fbpx
LOADING

Type to search

உடல் நலம் தெரிவு

ஏரோக்சான்: விறைப்பு குறைபாட்டை போக்கும் அதிசயம்

eroxon

செய்திச் சுருக்கம்:

அமெரிக்காவில் ஏரோக்சன் ஜெல்லை இனி மருத்துவர் பரிந்துரை இல்லாமலே வாங்கிக்கொள்ளலாம் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

ஏரோக்சன் என்னும் விறைப்பு ஜெல்லை பிரிட்டிஷ் பார்மா நிறுவனம் கடந்த வருடம் தயாரித்து.  ஆண்களின் விறைப்பு குறைப்பாட்டை போக்கும் மருந்தாக இதனை விற்பனை செய்கிறது. தற்போது அமெரிக்காவில் இதனை விற்பனை செய்ய அந்நிறுவனம் ஒப்புதல் வாங்கியுள்ளது. அதுவும், மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல், சாதாரண கிரீம்களைப் போல மருந்தகத்தில் வாங்கிக்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. பாலியல் பிரச்சனைகளுக்கான மருந்துகளின்  விலை அதிகமாகவும், தீவிர பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதாக இருப்பதால் அதற்கு மாற்றாக இந்த ஜெல் பயன்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்னணி:

பெருகி வரும் வேலை பளு, தூக்கமின்மை, மனஉளைச்சல் போன்ற காரணங்களால் ஆண் பெண் என பாகுபாடின்றி உடலவிலும் மனதளவிலும் நிறைய பிரச்சனைகள் வருகிறது. வயோதிக நோய்கள் என்று கூறப்பட்டு வந்ததெல்லாம் இன்று இளம் வயதினருக்கு வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. சிறு வயது முதலே பல நோய்களுக்கு மாத்திரைகள் எடுத்துகொள்வதானல் நீண்ட கால நோயாளிகளாக மாறி மாறிவருகிறார்கள் மனிதர்கள். மேலும் பல மருந்து நிறுவனங்களும் இது போன்ற குறைகளுக்கு தீர்வு காண பல கோடி ரூபாய் செலவழித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறது.  அதனால் சந்தையில் மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைக்கிறது.

இளம் வயதில் வரும் நோய்களில் பெண்களை விட ஆண்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களைத் தாண்டி பாலியல் பிரச்சனைகளும் வந்துவிடுகிறது. இதற்கு முறையான பாலியல் கல்வி அறிவு இல்லாததும் ஒரு காரணமாகும். அதன் விளைவு, இன்று திரும்பிய திசையெல்லாம் மகப்பேறு மருத்துவமனைகளைப் பார்க்க முடிகிறது.  குழந்தையின்மை தாண்டி தாம்பத்திய உறவில் ஏற்படும் பிரச்சனைகளால் தான் குடும்ப உறவில் சிக்கல் மற்றும் திருமண முறிவுகளும் அதிகரிக்கிறது என்று ஒரு ஆய்வு சொல்கிறது.

ஆண்களுக்கு நாற்பது வயதிற்கு மேல் வரும் இந்த விறைப்பு குறைபாட்டை குறி வைத்து பல பிஸினஸ்கள் கோடியில் புரளுகிறது. சித்தா, ஆயுர்வேதா, அலோபதி, ஹோமியோபதி என அனைத்து மருத்துவ முறைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. சமூக ஊடகங்களிலும் இதனை பற்றிய காணொளிகள் நிறைய கொட்டிக்கிடக்கின்றன. சரியான உணவு முறை, ஆழ்ந்த உறக்கம், நல்ல சிந்தனை ஆகியவற்றை கடைபிடித்தாலே இவ்வித குறைபாடுகளை சரி செய்து கொள்ளலாம் என பாலியல் கல்வி ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

ஏரோக்சான்

என்னதான் நாம் நன்றாக இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள சமூகமும் அதற்கேற்றார் போல அமைய வேண்டும். திரும்பிய பக்கமெல்லாம் தூரித உணவுகள், இரவு நேர பார்ட்டிகள், சுறுசுறுப்பற்ற வாழ்க்கை முறை, வேலை அழுத்தம் என மனிதனின் உடலுக்கு தீங்கு விளைவிகக்கும் காரணிகள் தான் பெருகியுள்ளது. இதனால் ஏற்படும் பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏரோக்சான் என்னும் ஜெல்லை பிரிட்டிஷ் பார்மா நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தாம்பத்தியதில் ஆண்களின் விறைப்பு நீண்ட நேரம் நீடிக்க மருத்துவர்கள் பல மாத்திரைகளை பரிந்துரை செய்து வருகிறார்கள். வயாகரா போன்ற மாதிரைகள் மிகவும் வீரியமானதாகவும் பக்க விளைவுகளையும் கொண்டதாகவும் இருபதனால் அதை மருத்துவர்களின் ஆலோசனையுடன் தான் வாங்க முடியும். ஆனால் ஏரோக்சான் என்பது ஒரு கிரீம் போன்ற திடத்தில் இருக்கும், அதனால் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலே மருந்தகத்தில் வாங்கிக்கொள்ளலாம் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏரோக்சான் ஜெல் ஆனது பயன்படுத்திய பத்து நிமிடத்தில் வேலையைத் துவங்கும், மற்றும் முப்பது முதல் அறுபது நிமிடங்கள் வரை வேலை செய்யும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்தும் போது மற்ற மாத்திரைகளைப் போல எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

விறைப்பு குறைபாடு என்பதை ஆங்கிலதில் “ஏரெக்டைல் டிஸ்ஃபங்க்ஷன்” என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். இது பெரும்பாலும் நாற்பது வயதை நெருங்கும் நகர வாழ் ஆண்களுக்கு மத்தியில் பரவலாக காணப்படுகிறது என்றும் தெரிவிக்கிறார்கள். தொடர்ச்சியாக புகை பிடிப்பது, வருடக்கணக்கில் மது அருந்துவது, புகையிலை உட்கொள்வது அதைத் தவிர டைப் இரண்டாம் வகை நீரழிவு நோய், மனஉளைச்சல், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளும் இந்த விறைப்பு குறைபாட்டிற்கு வழி வகை செய்கிறதாம்.

இந்த ஏரோக்சன் ஜெல்லானது, இங்கிலாந்தில் ஏற்கனவே புழக்கத்தில் இருந்து வருகிறது. இதன் விலை முப்பது அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. விலையுயர்ந்த மாத்திரைகளுக்கு நடுவில், விலைகுறைவாகவும் பக்க  விளைவுகளும் இல்லாததால் இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கப்போகிறது என்று பிரிட்டிஷ் பார்மா நிறுவனத்தின் செய்திக்குழு தெரிவித்துள்ளது. என்ன இனி விறைப்பு குறைபாட்டுக்கு டாட்டா பை பை!

தொடர்புடைய பதிவுகள் :

இந்துத்வாவுக்கும் இந்து மதத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன?
சின்னச் சின்ன இன்பங்களில் இருக்கு ரகசியம்! அன்றாடம் அனுபவிக்கும் சிறிய இன்பங்கள் மூளை செயல்பாட்டை மே...
உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்க உடலுறவு அவசியமா? நெருக்கமும் உடலுறவும் ஒன்றா..? வித்தியாசத்தைத் த...
ஸ்மார்ட் போனில் மூழ்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள்: ஒரு எச்சரிக்கை
எண்பதிலும் ஆசை வரும்
உடல் பருமன் அதிகரிப்பதற்கு பிரக்டோஸ் காரணமாகிறதா? ஆய்வுகள் சொல்வதென்ன?
காட்டுத் தேனீக்கள் மனித இனத்திற்கு அத்தியாவசியத் தேவை..! காரணங்கள் என்ன..?
இந்தியாவில் காணாமல் போன பெண்கள் மற்றும் சிறுமிகளின் அதிர்ச்சியளிக்கும் எண்ணிக்கை! வெறும் எண்களாக பார...
தனிமை இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கலாம்
பசிபிக் பெருங்கடலில் ஆழ்கடல் சுரங்கம் தோண்டும் இடத்தில் 5,000க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டு...
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *