fbpx
LOADING

Type to search

பல்பொருள்

Flax Seeds in Tamil

English: flax seeds (noun)

Tamil: ஆளி விதைகள் (பெயர்ச்சொல்)

லினம் உசிட்டாடிஸ்சிமம் (Linum usitatissimum) என்னும் தாவரப் பெயர் கொண்ட ஆளிச் செடி (flax), அதன் நாருக்காகவும் விதைக்காகவும் பயிரிடப்படுகிறது. ஆளிச் செடியின் இழைகளிலிருந்து தயாரிக்கப்படும் துணி, லினன் (linen) எனப்படுகிறது. 

ஆளி விதைகளை தயிர், காய்கறி மற்றும் பழக் கலவைகள், பச்சடிகள், சாறுகள், வேகவைத்த பொருட்கள் உள்ளிட்ட பல உணவுகளில் எளிதாகச் சேர்த்து உண்ணலாம். உலர்ந்த, பழுத்த ஆளி விதைகளிலிருந்து ஆளிவிதை எண்ணெய் (linseed oil) அல்லது ஆளி எண்ணெய் (flax oil) பிரித்தெடுக்கப்படுகிறது. எண்ணெய் அடிப்படையிலான வண்ணப்பூச்சுகளும் சாயங்களும் ஆளிவிதை எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ஆளி எண்ணெய் சமையல் எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது. 

ஆளி விதை (linseed/flaxseed) புரதம், நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், தையாமின், தாமிரம் உள்ளிட்ட பலவிதமான ஊட்டச்சத்துகள் கொண்டது. ஆளி விதையில் உள்ள ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் என்னும் ஒமேகா-3 வகைக் கொழுப்பு அமிலம் இதயத்திற்கு நலன் தரக்கூடியது. இவ்விதையில் புற்றுநோய் வளர்ச்சியைக் குறைக்க உதவும் லிக்னன்கள் எனப்படும் ஊட்டச்சத்துகள் உள்ளன. ஆளி விதையில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், அது குடல் நலனைக் காக்க உதவுகின்றது. இந்த நார்ச்சத்து நம் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. நீண்ட நேரம் பசி ஏற்படுவதைத் தடுத்து எடை குறைப்பில் உதவவும் செய்கிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் ஆளி விதை பயனுள்ளதாக இருக்கிறது. இதன் கரையக்கூடிய நார்ச்சத்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கின்றது.   

இத்தனை நன்மைகள் அளிக்கும் ஆளி விதை உண்பதற்குப் பெரும்பாலும் பாதுகாப்பானதே. ஆனாலும் இதை அளவாகவே உண்ணவேண்டும். நார்ச்சத்து அதிகம் உள்ளதால் அதிக அளவில் ஆளி விதைகளை உண்டால் செரிமானப் பிரச்சினைகள் ஏற்படலாம். அப்படி உண்பது குமட்டல், வாயு, வயிற்று வலி, வீக்கம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அளவாக ஆளி விதைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நலம் சிறக்கும் என்பதில் ஐயமில்லை. 

Examples: 

  1. இந்தக் கடையில் ஆளி விதைகள் கிடைக்கும். (Flax seeds are available in this store.)
  2. நீ ஆளி விதையைப் பார்த்ததில்லையா? (Haven’t you seen flax seed?
  3. பல நூற்றாண்டுகளாக ஆளி சாகுபடி செய்யப்படுகிறது என்று ஆசிரியர் கூறினார். (The teacher said that flax has been cultivated for many centuries.)
  4. அம்மா காய்கறிக் கலவையின் மீது ஆளி விதைகளைத் தூவினார். (Mother sprinkled flax seeds on the vegetable salad.)
  5. ஆளி விதை நாம் தினசரி உண்ண வேண்டிய ஒரு பொருள். (Flax seed is an item that we must consume every day.)
  6. இந்த சின்னஞ்சிறிய ஆளி விதைகளுக்கு பெரும் ஊட்டச்சத்து மதிப்பு இருக்கிறது. (These small flax seeds have a great nutritive value.) 
  7. ஆளி விதைகளை நிறையத் தின்றால் வயிறு வலிக்குமா? (Will overeating flax seeds cause stomach-ache?)
  8. மாமா ஆளி விதைகளைச் சாப்பிட்டதும் வயிறு நிறைந்த உணர்வு தோன்றுவதாகச் சொன்னார். (Uncle said that he felt full after eating flax seeds.

தொடர்புடைய பதிவுகள் :

அமேசான் மழைக்காடுகளில் எண்ணெய் எடுக்க நிரந்தர தடை - இயற்கையை மதித்து வாக்களித்த ஈக்வடார் நாட்டு மக்க...
புது பொலிவு பெறும் ஏர் இந்தியா - வண்ணங்கள், அடையாளங்கள், சீருடைகள் அனைத்திலும் மெருகேற்றப்பட்டு நவீன...
இனிப்பதெல்லாம் இனிப்பல்ல! செயற்கை இனிப்பூட்டிகள் புற்றுநோயை உண்டாக்கலாம் - ஆய்வு முடிவு!!
RIP Meaning in Tamil
தொடர் கனவுகள்-ஏன்? எதற்கு?எப்படி?
இயற்கை போற்றத்தக்கது ஏன்..?
New Year Wishes in Tamil
Entrepreneur Tamil Meaning
உலக நாடுகளில் மிகவேகமாக உயரும் அரிசியின் விலை - இதற்கு முக்கிய காரணங்களாக "சீரற்ற பருவமழையால் பாதிக்...
இலங்கையின் டி. ஆர். சி வரைவில் தமிழர்களின் கவலைகளுக்கு தீர்வு எதுவும் இல்லை - சுமந்திரன்
Tags:
முன்னைய பதிவு
அடுத்த பதிவு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Next Up