Facebook மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி..?

Facebook என்பது நாம் அனைவருமே பயன்படுத்தும் மிகப் பிரபலமான ஒரு சமூக வலைத்தளம் ஆகும்! சமூகத்தைப் பற்றிய நம்முடைய கருத்துகளைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளவும். நட்பைப் பேணவும் பயன்படும் இந்தத் தளத்தில் கிட்டத்தட்ட இந்தியாவில் மட்டுமே 329.65 மில்லியன் அளவில் பயனாளிகள் உள்ளனர். இதில் கணக்கு வைத்திருக்காத ஆட்களை இந்தக் காலத்தில் பார்ப்பதே மிகவும் அரிதான ஒன்று என்றால் கூட அது மிகையில்லை. வெறும் பொழுது போக்குக்காக மட்டும் பயன்படும் Facebook மூலம், நாம் பணமும் சம்பாதிக்கவும் முடியும். அதற்கான வழிகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
Likes மூலம் சம்பாதித்தல்:
Facebook’ல் இடப்படும் பதிவுகளோ, போட்டோக்களோ, வீடியோக்களோ நமக்கு அது பிடித்திருந்தால், அவற்றை நாம் ‘லைக்’ செய்து பாராட்ட முடியும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், அந்த லைக்’களை நம்மால் விற்று பணமாக்கவும் முடியும் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. எந்த ஒரு பிரபலாமான Facebook page நடத்துவோருக்கும், அதில் அதிகாமான லைக்ஸ் இருக்க வேண்டுமெனும் ஆசை இருக்கும்! அதற்காக, அவர்கள் பணம் செலவழிக்கக் கூடத் தயங்குவதில்லை. இத்தனை லைக்குகள் பெற்றுத் தந்தால், இவ்வளவு பணம் தரத் தயார் எனும் மனநிலையில் இருக்கும் ஆட்கள் நிறைய உண்டு. அப்படியான ஆட்களை நாம் அணுகி, அவர்களுக்குத் தேவையான லைக்குகளைப் பெற்றுத் தருவதன் மூலம் பணம் ஈட்டலாம். ஆனால், இதற்கான முன்னேற்பாடுகளும், அனுபவமும் அவசியம்.
விளம்பரதாரர் பதிவு:
இதற்கு, அதிக followers கொண்ட ஒரு Facebook Page நம்மிடம் இருப்பது மிக அவசியம். காரணம், அந்தப் பக்கம்தான் விளம்பரங்களுக்கான முதலீடு ஆகும். நமக்கு விளம்பரம் தரும் வணிகர்களும் அதைத்தான் விரும்புவர். அவர்கள் தரும் பணமும், நம்முடைய followers, லைக்ஸ் பொறுத்துதான் அமையும். நம்மிடம் மில்லியன் கணக்கில் followers கொண்ட ஒரு பக்கம் இருந்தால், விளம்பர ஏஜென்சிகள், ஆன்லைனில் பொருட்கள் விற்கும் ஸ்டோர்கள், போன்ற நிறுவனங்களிடம் நம் பக்கத்தில் விளம்பரங்கள் இடும்படிக் கேட்டு, அதற்காக ஒரு தொகையை கட்டணமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இணை சந்தைப்படுத்தல் : (Affiliate Marketing)
Amazon, Flipkart, Myntra, Snap deal முதலான அனைத்து ஆன்லைன் விற்பனைத் தளங்களுமே, Affiliate Marketing அல்லது Social Media Marketing என்பதை ஊக்குவிக்கின்றன. அதற்கான தனித் திட்டங்களும் அவர்களிடம் உண்டு. அம்மாதிரியான ஏதேனும் ஒரு திட்டத்தில் நம்முடைய Facebook பக்கத்தை இணைத்துக் கொண்டு, அவர்களின் பொருட்களை சந்தைப் படுத்தி, அவற்றை விற்று அதன் மூலம் வரும் கமிஷன் தொகையால் சம்பாதிக்கலாம்.
Facebook Traffic உருவாக்குதல்:
நமக்கென ஒரு வலைதளம் அலல்து blog போன்ற வலைப் பதிவு இருந்து அதன் மூலம் பணம் ஈட்டுகிறீர்கள் என்றால், Facebook traffic அதற்கான வாய்ப்புதான். நம் வலைப்பதிவின் இடுகை இணைப்புகளை, Facebook பகக்த்தில் கொடுத்து traffic உருவாக்குதன் மூலம், AdSense வழியில் பணம் சம்பாதிக்க முடியும்.
Facebook வீடியோக்கள் உருவாக்குதல்:
இந்த வழிமுறை கிட்டத்தட்ட யூடியூப் சேனல்கள் போன்றதொரு வழிமுறைதான். யூடியூப் போலவே, வீடியோக்கள் உருவாக்கி சம்பாதிக்க Facebook நிறுவனத்திலும் சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளுக்கு ஏற்றவாறு நாம் வீடியோக்கள் உருவாக்கி பதிவிட்டால், அவற்றின் மூலம் சுலபமாக பணம் உண்டாக்கலாம்.
Fan page விற்றல்:
Facebook fan page -களை விற்பதற்கு, நிறைய இணையதளங்கள் உள்ளன. நாம் ஒரே நேரத்தில் பல பக்கங்களை உருவாக்கி, அதில் அதிக இரசிகர்களைக் கொண்டு நிர்வகித்து வந்தால், குறிப்பிட்ட எண்ணிக்கையைத் தொட்டதும் அந்தப் பக்கங்களை இந்தத் தளத்தில் நல்லதொரு விலைக்கு விற்க முடியும்.