fbpx
LOADING

Type to search

பல்பொருள்

Fend Meaning in Tamil

இக்கட்டுரையில் ‘Fend’ என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் அர்த்தம், அதன் ‘இணைச்சொற்கள்’ (Synonyms), ‘எதிர்ச்சொற்கள்’ (Antonyms) மற்றும் எளிதான எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

‘Fend’ உச்சரிப்பு= ஃபெண்ட்

Fend meaning in Tamil

‘Fend’ அல்லது ‘Fend-off’ என்பதன் அர்த்தம் வரவிருக்கும் ஒரு ஆபத்து அல்லது விரும்பத்தகாத சூழ்நிலையை தடுத்தல் அல்லது அதை நெருங்க விடாது எதிர்த்து செயல் படுவதாகும்.

தேவையை சமாளிக்க ஏற்பாடு செய்தலை ‘fend for’ என்று கூறுவதுண்டு. 

இந்த சொல்லைத் தொடர்ந்து வரும் வார்த்தையை வைத்து எதிர்மறையான பொருளை இது அளிக்கிறது. இதன் பின் ‘off’ என்ற சொல் வந்தால் துரத்துதல் அல்லது விலக்குதல் என்ற பொருளைத் தரும். மாறாக இதன் பின் ‘for’ என்ற சொல் வந்தால் காத்தல், அளித்தல் என்ற அர்த்தத்தை அளிக்கும்.

ஃபெண்ட் என்ற இந்த வார்த்தை பெரும்பாலும் ‘verb’ (வினைச்சொல்)-ஆக செயல்படுகிறது.

‘Fend off’ / ‘Fend for’ – உதாரணங்கள் (Examples):

English: The hunter fended-off the tiger with his gun.

Tamil: வேட்டைக்காரன் புலியை தன் துப்பாக்கியைக் கொண்டு விரட்டினான்.

English: The star actress wanted to fend away the crowd from her.

Tamil: நட்சத்திர நடிகை கூட்டம் தன்னிடம் நெருங்கி வராமல் தடுக்க விரும்பினார்.

English: During the interrogation, the fraudster tried to fend off critical questions.

Tamil: விசாரணையின் பொழுது, ஏமாற்றிய நபர் நெருக்கடியான கேள்விகளைத் தவிர்க்க முயன்றார்.

English: After moving to a different city, she had to fend for herself.

Tamil: வேறு நகரத்திற்கு சென்ற பிறகு, அவள் தன்னைத் தானே பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது.

English: In order to get justice under to the law, the victim must fend suitable evidence.

Tamil: சட்டத்தின் படி நியாயம் கிடைக்க, பாதிக்கப்பட்டவர், தகுந்த சாட்சியை அளிக்க வேண்டும்.

English: A confident person can in any situation fend for himself.

Tamil: தன்னம்பிக்கை நிறைந்த ஒரு நபர் எந்த சூழ்நிலையிலும் தன்னை தற்காத்துக் கொள்ள முடியும்.

‘Fend’ Synonyms-antonyms

‘Fend for’ / ‘Fend-off’ என்பதன் ஒத்த (Synonyms) சொற்கள் அவற்றின் தமிழ்ப் பொருளோடு பின்வருமாறு:

Fend for:

கவனித்துக்கொள்ளுதல் / பார்த்துக்கொள்ளுதல் (take care)

பத்திரப்படுத்துவது / பாதுகாத்துக் கொள்வது / தற்காத்துக் கொள்வது (Protect / Safeguard / Secure)

ஏற்பாடு செய்தல் (provide for)

ஆதரிப்பது / தாங்குவது (Support)

கிடைக்க செய்ய / அளிப்பது (Make available / cover for)

Fend-off:

விரட்டுதல் / ஓட்டி விடுதல் (ward off)

நகர்த்துதல் (Shift away)

Defend / Avert – தடுத்தல் / தவிர்த்தல்

Keep off – தொலைவில் வைத்தல்

Ward off – விலக்குதல்

‘Fend-off’ என்பதன் எதிர்ச்சொற்கள் (Antonyms) பின்வருமாறு.

ஏற்றுக்கொள்ளுதல் / ஒப்புக்கொள்ளுதல் (Accept)

அனுமதித்தல் (Allow)

வரவேற்றல் (Welcome)

தொடர்புடைய பதிவுகள் :

Vice Versa Meaning in Tamil
மனிதர்கள் தாங்கக்கூடிய அதிகபட்ச வெப்பநிலை என்ன? ஆய்வு முடிவில் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்!!
சர்வேஎண்பார்ப்பதுஎப்படி?
மாகாணத் தேர்தல்களை நடத்த விக்கிரமசிங்கேவிடம் மோடி வலியுறுத்த வேண்டும் - இலங்கை தமிழ்ச் சமூகம் மோடியி...
Justice Meaning in Tamil
டுன்சோ நிறுவனம் இரண்டு மாத ஊதியத்தை ஊழியர்களுக்கு வழங்காதது ஏன்?
வீடியோக்களில் இருந்து பிரேம்களை படம் பிடிப்பதை எளிதாக்கியுள்ளது கூகுள் குரோம் பிரௌசர்..!!
இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ளும் இலங்கை! இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் எல...
உடல்நலனை மட்டுமல்ல மனநலனையும் பாதிக்கும் ஜங்க் உணவுகள்! எதைத் தின்கிறோமோ.. அதுவாகிறோம்…!!
கேரளாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா.!! கடற்படையிடம் சிக்கிய 130 கி...
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *