சென்னையின் காற்றில் பாதுகாப்பான அளவை விட பல மடங்கு துகள்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

செய்தி சுருக்கம்:
உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, சென்னையின் காற்றில் பாதுகாப்பான அளவை விட பல மடங்கு துகள்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
காற்றில் உள்ள துகள்கள் அவற்றின் விட்டத்தால் தரக் கட்டுப்பாட்டு நோக்கங்களுக்காக வரையறுக்கப்படுகின்றன. 10 மைக்ரான் அல்லது அதற்கும் குறைவான (PM10) விட்டம் உள்ள துகள்கள் நுரையீரலில் உள்ளிழுக்கக்கூடியது அவை மோசமான விளைவுகளை உடலில் தூண்டக்கூ. நுண்ணிய துகள்கள் என்பது 2.5 மைக்ரான் அல்லது அதற்கும் குறைவான விட்டம் (PM2.5) கொண்ட துகள்கள் என வரையறுக்கப்படுகிறது.
பின்னணி:
செப்டம்பர் 2021 மற்றும் செப்டம்பர் 2022 இடையே 366 நாட்களில், நகரத்தின் சராசரி வருடாந்திர PM10 அடர்த்தி 45.9 mg / m3 ஆகும், இது பாதுகாப்பான அளவாக கருதப்படும் (15 mg / m3) ஐ 3.1 மடங்கு ஆகும். மேலும் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு உலக சுகாதார நிறுவனத்தின் சராசரி வருடாந்திர நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 1.5 மடங்கு அதிகமாக இருந்தது.
இருப்பினும், பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, லக்னோ போன்ற நகரங்களில் சென்னையை விட துகள்களின் அளவு அதிகமாக உள்ளது. நீண்ட நேரம் காற்றில் PM2.5 என்ற அதிக அளவில் வெளிப்படுவது சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.