fbpx
LOADING

Type to search

பல்பொருள்

Ethics Meaning in Tamil 

Ethics Meaning in Tamil 

பொருள்:(meaning)

நெறிமுறைகள், நீதிநெறி, ஒழுக்கவியல், அறநெறி, அறவியல், கொள்கை, நேர்மையான, அறம், மரபு நெறிப்பாடு, நடத்தை விதி, தார்மீக பிரச்சனைகள் பற்றி, கலாச்சாரம், நல்லொழுக்கம்.

ஒத்த சொற்கள்:(synonyms)

Moral philosophy, morality, value orientation (அறநூல், அறநெறி, நன்நெறி, நீதிசாஸ்திரம், நீதி நூல், கொள்கை)

எதிர்ச்சொற்கள்:(Antonyms)

Immorality, unethical, dishonest (அநீதி, ஒழுக்கமற்ற, நியாயமற்ற முறையில்)

விளக்கம்:(Explanation)

Ethics என்பது நல்ல முடிவுகளையும் கெட்ட முடிவுகளையும் வேறுபடுத்தி பார்க்க உதவுவது. எது சரி தவறு என்பதை நிரூபிப்பது ஆகும். இது ஒரு தனிநபர், சமூகம் அனைத்திற்கும் பொருந்தும். ஒரு கட்டமைப்பை உருவாக்கி சரி, தவறை புரிந்து கொள்ள உதவுவது நெறிமுறை ஆகும். நெறிமுறை  என்பது நல்ல செயல் மற்றும் நடத்தையுடன் தொடர்புடையது. பயனுள்ள திருப்தியான வாழ்வே முக்கியமானது என்பது இவர்களின் கருத்தாகும். இது மனித நடத்தை தொடர்பாக ஒருவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஆய்வு செய்கிறது. எளிதாக சொல்வதானால் ஒரு தனிநபர் அல்லது ஒரு சமூக குழுவால் ஏற்றுக் கொள்ளப்படும் சரியான மற்றும் தவறான கொள்கைகள் ஆகும். நெறிமுறை தனிமனிதன், சமூகத்திற்கு மட்டுமன்றி நிறுவனம், குழு போன்றவற்றிற்கும் உண்டு. ஒருவர் போற்றி பாதுகாக்கும் ஒழுக்கமே  நெறிமுறை ஆகும். அதாவது ஒரு நபரின் நடத்தை அல்லது ஒரு செயல்பாட்டை வழிநடத்தும் கொள்கைகள் ஆகும்.

 உதாரணங்கள்: (Examples)

1. In our society, we are following some ethics and values 

  நமது சமூகத்தில் சில நெறிமுறைகள் மற்றும் விழுமியங்களைப்   பின்பற்றுகிறோம்.

2. Our elders will teach us about the ethics

 நமது பெரியவர்கள் நெறிமுறைகளைப் பற்றிக் கற்றுக் கொடுப்பார்கள்.

3. Even medical science have some ethics

 மருத்துவத் துறையில் கூட சில நெறிமுறைகள் உள்ளன

4. She never follows any ethics in her life

 அவளுடைய வாழ்வில் அவள் எந்த நெறிமுறைகளையும் பின்பற்றுவது இல்லை.

 தொடர்புடைய சொற்கள்:

Applied ethics-செய்முறை அறவியல்

Business ethics-தொழிலியல் அறம், வணிக நெறிமுறை

Code of ethics-அறநெறி நியதி

Tags:
முன்னைய பதிவு
அடுத்த பதிவு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Next Up