fbpx
LOADING

Type to search

அறிவியல் உடல் நலம் தெரிவு

தினசரி இந்த மூன்று உடற்பயிற்சிகளை பின்பற்றினால் போதும் – படுக்கையில் ஆண்கள் எளிதில் சாதிக்கலாம். உறுதியான உடல் உடலுறவில் வெற்றி தரும்.

செய்தி சுருக்கம்:

தினசரி வாழ்வில் உடற்பயிற்சியை ஒரு அங்கமாக கொண்டவர்களின் கட்டில் வாழ்க்கை இன்பமுடையதாக இருக்கும். தினமும் 10 நிமிடங்கள் ஒதுக்கி இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள மூன்று எளிதான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் ஆண்கள் இனிமேல் கட்டில் இன்பத்தில் கரைகாணா சுகம் பெற முடியும் என வல்லுநர்களின் ஆய்வறிக்கை சொல்கிறது. உடலினை உறுதிசெய் என்ற நம் முன்னோர்களின் பழமொழியை இக்கட்டுரை இன்னமும் விரிவாக வழிமொழிகிறது.

உடலுறவின் போது தத்தம் துணையுடன் முழுமையான இன்பத்தை அடைய முடியாமல் ஏங்கித்தவிக்கும் ஆண்களுக்கு குதூகலம் அளிக்கக்கூடிய புதுவகையான ஆராய்ச்சி ஒன்றினை ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்தினர். அந்த அறிக்கையின் அடிப்படையில், தினசரி 10 நிமிடங்கள் ஒதுக்கி இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள மூன்று விதமான உடற்பயிற்சிகளை முறையாக செய்கின்ற ஆண்கள் அனைவரும் உடலுறவு சமயங்களில் மிகவும் துடிப்புடனும், துள்ளலுடனும், தணியாத ஆர்வத்துடனும் ஈடுபடுவதாக கண்டறிந்துள்ளனர். நீடித்த உடலுறவு நிலைக்க வேண்டி, ஹார்மோன்களை தூண்டக்கூடிய எந்தவொரு செயற்கையான மருந்துகள் ஏதுமின்றி இயற்கையான முறையில் அவர்களால் முழுமையான இன்பத்தை தரவும், அடையவும் முடிந்ததென ஆய்வில் தகவல்.

ஒவ்வொரு முறையும் இதில் பரிந்துரை செய்யப்பட்ட பயிற்சிகளை செய்து முடித்த 10 லிருந்து 40 நிமிடங்களின் முடிவில் உடலும் மனமும் தளர்வடைந்த நேரத்தில் நம் உடலானது உடலுறுவுக்கான ஹார்மோன்களின் சுரப்பியை சிறப்பாக செயல்பட வைக்கிறது என தெரிய வந்துள்ளது.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

இந்த ஆய்வை Siegen மற்றும் Trier பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களது 45 மாணவர்களை கொண்டு நிகழ்த்தியுள்ளனர். அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பல்வேறுவிதமான தொடர் பரிசோதனைகள் மூலம் இந்த ஹார்மோன் மாற்றங்களை கண்டறிந்துள்ளனர். சோதனையின் ஒரு கட்டமாக சிலருக்கு இந்த மூன்று உடற்பயிற்சிகள் முடிந்த பின்னர் செயற்கையான வகையில் பாலுணர்வை தூண்டி அதனால் மாறுதல் அடையும் அவர்களின் இதயத்துடிப்பு, கண்களின் இமைத்துடிப்பு மற்றும் தோல்களின் வழியாக (வியர்வை) கடத்தப்படும் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை முறையாக ஆய்வு செய்துள்ளனர். அதனடிப்படையில் பாலியல் உணர்வை வெளிப்படையாக தூண்டும் விஷயங்களால், முறையான உடற்பயிற்சி செய்து வருபவர்கள் எளிதில் அதிகமான அளவு தூண்டப் பட்டதாகவும், உடலுறவு இச்சையை உடனடியாக அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
<span;>Anglia Ruskin University ன் பொது சுகாதார துறையை சேர்ந்த Prof. Lee Smith என்பவர் கூறும்பொழுது “உடற்பயிற்சியின் மூலம் எழுச்சியடையக் கூடிய உடல்ரீதியான பாலுணர்வு தூண்டுதல்கள் நம் நரம்பு மண்டலத்தின் ஹார்மோன் மாற்றங்களாக இருக்கலாம் என்றும், என்றாவது ஒருநாள் செய்யக்கூடிய உடற்பயிற்சி இதை தூண்ட வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், தினசரி உடற்பயிற்சியை கடைபிடித்து வரும் உறுதியான உடல்களின் ஹார்மோன்கள் மாத்திரமே இவ்விதமான தூண்டுதல்களை உருவாக்கும், அதனால் படுக்கையில் தோல்வியை சந்திக்கும் ஆண்களும் பாலியல் குறைபாடு உள்ளவர்களும் இந்த மூன்று பயிற்சிகளை முறையாக மேற்கொள்ளும் போது அவர்களாலும் விரைவில் உடலுறுதி பெற்று சிறப்பான கட்டில் வாழ்க்கையை வாழமுடியும்” என்றும் கூறியுள்ளார்.

<span;><span;><span;>நம் உடலில் பாயும் இரத்தமானது உடலில் Oxytocin மற்றும் Dopamine எனும் ஹார்மோன்களை சுரக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே, அதேபோல உடற்பயிற்சியின் போது மட்டுமே சுரக்கக்கூடிய Endorphins என்கின்ற ஹார்மோன் இந்த இரண்டு ஹார்மோன்களோடு கலக்கும் போது அது படுக்கையறையில் சாதிக்க வைக்கும் கலவையாக மாறுகிறது.
<span;>இத்துடன் ஸ்மித் வாரத்திற்கு ஐந்து நாட்கள் 30 நிமிட ஓட்டப்பயிற்சியை மேற்கொள்ள பரிந்துரை செய்கிறார், ஏனெனில், இதே ரீதியான மற்றொரு ஆய்வு தினசரி ஓடும் பயிற்சி என்பது ஆண்களுக்கு Dapoxetine ஆக செயல்படுகிறது என்று கூறுகிறது, Dapoxetine என்பது விரைவில் விந்து வெளியேற்றம் நடைபெறும் ஆண்களுக்கு மருத்துவர்களால் பிரிஸ்கிரைப் (Prescribe) செய்யப்படும் மாத்திரை ஆகும்.

Exercising Intimacy ன் நிறுவனர் Dr. Ali Novitsky இந்த மூன்று உடற்பயி<span;><span;>ற்சிகளை ஆண்களுக்கு பரிந்துரை செய்கிறார். முறையான உடற்பயிற்சி என்பது நம் எதிர்மறை எண்ணங்களான யோசனைகளையும், தயக்கங்களையும் உடைத்து நம் உடலை முழுமையான உடலுறவிற்கு ஏற்றதாக தயார் செய்வதுடன் முழு ஆர்வத்துடனும், நெருக்கத்துடனும் உடலுறவில் ஈடுபட நம் உடலினை உறுதியுடனும் உற்சாகத்துடனும் வைக்க உதவுகிறது.

ஒரு ஓட்டப் பந்தய வீரர் எவ்வாறு தன் கால்களின் வலியை உணரும் தன்மையை முறையான பயிற்சியால் பழக்கப்படுத்தி வலியுணராமல் மாற்றியமைத்து எல்லா பந்தயங்களிலும் தொடர்ந்து களைப்படையாமல் ஓடுகிறாரோ அதேபோல அனைத்து ஆண்களும் முறையாக அவரவர் உடலை உடற்பயிற்சியின் துணைகொண்டு வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் பேணுவதின் மூலம் கட்டில் விளையாட்டின் உச்சத்தை எளிதில் அணுக முடியும்.

ஓட்டப்பந்தயம் ஆகட்டும் கட்டில் சுகம் ஆகட்டும் எரிந்து வெந்து தணியும் கலோரிகளும், தாகங்களும் என்னவோ ஒரே அளவு தான். இவை இரண்டும் முறையே பழுதின்றி நடைபெற நம் மூளையின் உத்தரவின் பேரில் நம் உடலில் சுரக்கும் Endorphins மற்றும் Testosterones உதவ வேண்டும்.

இந்த பரிசோதனைகள் உண்மைதானா என சோதிக்க விரும்பும் அன்பர்கள் கீழ்காணும் மூன்று ‘S’Exerciseகளை முறையாக நாள்தோறும் பயன்படுத்தி கட்டிலில் உங்கள் காதல் துணையுடன் முன்னேற்றங்களை அடைய பாருங்கள்.

வேகநடை (Brisk Walk)


உங்கள் இதயத்துடிப்பு வேகமாக அதிகரித்து பின் மெதுவாக குறைய வேண்டும் அதற்காக இந்த முதல் பயிற்சி.
பயிற்சியின் முதல் 30 நொடிகள் விறுவிறுவென கைகளை வீசி வேகமாய் நடக்க வேண்டும், அடுத்த 30 நொடிகள் அந்த வேகத்தை படிப்படியாக குறைத்து மெதுவான நடையாக மாற்றுங்கள். இதே பயிற்சியை தொடர்ந்து மூன்று முறை செய்ய வேண்டும்.

ஸ்கிப்பிங்(கயிருடன் குதித்தல்) மற்றும் தண்டால் (push-up)

இந்த பயிற்சிக்கு வேகம் அவசியம், முதல் 20 நொடிகள் ஸ்கிப்பிங் ஆடிவிட்டு உடனே அடுத்த 20 நொடிகள் தண்டால் (push up) எடுக்க வேண்டும், மிச்சமுள்ள 20 நொடிகள் தோப்புக்கரணம் போட்டு முடிக்க வேண்டும். இந்த இரண்டாவது பயிற்சியை முடிக்க ஒரு நிமிடம் மட்டுமே. இதில் தண்டால் எடுக்க சிரமப்படும் அன்பர்கள் முழங்கால்களை ஊன்றிக் கொண்டு எடுத்தால் கூட போதுமானது. இதுவும் மூன்று செட் செய்ய வேண்டும்.

உட்கார்ந்து இருந்து நடத்தல் (squat position)

உங்கள் முதுகினை சுவற்றில் நேராக சாய்த்துக்கொண்டு squat நிலையில் அப்படியே அமர வேண்டும், 30 நொடிகள் இதே நிலையில் நீடித்த பின்பு 30 நொடிகள் நின்ற இடத்திலேயே மிலிட்டரி மார்ச் மாதிரியான நடையை நடக்க வேண்டும். இந்த மூன்றாவது பயிற்சியையும் தொடர்ந்து மூன்று முறை செய்ய வேண்டும். ஓய்வு நேரம் உட்பட மொத்தம் 12 நிமிடங்களில் இந்த மொத்த பயிற்சிகளும் முடிந்துவிடும், தினமும் 12 நிமிடங்கள் ஒதுக்குங்கள் உடலுறுதி வேண்டுவோர் அனைவரும்.

பின்னணி:

Cleveland Clinic ன் சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று பலவிதமான பாலியல் கோளாறுகள் காரணமாக உலகில் பெரும்பான்மை தம்பதியினர் மற்றும் தனி நபர்கள் உடலுறவில் திருப்தியடைய முடியாமல் மருத்துவ மனையை நாடுகின்றனர் என்று சொல்கிறது. மேலும் இத்தகவலின்படி மருத்துவமனைக்கு வரும்  43 சதவிகித பெண்களும் 31 சதவிகித ஆண்களும் இந்த வகையான குறைபாட்டுடன் மருத்துவ உதவிகளை நாடுவதாக தெரிய வந்துள்ளது.

இந்த மாதிரியான உடலுறவு குறைபாடுகளுக்கு முக்கியமான நான்கு காரணங்களை மருத்துவத்துறை முன்வைக்கிறது. அவையாவன
1. Desire Disorders – ஆர்வமின்மை கோளாறு: உடலுறவின் மீதான ஆசையும் ஆர்வமும் குறைதல்
2. Arousal Disorders – தூண்டுதலில் கோளாறு: உடலுறவின்போது போதுமான முனைப்பு காட்டாமல் தவிர்க்க முனைவது அல்லது உணர்ச்சி மிகுதியால் விரைவில் விந்து வெளியேறுவது
3. Orgasm Disorders – உடலுறவின் போது உச்சகட்டத்தை அடைய முடியாமல் போவது, விரைவில் உச்சகட்டத்தை அடைவது, இருவரும் ஒருவருக்கொருவர் சம்பந்தமின்றி தனித்தனியாக உச்சமடைவது
4. Pain Disorders – வலியினால் கோளாறு: உடலுறவின் போது உச்சத்தை எட்டும்போது வலியினால் அவதிப்படுவது.

இவ்வாறான உடல் சார்ந்த உடலுறவு குறைபாடுகளை களைந்து அனைவரும் சுகமான முறையில் கட்டில் சுகமடைய இந்த கட்டுரை பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை அன்பர்களே.

உடற்பயிற்சியை தினசரி வாடிக்கை ஆக்கிகொள்ளுங்கள் உடலுறவின் போது உங்கள் துணையை வெல்லுங்கள் சந்தோசங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொடர்புடைய பதிவுகள் :

சூப்பர் ஏஜர்கள்: முதுமையிலும் அவர்கள் மூளை ஆரோக்கியமாக இருப்பது எப்படி?
மாரடைப்பைத் தொடர்ந்து வலி ஏற்பட்டால் உடனடி மரணம் நிச்சயம்! எச்சரிக்கும் சமீபத்திய ஆய்வு!
புதிதாக உருவாகும் படைப்பூக்கம் - டிமென்ஷியா பாதிப்பு தரும் வரம்!
வெப்பமா? குளிரா? செக்ஸ் உணர்வை அதிகரிக்க எந்த சூழல் பொருத்தமானது..?! 
சாராயத்தால் சீரழியும் பல குடும்பங்களின் இன்பகரமான இல்லறவாழ்வு.
இ - சிகரெட் பாதுகாப்பனதில்லை..  அது உங்கள் ஆண்மையை பாதிக்கிறது.. விந்தணுக்களை சுருக்குகிறது.. எச்சரி...
வெயிட் லாஸ்'க்கு இப்படி சாப்பிடுங்கள். எளிமையாக கொழுப்பை கரைக்க எளிமையான மூன்று டிப்ஸ்.
தூக்கத்திற்கு மெலட்டோனின் பயன்படுத்துவது கெடுதலா?
சுமேரியர்கள் கண்டுபிடித்த கால அமைப்பு! ஐயாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்திவரும் மனித இனம்!!
செவ்வாய் கிரகத்தில் ஓடிய ஆறுகளுக்கு என்ன நடந்தது?
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *