fbpx
LOADING

Type to search

இந்தியா உலகம்

புதிய மேப் விவகாரம், சீனாவிற்கு ஏன் இந்த வேலை?

செய்தி சுருக்கம்:

இந்தியப் பகுதிகள் சிலவற்றை உள்ளடக்கி தனது புதிய வரைபடத்தை வெளியிட்டது சீனா, மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் எல்லை விவகாரம்

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

சீனா வெளியிட்டுள்ள தனது புதிய ‘ஸ்டாண்டர்டு மேப்’ என்னும் வரைபடத்தில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப்பிரதேசத்தின் சில பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த செயல் உலகரங்கில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இது முதல்முறை அல்ல.

பின்னணி:

சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய எல்லைகளை சரியாக ஆய்வு செய்து  பிரிக்காததால் இந்த எல்லைப் பிரச்சனைகள் தொடர்கிறது. அண்டை நாடுகள் சில நேரங்களில் அமைதியாக இருந்தாலும் அவ்வப்போது பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த சிக்கல்கள் அனைத்தும் மத ரீதியிலும் சீத்தாந்த ரீதியிலும் பொதிந்துள்ளது. ‘இன்டெர்னல் செக்யூரிட்டி’ என்று சொல்லப்படும் இந்திய தேசியப் பாதுகாப்பிற்காக பல லட்சம் கோடிகள் செலவினம் செய்து எல்லைகளை ராணுவத்தினர் பாதுகாத்து வருகின்றனர்.

அண்டை நாடான சீனா, நமது நாட்டின் வட எல்லைகளிலும் பெரும் குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்தியா- சீனா இடையேயான 1962-ம் ஆண்டு யுத்தத்தின் போது கணிசமான பகுதிகளை ஆக்கிரமித்து ‘அக்‌ஷாய் சின்’ என பெயரிட்டுக் கொண்டது. இதேபோல வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை தம்முடைய நிலப்பகுதி என்றும் அது தென் திபெத் என்றும் தொடர்ந்து சீனா அழைத்து வருகிறது. இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடுமையான விமரசங்களை வைத்து வருகிறது.

இவ்வாறு இருக்கையில், சீனா சமீபத்தில் தனது நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டது. அது இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தையும் இணைந்து கொண்டிருந்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே போல் சீனா தனது வரைபடத்தில் தைவானுக்கு சொந்தமான தென் சீன கடல் பகுதிகள் சிலவற்றையும் இணைத்து தைவானை சீன நாட்டின் ஒரு பகுதி எனவும் அறிவித்தது. இதற்கு பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இப்பிரச்சனையில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்காவும் குரல் கொடுத்தது வருகிறது.

இந்நிலையில் சீனாவின் புதிய வரைபடத்துக்கு ஜப்பானும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் உள்ள சென்காகு தீவுகள் சீனா வரைபடத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அவை சீனப் பெயரான டியாயு தீவுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்த வரைபடத்தின் மூலம், இந்த பகுதிகளில் சீனா தனது உரிமைகோரல்களை வலுப்படுத்த விரும்புவதாக தெரிகிறது. அமெரிக்கா, ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ராணுவ பலத்தை கொண்ட நாடு என்பதால் சீனா அவ்வப்போது இந்தியாவிடம் இதுபோன்ற எல்லைமீறளில்  ஈடுபட்டு வருகிறது. இந்தியாவும், சீனாவின் அத்துமீறலுக்கு நேரடியாக கண்டனம் தெரிவித்துள்ளது, பல முறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இருப்பினும் இச்செயல்கள் தொடர்ச்சியாக சீனவால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய எல்லை விவகாரத்தில் சீனா தொடர்ந்து தலையிட்டு வருவது இருநாடுகளுக்கும் மணக்கசப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. எல்லையில் சாலை அமைப்பது, கட்டிடம் கட்டுவது, பாலம் கட்ட முயற்சிப்பது போன்ற சீனாவின் செயல்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியா வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய பதிவுகள் :

பருவமழையில் ஏற்படும் பகீர் மாற்றங்கள்! 
ஆளில்லா 'ட்ரோன்' விமானங்கள், அமெரிக்கா இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தம் ஏன்?
26 ரஃபேல் ஜெட் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்சிடமிருந்து வாங்க போகும் இந்திய...
பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜிம்னாஸ்டிக...
மின்சார வாகனத் தொழிற்சாலைத் திட்டம்: இந்திய வர்த்தக அமைச்சருடன் டெஸ்லா பிரதிநிதிகள் சந்திப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்த விவேக் ராமசாமி யார்? எலான் மஸ்க்கால் அங்கீகரிக்கப்பட்ட இ...
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் சீனாவின் உயர்மட்ட தூதர் சந்திப்பு: இந்திய-சீன உறவு பலப்படுமா...
அத்துமீறி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 22 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைத...
உலகில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை உயர்வது நின்றுள்ளது, ஆனாலும் கோவிட் காலத்திற்கு முந்தைய எண்ணிக்...
ஜனநாயக ஆட்சியும் செங்கோல்களின் வரலாறும்!
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *