fbpx
LOADING

Type to search

இந்தியா உலகம் சிறப்புக் கட்டுரைகள்

அமெரிக்காவில் இந்துக்கள் மீதான வெறுப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரிப்பு – அமெரிக்க சட்டமன்றத்தின் உதவியை நாடியது அங்குவாழும் இந்தியர்களின் இந்துமத கூட்டமைப்பு.

செய்தி சுருக்கம்:

வாஷிங்டன் செய்தி நிறுவன தகவலின் படி, அமெரிக்காவில் வாழும் இந்து மதத்தை பின்பற்றும் இந்திய வம்சாவழியை சேர்ந்த செல்வாக்கு மிக்கவர்கள் ஒரு அமைப்பாக கூடி அமெரிக்க சட்டமன்றத்தை நாடியுள்ளனர். அமெரிக்காவில் தற்போது அதிகரித்து வரும் இந்துக்களின் மீதான துவேஷத்தை காட்டக்கூடிய அமெரிக்கர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வழிகளை விரைவாக கண்டறிய வலியுறுத்தியுள்ளனர். மேலும், அமெரிக்காவில் வாழ்கின்ற இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு உண்டான உரிமைகளை பாதுகாக்க விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநகரத்தின் US Capitol நகரில் நிகழ்ந்த இரண்டாவது வருட “தேசிய இந்துக்களின் உரிமை நாள்” மாநாட்டு சந்திப்பின் போது நிகழ்ந்த பேச்சுவார்த்தையில் 21 மகாசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அப்போது அமெரிக்காவில் இந்துக்கள் பாதுகாப்பு குறித்தும், சமீபத்தில் அங்கு அதிகரித்துள்ள இந்துக்கள் மீதான வெறுப்புணர்வு குறித்தும் அமெரிக்க சட்டமன்றத்தில் விவாதிக்க தீர்மானம் எடுத்துள்ளனர். இந்த மாநாட்டு கூட்டம் பற்றி அவர்கள் தெரிவித்த போது “இப்போது அமெரிக்காவில் இந்துக்களின் மீது பாகுபாடு காட்டப்படுவது அதிகரித்துள்ளது, சட்டத்தின் கவனத்திற்கு இந்த விஷயங்களை கொண்டு செல்வது மிக அவசியமாகிறது” என்றனர்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

வட அமெரிக்காவில் வாழ்கின்ற அனைத்து இந்து மதத்தினரும் இணைந்து ஆரம்பித்துள்ள ( CoHNA – Coalition of Hindus of North America) என்கிற அமைப்பால் US CAPITOL நகரத்தில் நிகழ்த்தப்பட்ட அவ்வமைப்பின் இரண்டாவது மாராட்டுக் கூட்டத்தில் நாள் முழுவதும் நிகழ்ந்த பேச்சு வார்த்தையின் போது அதில் கலந்துகொண்ட உறுப்பினர்களிடம் “அமெரிக்காவில் கருப்பர்கள் போன்ற இனங்களை மட்டுமே பாகுபாடு காட்டி நடந்துகொள்வது நடைமுறையில் இருந்தது, ஆனால் தற்போது மதங்களிலும் பாகுபாடு பார்ப்பது அதிகரித்துள்ளது, இந்துக்கள் அமெரிக்காவில் அச்சுறுத்தப்படுவதும் , மிரட்டப்படுவதும் தற்போது அதிகம் நிகழும் ஒன்றாகி விட்டது” என்று Rich McCormick என்ற மகாசபை உறுப்பினர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கலிபோர்னியா அரசியலயமைப்பு சட்டம் SB403 போன்ற இன்னும் சில சட்டங்களும் இங்கு இனவெறி, பாகுபாடு மற்றும் மக்களுக்குள் பிளவினை உருவாக்கும் செயல்களை தண்டிக்கும் வகையில் உள்ளன, ஆனாலும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் இன, மதரீதியாக வகைப்படுத்த இதுவரையிலும் அமெரிக்காவின் சட்டங்கள் இயற்றப்படாமல், எந்தவொரு தீர்மானத்திற்கும் வர இயலாமல் தீர்வுகாண முயன்று கொண்டே உள்ளது, சில முயற்சிகளில் தங்களுடைய மத, இன விவரங்களை அளிப்பதை மக்கள் நிராகரித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

அப்போது பதில் கருத்துகளை கூறிய உறுப்பினர்கள் இதன் மீதான சில வாதங்களை முன்வைத்தனர், Georgia மாகாணத்தை சேர்ந்த மகாசபை உறுப்பினர் ஒருவர், “இந்துக்களின் மீதான வெறுப்புணர்சிகளை, பாகுபாடு காட்டும் செயல்களை தடுக்குமாறு கோரி நம் சட்டத்தை அணுகுவதற்கு அமெரிக்கர்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது” என்று கூறினார்.

ஶ்ரீ தானேதர் (Sri Thanedar) என்ற இந்து மகாசபை உறுப்பினர் கூறும்போது “நான் ஒவ்வொரு தனி மனிதருக்கும் அவரது மத நம்பிக்கையை வெளிப்படுத்திக்கொள்ள உரிமையும், சுதந்திரமும் உண்டு என்பதில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன், இதுபோன்ற துவேஷங்களும், அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் இந்துக்கள் மீது காட்டப்படும் போது நான் அதை எதிர்ப்பேன்” என்று கூறினார். அவர் அங்கு கலந்து கொண்டிருந்த பல்வேறு அமெரிக்க நகரங்களை சேர்ந்த சபைகளின் உறுப்பினர்களுடன் மதத்தின் மீதான சுதந்திரத்தையும், உரிமையையும் தற்காத்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை பற்றி சிறிது நேரம் பேசினார்.

அதில், “இந்து கலாச்சாரத்தை சார்ந்த மக்கள் இயல்பில் அமைதியானவர்கள், ஆயினும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப் படுவதும், அச்சுறுத்தப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அமெரிக்காவில் இந்துக்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும், மற்ற மதத்தினரை போலவே இங்குள்ள இந்து மத மக்களும் அவர்களுடைய மத நம்பிக்கையை போற்றவும், வழிபாடுகள் செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும், எந்த விதமான அச்சுறுத்தல், பாரபட்சம் மற்றும் வெறுப்பான நடவடிக்கைகள் இனிமேல் இருக்கக்கூடாது” என்று கூறினார்.

இந்துக்களின் ஒருங்கிணைப்பு என்பது அமெரிக்காவில் பெரிதாக இல்லை எனவும், இருக்கின்ற சில அமைப்புகளும் வெவ்வேறு நகரங்களில் இருப்பதால் ஒரே சமயத்தில் ஒன்று கூடுவது என்பது இயலாத காரியமாகவே இருந்தது, எனவே நானும் மற்ற சிலரும் சேர்ந்து சென்ற ஆண்டு இந்த CoHNA என்கிற இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம் என்றும் Thanedar தெரிவித்தார்.

ஒரு நாள் முழுவதும் நிகழ்ந்த இந்த மாநாட்டு கூட்டத்தில் அமெரிக்காவின் 12 மாகாணங்களில் வாழும் செல்வாக்கு மிக்க இந்துக்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களில் சில முக்கிய பிரமுகர்களாக Hank Johnson, Tom Keana, Rich McCormick, Thanedar, Buddy Carter ஆகியோர் இருந்தனர். Ohio மாகாணத்தில் Senator பொறுப்பில் இருக்கும் Niraj Antani அவர்களும் சபையில் இருந்தார், அவர் Ohio மாகாண சபை உறுப்பினர் ஆவார்.

அமெரிக்காவில் தற்போது இந்துக்கள் அதிகமாக தாக்கப்படுகிறார்கள் என்ற Antani யின் கருத்துக்கு பதில் கூறிய CoHNA அமைப்பின் தலைவர் Nikunj Trivedi பின்வருமாறு கூறினார், “அமெரிக்காவில் இந்துக்களை பற்றிய எச்சரிக்கை உணர்வு அதிகரித்து வருகிறது” என்றார். மேலும் அவர், “இந்த ஆண்டு நிகழும் இந்த அமைப்பின் மாநாட்டு கூட்டம் ஆனது சென்ற ஆண்டை விட சிறப்பாக அமைந்துள்ளது, Georgia போன்ற மாகாணங்களில் இருந்தும், Fremont, California, Memphis மற்றும் Tennessee போன்ற தொலைதூர நகரங்களில் இருந்தும் உறுப்பினர்கள் இங்கு வருகை புரிந்துள்ளனர், இது நிறைவான மகிழ்ச்சியை தருகிறது” என்றும் கூறினார்.

இந்த கூட்டத்தின் மூலமாக Hinduphobia எனப்படும் இந்து மதத்தின் மீதான வெறுப்பை தடுப்பதற்கான முயற்சிகளை எடுக்கவும், அதனை கையாள சரியான வழிமுறைகளை கண்டறியவும் மற்றும் நம் இந்துக்களின் உரிமையையும் பாதுகாப்பையும் சட்டத்தின் மூலமாக பிரகனப்படுதவும் உதவும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று கூறினார். மேலும் அவர், “இந்துக்களாகிய நாம் அமெரிக்காவில் கொண்டாடும் தீபாவளி போன்ற பண்டிகைகளின் பிரபலம் அமெரிக்கா முழுவதும் பல வருடங்களாக தெரியும் வகையில் கொண்டாடப்படுகிறது. இதனால் நாம் நம்முடைய அடையாளங்களை வெகு காலமாக அமெரிக்காவில் பதித்து வருகிறோம் என்பது தெளிவாக தெரிகிறது, New York நகரத்தின் அரசுப்பள்ளிகள் அனைத்திற்கும் தீபாவளியன்று பொதுவிடுமுறை நாளாக அறிவித்துள்ளது அமெரிக்க அரசு. இது நம் இந்துக்களின் அடையாளத்திற்கு ஒரு சான்றாகும். இது போன்ற பல இந்து மத பண்டிகைகள் அமெரிக்கர்களின் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது என்று கூறினார்.

இந்த கூட்டத்தின் போது “அமெரிக்காவில் ஜாதியை மையமாக கொண்டு மக்களை பாகுபடுத்தி வைப்பது என்பது ஒத்துவராத ஒன்றாகும், மேலும் அத்தகைய விவரங்களை வெளிநாட்டு மக்களிடையே அமெரிக்க அரசு சேகரிக்கவில்லை” என்று Prof Salvatore Babones தெரிவித்தார், இவர் அமெரிக்காவில் இயங்கும் Indian Century Roundtable என்ற உலகார்ந்த அமைப்பின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

மேலும் அவர், “கலிபோர்னியா நீதிமன்றம் அல்லது சட்டமன்றம் எவ்வாறு ஒரு தனி மனிதரின் ஜாதியை கண்டறிய முடியும், இந்த அமெரிக்க கலாச்சாரத்தில் அது கேள்விப்படாத ஒன்றாகும், அதுவும் இந்தியா என்ற ஒரே ஒரு வெளிநாட்டில் மட்டுமே 1100 க்கும் மேற்ப்பட்ட ஜாதிப்பிரிவுகள் பட்டியலினத்திலும், 700 க்கும் மேற்பட்ட பிரிவுகள் கொண்ட பட்டியலின மலைவாழ் பழங்குடியினரும், 2500 க்கும் மேற்ப்பட்ட ஜாதிப்பிரிவுகள் உள்ள பிற்படுத்தப்பட்டோர் வகைகளையும் வரையறை செய்வது அமெரிக்காவில் சாத்தியமற்ற ஒன்றாகும். இதில் இன்னும் மற்ற நாடுகளின் மக்களில் எத்தனை ஜாதி பிரிவுகள் உள்ளனவோ? அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு பாகுபாட்டை உருவாக்க அமெரிக்கா என்றுமே முயற்சிக்காது” என்றும் கூறினார். மேலும் அவர் கூறும்போது “தலித்” என்பது ஜாதிப்பிரிவு அல்ல என்று குறிப்பிட்டு கூறினார்.

பின்னணி:

சமீப காலங்களில் அமெரிக்க நகரங்கள் பலவற்றிலும் பலவாறு இந்து மத மக்கள் அமெரிக்கர்களால் வம்பிழுக்க படுகின்றனர். இனவெறியை போல அவர்களுடைய பாகுபாட்டு அரசியலையும், வெறுப்பு ரீதியான தாக்குதல்களையும் தற்போது இந்துக்கள் மீதும் காட்டத் துவங்கியுள்ளனர். பொது இடங்களில் இந்துக்கள் அச்சுறுத்தப்படுவது, கேலி செய்யப்படுவது, அவர்களின் மத அடையாளங்களையும் வழிபாட்டு முறைகளையும் சீண்டுவது போன்ற பகிரங்க தாக்குதல்கள் நிகழ்வது அதிகமாகி விட்டன.

இந்துக்கள் மீதான இந்த வெறுப்புணர்வுக்கு காரணம் என்ன, எதனால் இந்த Hinduphobia உணர்வு மேலோங்குகிறது என்றும், அதற்கான தீர்வுகளை கண்டறியவும், இந்த விதமான தாக்குதல்களையும், துவேஷ நடவடிக்கைகளையும் விரைவில் தடுக்க சட்டம் இயற்றக் கோரியும், இனிமேல் அமெரிக்க நகரங்களிலும், தெருக்களிலும் எவ்வித தொந்தரவுகளுக்கும் ஆளாகாமல் இந்துக்கள் வாழ்வதற்கு தேவையான பாதுகாப்பு உத்தரவாதம் கோரியும் அமெரிக்காவில் வாழும் இந்து மதத்தை சேர்ந்த இந்திய நாட்டினரும், அங்கு குடியுரிமை பெற்று வாழ்கின்ற இந்திய வம்சாவழியினரும் அமெரிக்க உயர்நீதி மன்றத்தை நாடி விவரங்களை சமர்ப்பித்தனர். விரைவில் இதற்கான தீர்வை அமெரிக்க அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய பதிவுகள் :

அமெரிக்காவில் பரவும் இறைச்சி அலர்ஜி - ஆபத்துக்குக் காரணம் என்ன?
வெளிநாட்டு மாப்பிள்ளைகள்  செய்யும் புதுவித மோசடி!  பெற்றோர்களே எச்சரிக்கை!!
நீங்கள் சைவ உணவு பிரியரா? இடுப்பு கவனம்!
Fukishima அணுமின் நிலைய கழிவுநீரை கடலில் கலக்கும் ஜப்பான் - இது மனித குலத்திற்கு எதிரான மாபெரும் குற...
வறுமையின் பிடியிலிருந்து விடுபடும் இந்திய தேசம்! உலக வறுமைக் குறியீடு இந்தியாவைப் பற்றிக் கூறுவது என...
முதுகுவலிதானே என்று அலட்சியம் வேண்டாம்.. உலகில் பெரும்பாலான ஊனத்திற்கும் இயலாமைக்கும் காரணம் இந்த மு...
சேமிக்கும் பழக்கம் அதிகம் கொண்ட  புத்திசாலி தலைமுறை 90ஸ் கிட்ஸ்
பகவத் கீதையை அவமதிக்கும் பாலியல் காட்சியை நீக்குக - ‘ஓப்பன்ஹைமர்’ பட இயக்குநருக்கு இந்தியா கோரிக்கை!
கலவர பூமியாக மாறி இருக்கும் பிரான்ஸ்:  அழிக்கப்படும் வணிக நிறுவனங்கள்!
அதிகத் திரைநேரம் குழந்தைகளுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *