fbpx
LOADING

Type to search

அறிவியல்

Depression Meaning in Tamil 

டிப்ரஷன்

Meaning – பொருள்:

 மனச்சோர்வு, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இரக்கம், மந்தம், தாழ்வழுத்தம், அடையாளம், மந்தநிலை, பள்ளம், உற்சாகமின்மை, சரிவு, வாட்டம்.

Explanation – விளக்கம்:

    மனச்சோர்வு என்பது மனிதர்களின் சூழ்நிலை காரணமாக ஏற்படுவது. பணிச்சுமை, அருகில் இருப்பவரின் புரிதலற்ற நடவடிக்கை, உடல் சோர்வு என மனச்சோர்வுக்கான காரணங்கள் பல வகைப்படுத்தலாம். தனக்கு இருப்பது மன சோர்வு என்பதை கண்டு கொள்வதே இங்கு பெரியது. இந்த மனச்சோர்வினால் வெறுப்பு, விரக்தி, கோபம் போன்றவை மனதில் ஏற்படுகிறது. இந்த மனச்சோர்வு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதன் சில அறிகுறிகளாக அதிக கவலை, கோபம் மற்றும் தற்கொலை முயற்சி போன்றவை கருதப்படுகிறது. இவ்வாறு சோர்வு ஏற்படும்போது யாரிடமும் பகிராமல் சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் தவறான முடிவுகளை தேர்ந்தெடுக்கின்றனர். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் இதற்கு காரணியாக அமைகிறது. இது நாம் தன்னம்பிக்கை இழக்கும் பொழுது உண்டாகிறது. நம் இழிவு உணர்வுகளும் இதற்கு காரணமாகும். இவ்வகையான மனசோர்வை நாம் யாரிடமாவது பகிர்வதும், பிறகு பிறர் உதவியை நாடுவதும், மருத்துவ ஆலோசனை பெறுவதும் முக்கியமாகும்.

பொருளாதாரம் அல்லது வணிகத்தில் நெடுநாள் மந்தநிலை.

ஒரு மூழ்கிய இடம் அல்லது மேற்பரப்பில் வெற்று.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது சூறாவளி வரும் அறிகுறி.

மந்த நிலை என்பது பொருளாதாரம், வணிகம், வர்த்தகம், மனதின் சோர்வு என அனைத்தையும் குறிப்பது.

Synonyms – ஒத்த சொற்கள்:

Unhappiness, worry, lowness, gloominess, hopelessness, melancholy, misery, distress, dullness.  கவலை, அழுத்தம், சோர்வு, சோகம், மகிழ்ச்சியின்மை.

Antonyms – எதிர்ச்சொற்கள்:

Comfort, encouragement, cheer, optimism, glad, happiness, satisfied

மகிழ்ச்சி, உற்சாகம், ஊக்குவித்தல், நிம்மதி.

Examples – உதாரணங்கள்:

After World War 1, people suffered because of the great depression in the USA.

முதலாம் உலகப் போருக்குப்பின், அமெரிக்க மக்கள் பொருளாதார மந்த நிலையால் அவதியுற்றனர்.

Children fall into depression when they are continuously scolded by elders.

பெரியவர்கள் தொடர்ந்து திட்டுவதால் குழந்தைகள் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள்.

There was a depression in the Indian Ocean causing heavy rainfall in the coastal areas.

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்தது.

Severe drought in some regions is because of economic depression. 

சில பகுதிகளில் அதிகமான வறட்சி ஏற்பட காரணம் பொருளாதார மந்தநிலை ஆகும்.

Depression affects a person’s thoughts, behaviour, and physical health. 

மனச்சோர்வு ஒரு நபரின் எண்ணங்கள், நடத்தை மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

தொடர்புடைய பதிவுகள் :

சிறுநீர்பாதைத் தொற்று பற்றி நம்மிடம் இருக்கும் மூடநம்பிக்கைகள்! தெரிவோம்… தெளிவோம்!!
ஓசெம்பிக், உடல் பருமனை குறைப்பதற்கான மருந்தா? உண்மை எது?
இந்தியப் பெருங்கடலில் 'துளை' இருக்கிறதா?
தனிமை இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கலாம்
CHATGPT வழங்கிய தேவாலய பிரசங்கம் : மரணத்திற்கு பயப்பட வேண்டாம் என்று அறிவுரை
அஜினமோட்டோ - முதுமை, இதயப் பிரச்சனைகளை வேகமாக ஏற்படுத்தும். - அலகாபாத் பல்கலைக் கழகம் ஆய்வு. 
செயற்கை நுண்ணறிவு அலையில் வெற்றிகரமாகச் சவாரி செய்ய இந்தியா தயாராக உள்ளது என்கிறார் ஐபிஎம் சிஇஓ அரவி...
நிலவின் தென் துருவத்தில் இரவு தொடங்கியது - பிரயாணக்களைப்பு தீர 18 நாட்கள் ஓய்வெடுக்க போகும் சந்திராய...
Meningitis Meaning in Tamil 
தைராய்டு குணமாக எளிய வழிகள்.
Tags:
முன்னைய பதிவு
அடுத்த பதிவு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Next Up