fbpx

Dude Tamil Meaning

English: dude

Tamil: (கொச்சை வழக்கு) ஆள்; நபர்; நண்பா; டேய்; அடேய்; அடியே; பங்கு; மச்சி

Explanation: 

Dude என்ற சொல் பெரும்பாலும் இளைஞரால் ஒருவரை ஒருவர் கூப்பிடவோ அல்லது ஒரு நபரைக் குறிக்கவோ பயன்படுத்தப்படுகிறது. ‘டூட்’ என்பது பொதுவாக ஒரு ஆண் தனிநபரைக் குறிக்கும் ஒரு அமெரிக்கப் பேச்சுவழக்காக இருந்தாலும் அது இப்போது இருபாலரையும் குறிக்கிறது. இச்சொல் 19-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு வரை மிக நாகரீகமான முறையில் உடையணிந்த ஒரு ஆண் நபரைக் குறித்தது; அல்லது கிராமப்புறத்திற்கு வருகை தந்த ஒரு நகரத்து நபரைக் குறித்தது. அது 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எந்தவொரு ஆண் நபரையும் குறிப்பதாகப் பரிணமித்தது. தற்போது இந்தச் சொல் எந்தவொரு பாலினம், இனம், கலாசாரம் சார்ந்த நபரையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

Examples: 

  1. நான் இதற்கு முன் இங்கே அந்த நபரைப் பார்த்ததே இல்லை. (I’ve never seen that dude here before.)
  2. நண்பா, நீங்கள் வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. (Dude, I’m very glad you came.)
  3. ‘டூட்’ என்றால் என்ன? டூட் என்றால் நல்ல பையன் என்று பொருள்! (What does ‘dude’ mean? Dude means a nice guy!)
  4. டேய், என் செல்போன் எங்கே? (Dude, where’s my cellphone?)
  5. அவள் ஒரு நவநாகரீகமான ஆள். (She is a cool dude.)
  6. அடேய்! அங்கே போகாதே. (Dude! Don’t go there.)
  7. இப்போதாவது நீ பணம் கொடு, மச்சி. (At least now you pay, dude.)
  8. அடியே, சில நாட்களுக்கு யாரையும் பார்க்காமல் இரு. (Dude, for some days keep to yourself.)
  9. ‘டூட்’ என்ற வார்த்தையுடன் தொடங்கி சொல்லப்பட்ட மிகவும் புத்திசாலித்தனமான விஷயம் என்ன என்று நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன். (I ask myself what the most intelligent thing ever said was that started with the word ‘dude’.)
  10. பங்கு, நீ செய்யிறது சரின்னு எனக்குத் தோணலை. (Dude, I don’t think what you do is right.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *