fbpx
LOADING

Type to search

அறிவியல்

Dengue Fever in Tamil (தமிழில் டெங்கு காய்ச்சல்)

Dengue Fever in Tamil (தமிழில் டெங்கு காய்ச்சல்)
இன்றைய சூழ்நிலையில் மக்களுடைய பொதுநலனுக்குக் குறைபாடாக அமையும் நோய்களில் ஒன்று, டெங்கு ஃபீவர் எனப்படும் காய்ச்சல். பொதுவாகக் காணப்படும் காய்ச்சல்களுக்கும் இந்த டெங்குவுக்கும் என்ன வேறுபாடு, எந்தக் காரணங்களால் டெங்கு வருகிறது, அதை எப்படிக் கட்டுப்படுத்துவது, அதற்கு எப்படிச் சிகிச்சை வழங்குவது ஆகியவற்றை இந்தக் கட்டுரையில் காணலாம்.


உலகெங்கும் பெரும் எண்ணிக்கையில் காணப்படுகிற சிறு பூச்சிகளில் ஒன்று கொசு. குறிப்பாக மனிதர்களுக்குப் பெரும் தொல்லையை இது உண்டாக்குகிறது,

அவர்களுடைய ரத்தத்தை உறிஞ்சி எடுக்கிறது, நோய்களைப் பரப்புகிறது. இதனால் மக்கள் கொசுக்களை விரட்டுவதற்கான மருந்துகள், கொசுவலை, கொசுவை வீழ்த்தும் மட்டை, கொசுவைத் துரத்தும் களிம்பு போன்றவற்றைத் தடவிக்கொண்டு அதிலிருந்து தப்ப முயல்கிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டியும் கொசுக்கள் பல பிரச்சனைகளை உண்டாக்கிவருகின்றன. அவற்றில் ஒன்றுதான் டெங்கு ஃபீவர்.

டெங்கு ஃபீவர் என்பது என்ன?


மற்ற காய்ச்சல்களைப்போல் டெங்கு வந்தவர்களுடைய உடலின் வெப்பநிலை இயல்பு அளவைவிடக் கூடுதலாகக் காணப்படுகிறது. அவர்களுக்குத் தலைவலி, தசைவலி, மூட்டுவலி, வாந்தி, குமட்டல், கண்களுக்குப்பின்னால் வலி போன்றவை வரலாம். இது தீவிரமாகும்போது ரத்தக்கசிவு, திடீர் இரத்த அழுத்தக் குறைவு போன்றவையும் ஏற்படலாம்.


ஒருவருக்கு வந்திருப்பது வழக்கமான காய்ச்சலா அல்லது டெங்கு காய்ச்சலா என்று உறுதிப்படுத்துவதற்குப் பரிசோதனைகள் உள்ளன. இவற்றின்மூலம் மருத்துவர்கள் நோயாளிகளுக்குச் சரியான நேரத்தில் உரிய சிகிச்சையை அளித்து அவர்களைக் காப்பாற்றுகிறார்கள்.


டெங்கு ஃபீவரைக் கட்டுப்படுத்துவது எப்படி?


கொசுக்களால் வருகிற காய்ச்சலைக் கட்டுப்படுத்தவேண்டுமென்றால் கொசுக்களைக் கட்டுப்படுத்தவேண்டும். அதாவது, கொசுக்கள் கடிக்காத சூழ்நிலையை உண்டாக்கவேண்டும். வீட்டின் கதவுகள், சாளரங்களைப் பூட்டிவைப்பது, வெளியில் செல்லும்போது கை, கால்களை நன்கு மூடக்கூடிய உடைகளை அணிவது, கொசுவிரட்டிகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
அதைவிடச் சிறப்பு, கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பது. அதாவது, கொசுக்கள் முட்டையிடுகின்ற திறந்த நீர் போன்ற அமைப்புகளைச் சரிசெய்து அவை பெருகுவதைக் குறைத்தால் டெங்குவையும் பெருமளவு குறைக்கலாம்.
பொதுவாக இதுபோன்ற செயல்பாடுகள் அரசாங்கத்தின் வேலை என்று மக்கள் சும்மா இருந்துவிடுகிறார்கள். ஆனால், பொதுநலன் என்பது ஒவ்வொருவருடைய கடமைதான். அனைவரும் தங்களுடைய பணியைச் செய்தால் எல்லாருக்கும் நன்மை.


டெங்கு ஃபீவருக்குச் சிகிச்சை


பொதுவாக டெங்கு ஃபீவருக்குத் தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை. அதன் அறிகுறிகளாகிய காய்ச்சல் போன்றவற்றைக் குறைப்பதற்குச் சரியான மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டும், தேவைப்பட்டால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறவேண்டியிருக்கலாம். இவற்றை உரிய மருத்துவ வல்லுனர்கள் தீர்மானிக்கவேண்டும். அதற்குச் சரியான நேரத்தில் மருத்துவரிடம் செல்லவேண்டும்.
சிலர் காய்ச்சல் தானாகச் சரியாகிவிடும் என்று அலட்சியமாக இருப்பார்கள், இன்னும் சிலர் முன்பு எப்போதோ உடல்நிலை சரியில்லாமல் போனபோது சாப்பிட்ட மருந்தை அல்லது இன்னொருவருக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்தைச் சாப்பிடுவார்கள். இவை தேவையில்லாத பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும். இணையத்தில் ஆராய்ச்சி செய்து நோயைப்பற்றித் தெரிந்துகொள்வது நல்லதுதான். ஆனால், சிகிச்சை பெறுவதற்கு உரிய வல்லுனரிடம் செல்வதுதான் அறிவார்ந்த செயல்.


டெங்கு ஃபீவர் வந்தவர்கள் நிறைய ஓய்வெடுக்கவேண்டியிருக்கும், நீர் இழக்கப்பட்டிருக்கும் என்பதால் நிறைய நீர்மங்களைக் குடிக்கவேண்டியிருக்கும். எடுத்துக்காட்டாக, தண்ணீர், பழரசம், எலக்ட்ரோலைட் சேர்க்கப்பட்ட பானங்கள் போன்றவை. இவற்றையெல்லாம் உங்கள் மருத்துவர் தெளிவாகச் சொல்வார். ஏதேனும் குழப்பங்கள் இருந்தால் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு பின்பற்றவேண்டும். சிகிச்சையின்போது எதிர்பாராத எந்த மாற்றம் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரிடம் பேசவேண்டும்.


முறையான கவனத்துடன் செயல்பட்டால் டெங்கு ஃபீவரைக் கட்டுப்படுத்தலாம், குணமாகலாம்.


References

  • Dengue Fever. Mayo Clinic. 2022. Online.
  • Dengue: Symptoms and Treatment. Centers for Disease Control and Prevention. 2021. Online.
  • Adman I. Qureshi, Omar Saeed (Editors). Dengue Virus Disease: From Origin to Outbreak. Academic Press Inc. 2019. Print.

தொடர்புடைய பதிவுகள் :

இந்தியாவின் முதல் ட்ரோன் போலீஸ் படைப்பிரிவு தமிழ்நாட்டில் துவங்கப்பட்டது - இன்றுமுதல் செயல்பாட்டிற்க...
‘AI டெக்னாலஜியால் தேர்தல் மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பு ஆட்டம் காணப்போகிறது!’ - பில் கேட்ஸ் எச்சரிக்கை...
சந்திராயன்-3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது, பின்னணியில் தமிழக ரயில்வே தொழிலாளியின் ம...
ஆட்டிசம் ஏன் வருகிறது?
முதுகு மற்றும் கழுத்து வலிக்கு ஓபியாய்டுகள் தீர்வு அல்ல: சிட்னி பல்கலைக்கழக ஆய்வு முடிவு
உலகில் முதன்முறையாகப் பெண்ணின் மூளைக்குள் மலைப்பாம்பின் ஒட்டுண்ணி உயிருடன் கண்டுபிடிப்பு
பருவனிலை மாற்றத்தை சமாளிக்க புதிய வழிமுறை : முயல்கிறது ஒரு புதிய நிறுவனம்
விண்வெளியில் சாதிக்க தயாராக உள்ள இந்தியா, 2040ல் வின்வெளித்துறையில் அசுர வளர்ச்சி அடைந்து விடும் என்...
சாராயத்தால் சீரழியும் பல குடும்பங்களின் இன்பகரமான இல்லறவாழ்வு.
திகட்ட திகட்ட பாலியல் இன்பம் பெற உதவும் ஹிப்னாசிஸ்
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

தொடர்புள்ள பதிவுகள்