இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 42,000ஐ தாண்டியுள்ளது

செய்தி சுருக்கம்:
நாட்டில் 42 ஆயிரத்து 184 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இன்று தெரிவித்துள்ளது. ஜூன் 9 வரை 22 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2022-ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 2052 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
டெங்கு என்பது கொசுக்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல காலனிலைகளில் அதிகமாக காணப்படுகிறது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் இருக்காது. அதிக காய்ச்சல், தலைவலி, உடல் வலி, குமட்டல் மற்றும் தடிப்பு ஆகியவை மிகவும் பொதுவான அறிகுறிகள் ஆகும். பெரும்பாலானவர்கள் 1-2 வாரங்களில் குணமாகிவிடுவர். சிலருக்கு கடுமையான டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய தேவை ஏற்படும்.
குறிப்பாக பகலில் கொசுக்கடியைத் தவிர்ப்பதன் மூலம் டெங்கு அபாயத்தைக் குறைக்கலாம்.
பின்னணி: