fbpx
LOADING

Type to search

அறிவியல் உடல் நலம்

மூளையதிர்ச்சி குழந்தையின் புத்திக்கூர்மையை பாதிக்குமா?

pediatric concussion

செய்தி சுருக்கம்:

மூளையில் சிறிய காயம் அல்லது கன்கஷன் என்னும் மூளையதிர்ச்சி ஏற்படுவது, தசைகள் மற்றும் எலும்புகளில் காயப்படுவது போன்றதுதான், மூளையதிர்ச்சிக்கு உள்ளாகும் குழந்தைகளின் புத்திக்கூர்மையானது மட்டுப்படாது என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

தலை, உறுதியான பொருளின் மீது வேகமாக மோதுதல், எந்தப் பொருளைக் கொண்டாவது தலை வேகமாக தாக்கப்படுதல் போன்றவற்றினால் மண்டையோட்டுக்குள் மூளையானது முன்னும் பின்னும் செல்லும்வண்ணமும், சுழலும்வண்ணமும் அசைக்கப்படுதல், கன்கஷன் என்றும் மூளையதிர்ச்சி என்றும் கூறப்படுகிறது. இவ்வகை அதிர்ச்சி மூளையில் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சமயங்களில் மூளை செல்கள் அசைவின் காரணமாக இழுத்து விரிக்கப்படுகின்றன.
இவ்வாறு மூளை அதிர்ச்சியுறுவதால் குழந்தைகளின் புத்திக்கூர்மை பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் இருந்து வந்தது. மூளையதிர்ச்சியினால் புத்திக்கூர்மை பாதிக்கப்படாது என்று இந்த ஆய்வானது தெரிவிக்கிறது.

பின்னணி:

மூளை திசுக்கள் மென்மையானவை. மூளையானது செரிபிரோஸ்பைனல் என்ற திரவத்தால் சூழப்பட்டிருக்கிறது. மண்டையோடு அதை பாதுகாக்கிறது.

தலையில் காயம் உண்டாக்கக்கூடிய எந்தச் செயலாலும் மூளையதிர்ச்சி ஏற்படலாம். சிறுபிள்ளைகள் கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை ஆடும்போது பந்து தாக்கி மூளையதிர்ச்சிக்கு உள்ளாகலாம். சைக்கிள் ஓட்டும்போது, மரத்தில் ஏறும்போதும் விழுந்தும் தலையில் அடிபடக்கூடும்.

அறிகுறிகள்

தலையில் அடிபட்டதும் பிள்ளைகள் மலைத்துப் போய் நின்றால், தள்ளாடி நடந்தால், கேள்விகளுக்கு தாமதமாக பதில் கூறினால், சுய நினைவிழந்தால், மனப்பாங்கில் மாற்றம் தென்பட்டால் அவர்களுக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். தலைவலி, குமட்டல், வாந்தியும் ஏற்படலாம்.

எதிர்பாராதவிதமாக பிள்ளைகளுக்கு மூளையதிர்ச்சி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் பெற்றோர் அவர்களை 24 மணி நேரத்திற்கு கண்காணிக்கவேண்டும். எப்போதும் குழந்தை தூங்கிக்கொண்டே இருக்கிறதா, தூக்கத்திலிருந்து எழுப்புவது கடினமாக இருக்கிறதா என்பதை கவனிக்கவேண்டும். வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிட்டாலும் தலைவலி தொடர்கிறதா, மீண்டும் மீண்டும் வாந்தி வருகிறதா, பொருள்களை கையால் பிடிக்க இயலவில்லையா, பார்ப்பதற்கு, நடப்பதற்கு சிரமமாக உள்ளதா, காது மற்றும் மூக்கிலிருந்து திரவம் வழிகிறதா, வலிப்பு வருகிறதா என்பதை பார்க்கவேண்டும். இயல்பாக சுவாசிக்கிறார்களா? இயல்பான நிலையில் படுத்து உறங்குகிறார்களா? என்பதையும் கவனிப்பது அவசியம்.

மூளையதிர்ச்சிக்கு உள்ளான குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன ஓய்வு அவசியம். ஆனாலும், முழுவதும் ஓய்வெடுத்துக்கொள்ளவேண்டாம். மனதிற்கு அதிகமாக ஓய்வு அளித்தால், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு தாமதம் ஏற்படக்கூடும்.

பராமரிப்பு

அதிர்ச்சிக்குள்ளான குழந்தைகளுக்கு இயல்பான பசி இருக்க வாய்ப்பு இல்லை. ஆனாலும் உடலில் சர்க்கரை அளவு குறைந்துபோகாமல் இருக்கும்படி நீர், பழச்சாறு ஆகியவற்றை பருகும்படி உற்சாகப்படுத்தவேண்டும். இரத்த சர்க்கரை அளவு குறைதல், நீர்ச்சத்து குறைதல் போன்றவை மூளையை பாதித்து நிலைமையை இன்னும் மோசமாக்கக்கூடும். மஞ்சள் கலந்த உணவுபொருள்களை சாப்பிடலாம். கிரீன் டீ பருகலாம்.

மூளையதிர்ச்சி ஏற்படக்கூடிய பாதிப்புக்குள்ளான குழந்தை போர்டு கேம் என்னும் விளையாட்டுகளை விளையாட முயற்சிக்கலாம். தொலைபேசியில் சிறிது நேரம் பேசலாம். சிறிய கைவேலைகளை செய்து பார்க்கலாம். ஆனால் தொலைக்காட்சி, கணினி, மொபைல் போன்களை பார்க்கக்கூடாது. பள்ளிக்கோ, மைதானத்திற்கு விளையாடவோ செல்லக்கூடாது. எவற்றையும் வாசிக்கக்கூடாது.

24 மணி நேரம் எந்த பிரச்னையும் இல்லாமல் கடந்துவிட்டால், சிறிது நேரம் வாசிக்கலாம், சிறிது நேரம் தொலைக்காட்சி பார்க்கலாம், நண்பர்கள் வந்து சிறிது நேரம் பார்த்துச் செல்ல அனுமதிக்கலாம். வீட்டுப்பாடங்களை அரை மணி நேரம் செய்ய அனுமதிக்கலாம். சிறிது தூரம் நடக்கலாம். ஆனாலும் பள்ளிக்குச் செல்லாமல், கணினியை பார்க்காமல், வெளியே சென்று விளையாடாமல் இருக்கவேண்டும்.

இவ்வகையான கவனிப்பில் இருந்து, பிரச்னைகள் வெளிப்படாமல் இயல்பாக இருந்தால் பின்னர் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கலாம். இயன்ற அளவு குறைவான நேரம் பள்ளியிலிருந்து திரும்பலாம். ஆனால், வெளியே விளையாடச் செல்லக்கூடாது. தேர்வுகளை எழுதவேண்டாம்.

மூளையதிர்ச்சியிலிருந்து முழுவதும் விடுபட 14 முதல் 21 நாள்கள் வரை ஆகக்கூடும். அதுவரைக்கும் பிள்ளையை தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். நிலைமையில் பின்னடைவு ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாடவேண்டும்.

ஆய்வு முடிவு

சிறுபிள்ளைகள் மூளையதிர்ச்சிக்கு உள்பட்டால் அவர்களின் புத்திக்கூர்மை பாதிக்கப்படுமா என்று ஆய்வுகள் நடத்தப்பட்டன. 24 மணி நேரத்திற்குள்ளாக அமெரிக்காவிலுள்ள இரண்டு மற்றும் கனடாவிலுள்ள ஐந்து குழந்தை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட எட்டு முதல் பதினாறு வயது வரையிலான குழந்தைகள் இநத ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 566 பேர் மூளையதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்கள்; 300 பேர் எலும்பில் காயம் ஏற்பட்டவர்கள். தலையில் காயம் பரிசோதிக்கப்பட்ட பிறகு ஒரு வாரம் மற்றும் இரண்டு வார இடைவெளியில் அமெரிக்காவில் உள்ள குழந்தைகளுக்கும் மூன்று மாதம் கழித்து கனடா தேசத்து குழந்தைகளுக்கும் புத்திக்கூர்மை தேர்வு நடத்தப்பட்டது.
பிள்ளைகளின் சமூக பொருளாதார அந்தஸ்து, பெற்றோரின் பாலினம், காயத்தின் தன்மை, மூளையதிர்ச்சி ஏற்பட்டதன் விவரம், காயம்பட்டபோது சுயநினைவு இழந்தாரா என்பது குறித்த விவரம் இவற்றை கருத்தில் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது.

இந்த பரிசோதனையில் உரையாடக்கூடிய தேர்வில் குழந்தைகளுக்கிடையே எந்த மாற்றமும் தென்படவில்லை. மாட்ரிக்ஸ் முறையில் சோதிக்கப்படும்போது சிறு அளவே வித்தியாசம் தெரிந்தது.
சிறுபிள்ளைகளுக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டால் முதல் சில வாரங்கள் முதல் சில மாதங்களுக்குப் பிறகு புத்திக்கூர்மை குறையக்கூடும் என்ற கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு

பிள்ளைகள் சைக்கிள் ஓட்டும்போது, குதிரை சவாரி செய்யும்போது, ஸ்கேட்டிங் போன்ற சறுக்குவிளையாட்டுகள் விளையாடும்போது தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்துகொள்ள பழக்கப்படுத்த வேண்டும். மற்ற விளையாட்டுகளில் ஈடுபடும் பிள்ளைகள் அவற்றை பாதுகாப்பாக விளையாடுவதற்கு உரிய வழிகாட்டுதல்களை கூற வேண்டும். அவ்வாறு எச்சரித்தால் பிள்ளைகள் மூளையதிர்ச்சிக்குள்ளாவதை தவிர்க்கலாம்.

தொடர்புடைய பதிவுகள் :

முதுமையை இனிமையாக்க முத்தான நான்கு வழிகள்
நெஞ்சுசளி வர என்ன காரணம்?
கல்லீரல் பாதிப்புக்கு வழங்கப்படும் மருந்தில் போலிகள் கலந்துள்ளன - இந்தியா மற்றும் துருக்கியில் அதிகள...
இமயமலை பனிப்பாறைகளின் உருகும் வேகம் அதிகரிப்பு! 
மனிதர்களின் செக்ஸ் ஆசைக்கான மூளையில் உள்ள சுவிட்ச் கண்டுபிடிப்பு..! இனி தேவையற்ற சபலத்தை குறைக்கவும்...
மூளையில் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் காயங்களால் குழந்தைகளின் நுண்ணறிவு  பாதிக்கப்படாது: ஆய்வு சொல்லும...
செயற்கை நுண்ணறிவு அலையில் வெற்றிகரமாகச் சவாரி செய்ய இந்தியா தயாராக உள்ளது என்கிறார் ஐபிஎம் சிஇஓ அரவி...
கருப்பைக் கட்டி அறிகுறிகள்
இ-சிகரெட் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு 30 நாட்களில் கடுமையான சுவாசப் பிரச்சினை ஏற்படும்!  எச்சரிக்கும...
திருமணத்தை மீறிய உறவு: ஏழு ஆண்டுகளே எல்லையா?
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *