதுகாப்பானதாக ஆக்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
இந்த பெண்களும் இவர்களுக்காக போராடும் இந்த அமைப்புகளும் இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.