fbpx
LOADING

Type to search

இந்தியா சிறப்புக் கட்டுரைகள் தெரிவு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை அதிரவைத்த பூகம்பம், கவுகாத்தியில் வீட்டைவிட்டு அலறியடித்து வெளியேறிய மக்கள் – பதிவான ரிக்டர் அளவு 5.4

Seismogram

செய்தி சுருக்கம்:

கடந்த திங்கள் கிழமை (14-08-2023) இரவு 8:20 மணிக்கு மேகாலயா மாநிலத்தின் சிரபஞ்சியில் இருந்து 49km தென்கிழக்கில் (Lat: 25.02 & Long: 92.13) 16km ஆழத்தில் 5.4 ரிக்டர் அளவிலான பூகம்பம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் (National Center for Seismology) தகவல் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பத்தின் காரணமாக ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக சில நொடிகள் நீடித்துள்ளது. இதனால் பயந்துபோன மக்கள் பாதுகாப்பு தேடி வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

ரிக்டர் அளவுகோலில் 5.4 என்று பதிவாகியுள்ள இந்த பெரிய அளவிலான பூகம்பம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளில் நில அதிர்வை உணரச் செய்துள்ளது. இதுவரையிலும் இந்த பூகம்ப பாதிப்பால் எந்தவொரு உயிரிழப்போ, சேதாரங்களோ உண்டானதாக தகவல்கள் எதுவும் வரவில்லை. இந்த நிலநடுக்கமானது அதன் மையப்பகுதியான இந்திய பங்களாதேஷ் எல்லையோரத்தில் இருந்து 43km சுற்றளவு வரை 16km ஆழத்தில் இருந்து அதிர்ந்துள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வகம் தெரிவித்துள்ளது.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

தேசிய பூகம்ப ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி மேகாலயா மாநிலத்தின் சிரபுஞ்சிக்கு 49km தென்கிழக்கில் பங்களாதேஷ் பகுதியில் உருவான நிலநடுக்கமானது அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த அதிர்வை உண்டாக்கியுள்ளது. கடந்த திங்கள் கிழமை இரவு 8:20 மணி அளவில் இந்த பூகம்பம் பதிவாகியுள்ளது, சில நிமிடங்கள் வரை நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 என்று பதிவு செய்துள்ளது.

மேகாலயாவில் உள்ள நிலநடுக்க ஆய்வு மைய அதிகாரி மேலும் சில தகவல்களை அளித்துள்ளார். அதன்படி, 16km வரை ஆழத்தில் துவங்கிய நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பங்களாதேஷ் பகுதியாகும், இந்த இடத்திற்கு மிக அருகில் தான் மேகாலயாவின் மேற்கு Jaintia Hills மாவட்டத்தின் Dawki என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட அதிர்வும் நடுக்கமும் மேகாலயா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உணரப்பட்டுள்ளது, அதேபோன்று அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களின் சில பகுதிகள் வரை இந்த நிலநடுக்கம் நீடித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த பூகம்பத்தின் விளைவாக எந்தவொரு உயிரிழப்போ, பொருள் சேதாரங்களோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் வரவில்லை என்று இந்த அலுவலகத்தின் பேரிடர் மேலாண்மை துறையின் அதிகாரி ஒருவர் தகவல் அளித்துள்ளார்.

இந்திய நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் சில, பூகம்ப அபாயம் அதிகம் ஏற்படும் பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. எனவே இந்த பகுதிகளில் அவ்வப்பொழுது சிறு சிறு பூமி அதிர்வுகள் உண்டாகி கொண்டே இருக்கும். இந்த முறை சற்று பெரிய அளவிலான பூகம்பத்தை மேகாலயா சந்தித்துள்ளது, இந்த நிலநடுக்கத்தின் விஸ்தீரணம் 43km சுற்றளவு வரை இருந்துள்ளது. இம்மாதிரியான மலைப்பிரதேசங்களில் ஏற்படும் பூகம்பம் சிலசமயங்களில் நிலச்சரிவை உண்டாக்கிவிடும் அபாயம் இருக்கிறது, நேற்று நிகழ்ந்த பூகம்பத்தில் அம்மாதிரியான அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை என தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு 8 மணிக்கு மேல் இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்கள் பலவற்றில் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிகிறது, அதிலும் குறிப்பாக அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்துள்ளது. அஸ்ஸாம் மாநில தலைநகரான கவுகாத்தியில் பூகம்பத்தின் மூலம் உண்டான நில நடுக்கமானது சில நொடிகள் தொடர்ந்து நீடித்ததால் பீதியடைந்த மக்கள் பயத்துடன் அலறியடித்து தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பு தேடி வெளியில் ஓடி வந்துள்ளனர்.

இதே நிலநடுக்க தரவுகளை பற்றி அமெரிக்காவின் Geological Survey அமைப்பு தெரிவிக்கும் விவரங்கள், இந்த பூகம்பம் 5.5 ரிக்டர் அளவுள்ளது எனவும், இது இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் பங்களாதேஷின் பகுதியில் இருந்து ஆரம்பித்தது என்றும் தெரிவித்துள்ளனர். அவர்களின் தகவலின்படி இந்த பூகம்பம் 10km ஆழத்தில் நிகழ்ந்தது எனவும், அஸ்ஸாம் மாநிலத்தின் Karimganj நகரத்தின் வடமேற்கில் 18km தொலைவில் இந்த பூகம்பத்தின் மையப்புள்ளி இருந்ததாக கூறியுள்ளனர். மேலும் இவர்கள் கூறும்போது இந்த பூகம்பம் 36km சுற்றுவட்டார பகுதிகளில் இதன் அதிர்வை உண்டாக்கி இருக்கும் என்றும், பங்களாதேஷின் Sylhet நகரம் வரை இதன் தாக்கம் இருந்திருக்கும் என்றும் தகவல் அளித்துள்ளனர்.

இதேபோன்று இந்தியாவில் பூகம்பம் எங்கு ஏற்பட்டாலும் அதன் விவரங்களை நாம் உடனே அறிந்துகொள்ளும் வகையில் National Center for Seismology ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் “BhooKamp App” ஆகும். இது மக்கள் பயன்பாட்டிற்காக playstore மற்றும் Apple ஸ்டோரிலும் கிடைக்கும், மக்கள் இலவசமாக பதிவிறக்கி கொள்ளலாம்.

 

பின்னணி:

இயற்கை பேரிடர்களில் ஒன்றான பூகம்பம் அதிகம் தாக்கக்கூடிய இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த திங்களன்று ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் இரவு 8:20 மணியளவில் ஏற்பட்டுள்ளது, இது அங்கிருந்த மக்களை சற்றே அச்சப்பட வைத்துள்ளது. அங்கு வாழும் மக்கள் இம்மாதிரியான பூகம்பங்களுக்கு பழக்கப் பட்டவர்கள் தான், எனினும் நேற்று ஏற்பட்ட பூகம்பமானது சில நொடிகள் தொடர்ந்து நீடித்ததால் பலர் பயத்தில் வீட்டை விட்டு வெளியில் பதறியடித்து ஓடி வந்துள்ளனர். ஆயினும் அவர்கள் பயந்தது போல பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தாமல் வந்த வண்ணமே அது மறைந்தும் போனது. பூமி அன்னை தன்னை ஒரு சிறு குலுக்கலினால் நமக்கு நினைவு படுத்தி செல்வது போல இருக்கிறது இந்த சம்பவம்.

மக்கள் அனைவரும் நீர் நிலைகளில் கழிவுகளை கொட்டாமலும், பூமியின் கனிம வளங்களை அளவுக்கு மீறி எடுக்காமலும் இருந்தால் மட்டுமே இந்த அழகிய பூமியை நம் அடுத்த தலைமுறைக்கும் அதற்கு பின்னர் வரக்கூடிய சந்ததிகளுக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் தர முடியும். முடிந்தவரையில் அனைவரும் இயற்கை வளங்களை சுரண்டாமலும், காடுகளை அழிக்காமலும், நீர்வளத்தை மாசு படுத்தாமலும் வாழ்வது வருங்கால மனித இனத்திற்கு தகுந்ததாக இந்த பூமியை வைத்திருப்பதற்கு மிக உசிதமான காரியங்கள் ஆகும்

 

தொடர்புடைய பதிவுகள் :

BRICS கூட்டமைப்பில் இணைந்த ஆறு புதிய நாடுகள் - சர்வதேச அரங்கில் வலுவான அமைப்பாகிறது பிரிக்ஸ்.
உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்க உடலுறவு அவசியமா? நெருக்கமும் உடலுறவும் ஒன்றா..? வித்தியாசத்தைத் த...
அரசுப் பள்ளிகளில் தமிழ்க் கொடை திட்டம்: தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் மரபணு ரீதியாக ஒத்திருக்கிறார்கள்: டிஎன்ஏ விஞ்ஞானிகள் கண்டுபிடிப்...
நீண்ட நேரம் திரையைப் பார்ப்பதால் குன்றி நிற்கும் குழந்தைப்பருவம் பற்றிய ஆய்வு சொல்வதென்ன..?!
அமேசான் மழைக்காடுகளில் எண்ணெய் எடுக்க நிரந்தர தடை - இயற்கையை மதித்து வாக்களித்த ஈக்வடார் நாட்டு மக்க...
குறைவான உடலுறவுக்கும் டிமென்ஷியாவிற்கும் தொடர்பு உள்ளதா? புதிய ஆய்வில் தகவல்.
பேர்லினில் வளர்ப்புப் பராமரிப்பில் இருக்கும் குழந்தை அரிஹாவை திருப்பி அனுப்புமாறு ஜேர்மனிக்கு இந்திய...
விண்வெளியில் சாதிக்க தயாராக உள்ள இந்தியா, 2040ல் வின்வெளித்துறையில் அசுர வளர்ச்சி அடைந்து விடும் என்...
கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு 12 வருடங்கள் கால அவகாசம் அளித்தது இந்தியா.
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *