fbpx
LOADING

Type to search

பொழுது போக்கு

கத்தி முனையில் கடத்தப்பட்ட தமிழ் ராப் பாடகர் தேவ் ஆனந்த்! சோசியல் மீடியா பிரபலங்களுக்கான எச்சரிக்கை!!

செய்தி சுருக்கம்:

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் தேவ் ஆனந்த் பத்து பேர் கொண்ட கும்பலால் கத்திமுனையில் கடத்தப்பட்டார்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

மதுரையை சொந்த ஊராகக் கொண்ட தேவ் ஆனந்த். தமிழ் ராப் பாடகராக தன்னை மேம்படுத்திக்கொண்டுள்ள தேவ் ஆனந்த், கடந்த புதன்கிழமை (ஜூன் 21) சென்னையில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பும் போது கத்தி முனையில் கடத்தப்பட்டார்.

தேவ் ஆனந்த் தனது ராப் பாடல்களுக்காக சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானவர். இவரது அதிகாரப்பூர்வ மேடைப் பெயர் ‘டெவாய்ட்’.(Devoid).

தேவ் ஆனந்தின் சோசியல் மீடியா பக்கங்களை ஆராய்ந்து பார்த்ததில் இளந்தலைமுறைப் பிள்ளைகள் மத்தியில் இவர் ஒரு ராப் பிரபலமாக கொண்டாடப்பட்டு வருவதை அறிய முடிகிறது.

ஏப்ரல் 2020 இல் தேவ் ஆனந்த் தனது முதல் தனிப் பாடலான ‘மெய் எழுத்து’ என்ற பாடலை வெளியிட்டார். இது பிரபலமான மியூசிக் ஸ்ட்ரீமிங் நிறுவனமான ஸ்பாட்டிஃபை (Spotify) வெளியியிட்டது. இதைத் தொடர்ந்து சொல்லிசை சைபர் தொகுதி.1, ஐ வெளியிட்டார். இவ்விசைத் தொகுதியை ராப்பர்-தயாரிப்பாளர் டாக்டர் பர்ன் தயாரித்தார். கடந்த காலத்தில், தேவ் ஆனந்த் டாக்டர் பர்னை தனது “குரு” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது அடுத்த தனிப்பாடல், ‘கியர் அப்’ என்ற தலைப்பில், கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து வெளிவந்தது.

இவ்வாறு ஏனைய யூட்யூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலங்களைப் போல தனது துறையில் அசுர வளர்ச்சி கண்டுவந்த தேவ் ஆனந்த் கடத்தப்பட்டதன் பிண்ணனி என்ன..?

இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னையில் இருந்து மதுரைக்கு சென்றுகொண்டிருந்த தேவ் ஆனந்தின் கார் மீது இவரை பின்தொடர்ந்து வந்த கார் ஒன்று லேசாக மோதியுள்ளது. அதிர்ச்சி அடைந்த தேவ் ஆனந்த் தனது காருக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டுள்ளதா என்று பார்க்க கீழே இறங்கியுள்ளார். அப்போது அவரை 10 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாகத் தெரிகிறது.

.

இது குறித்து திருவேற்காடு காவல் நிலையத்தில் தேவ் ஆனந்தின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவ் ஆனந்தை தேடிவந்தனர்.

தேடுதல் வேட்டையின் முடிவில் தேவ் ஆனந்த் புதுக்கோட்டையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பத்திரமாக மீட்டனர்.

காவல்துறையைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னையில் தேவ் ஆனந்தின் சகோதரர் ஒருவரிடம் ரூ.2.5 கோடி கடன் வாங்கி பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்றும், இது தொடர்பாக சில தகராறுகள் இருந்ததால், இதற்கும் தேவ் ஆனந்த் கடத்தலுக்கும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

பின்னணி:

தற்போதைய காலகட்டத்தில் வலுவான சமூக வலைதளங்களாக இருக்கும் இன்ஸ்டாகிராம், யூட்யூப் போன்றவற்றில் சிரியவர் முதல் பெரியவர்கள் வரை எந்த வகையிலோ தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பிரபலங்களாக வலம் வருகின்றனர்.

எந்த திறமையும் இல்லையா..? பரவாயில்லை.. ஏதேனும் வித்தியாசமாகவாவது செய்து பிரபலமைடையலாம். பாடவோ, ஆடவோ, ஓவியம் வரையவோ இல்லை நடிக்கவோ திறமையற்ற ஒருவர் தனது வெள்ளந்தியான பேச்சாலும் இயல்பாக அவர் உதிர்க்கும் வட்டார கெட்ட வார்த்தைகளாகும் பிரபலமடைந்து, திரைப்படங்களில் நடிக்கும் வகையில் உயர்ந்தது நாம் அனைவருக்கும் தெரிந்தததே. இதில் ஒளிவு மறைவென்ன.. அவர்தான் ஜி. பி. முத்து.

சமூக வலை தளங்களை திறந்து பாருங்கள். கும்பல் கும்பலாக ஆடிக்கொண்டும் ஓடிக்கொண்டும் இருக்கும் இளந்தலைமுறையினை பார்க்க இயலும். இன்னும் சில வருடங்களில் சமூக வலைதளங்களில் சாதிக்கத் தோதான கல்லூரி படிப்புகள் ஏற்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இதை ஒரு பொழுது போக்காகவோ அல்லது நேர விரயமாகவோ பார்க்கும் பார்வை மாறி வெகு நாட்களாகிறது.

பெற்றோர்களும் இப்போது இந்த இளந்தலைமுறையினரோடு இணைந்து இந்த சமூக வலைதள பிரபலமாதலை ஒரு தொழிலாக அங்கீகரிப்பதை சமீப காலத்தில் பார்க்க முடிகிறது. அமலா ஷாஜி என்ற பெண்ணுக்கு அவரது தந்தை பக்கபலமாக இருந்து உதவுவதைக் காண முடிகிறது. இந்த பெண் தினந்தோறும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவேற்றி பிரபலமடைந்தவர். இதன் மூலம் புகழையும், வருமானத்தையும் விருதுகளையும் குவித்துவருகிறார்.

அதேசமயம், இப்போக்கு ஆரோக்கியமானதா என்று ஆராய்வதற்கும், ஆரோக்கியமானதாக ஆக்குவதற்கும் இதுவே சரியான சமயம். நிலையான புகழடைவதற்கும், திடீரென பிரபலமடைவதற்கும் உள்ள வித்தியாசத்தை நம் பிள்ளைகள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த திடீர் சமூக வலைதள பிரபலங்கள் இரண்டு வருடங்கள் ஏதாவது வீடியோக்களை வெளியிடுகின்றார்கள். பிறகு நன்கு சம்பாதிக்கக் கூடிய இன்புளயன்ஸர்களாக உருமாருகிறார்கள். இவர்களுக்கு சில அமைப்புகள் விருதுகளும் வழங்கி கவுரவிக்கின்றன. எனவே இந்த இளந்தலைமுறைப் பிள்ளைகள் தாம் ஏதோ பெரிதாக சாதித்து விட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

‘ஷோ ஆப்’ என்று சொல்லப்படும் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் இவர்கள் மிகவும் தீவிரமாக இருப்பதாகப் படுகிறது. தாங்கள் கார் வாங்குவதையும், வீடு வாங்குவதையும் தாங்கள் செல்லும் விலை உயர்ந்த விடுதிகளையும், உண்ணும் உயர்தரமான உணவுகளையும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றனர். இதுபோன்ற செயல்பாடுகள் மறைமுகமாக இவர்களுக்கு ஆபத்துகளை கொண்டு வந்து சேர்க்கின்றன. மறைமுகமாகவும், நேரடியாகவும் மிரட்டல்களுக்கு உட்படுத்தி இவர்களிடமிருந்து பணம் பறிக்க சமூக விரோத கும்பல் காத்திருக்கிறது.

சினிமா மற்றும் டிவி பிரபலங்களை விட இந்த சமூக ஊடக பிரபலங்கள் அணுகுவதற்கு எளிதானவர்கள் அதே சமயம் பணம் கொழித்தவர்கள் என்பது இவர்களை ஒரு எளிதான இரையாக்கி விடுகிறது.

சமூக வலைதள பிரபலங்களும் அவர்களது பெற்றோரும் கவனமாகவும் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டிய காலகட்டம் இது.

தொடர்புடைய பதிவுகள் :

ஸ்பாட்டிஃபை செயலியில் ருசிகரத் தகவல்; இசையை விற்கிறதா நிறுவனம்?
உண்ணா நோன்பு என்னும் தலைசிறந்த மருத்துவம்!
சிங்களத் திரைப்படங்களைத் தயாரிக்கப்போகும் லைகா புரொடக்ஷன்ஸ்..!!
சமூக வலைதளங்களில் விழும் விட்டிலாய் வளர்கின்ற இளைய தலைமுறையினரின் மனநலனை காக்க உதவும் 30 நிமிட டெக்ன...
படங்களின் மூலம் தரவுகளைத் திருடும் ஆபத்தான புதிய ஆண்ட்ராய்ட் மால்வேர்
பிபிசி நிகழ்ச்சிகளை இந்தியாவுக்குக் கொண்டுவருகிறது அமேசான்
மொபைல் மற்றும் கணினித் திரையில் அதிக நேரம் செலவிடுகிறார்களா உங்கள் குழந்தைகள்? எச்சரிக்கை தேவை
உங்கள் துணை மீது அதிக அக்கறை செலுத்துங்கள் - அப்புறம் பாருங்கள் உங்கள் செக்ஸ் வாழ்க்கை எப்படி மாறுகி...
இலங்கைக்கான முதலாவது சர்வதேசக் கப்பல் சேவையை இந்தியா ஆரம்பித்து வைத்துள்ளது
மற்றவர்களுக்காக வாழாதீர்கள்! சாதாரண கார்களை ஓட்டும் அமெரிக்க பணக்காரர்கள் உலகத்திற்குச் சொல்வது என்ன...
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *