இலங்கையில் கண்பார்வை சேதம் : இந்தியா கண் சொட்டு மருந்து உற்பத்தியாளர் காரணம்

செய்தி சுருக்கம் :
இந்திய நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட பிரபல கண் சொட்டு மருந்து இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் வழங்கப்பட்ட நோயாளர்களின் கண் பார்வைக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பின்னணி :
கடந்த ஒரு மாதத்தில், இலங்கையின் பல்வேறு அரச வைத்தியசாலைகளில் குறைந்தது 30 நோயாளர்கள், கண்புரை அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு பயன்படுத்தப்படும் பிரெட்னிசோலோன் கண் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுஅதனால் பார்வை குறைபாட்டை எதிர் கொண்டு உள்ளனர். அந்த மருந்தில் இருந்த , பர்க்ஹோல்டேரியா செபாசியா எனும் பாக்டீரியாவே இதற்க்கு காரணம். இவர்களில் குறைந்தது எட்டு பேர் முழுமையான பார்வையை இழந்துள்ளனர்.
குஜராத் மானிலம் சுரேந்திரனகரில் உள்ள வாத்வானை தளமாகக் கொண்ட இந்தியானா ஆப்தால்மிக்ஸ் நிறுவனம் இந்த மருந்தை தயாரிக்கிறது.
ஏன் இது முக்கியமானது:
ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரத்தை பரிசோதிக்கும் வசதி இலங்கையில் இல்லை என்பதால், ஏற்றுமதி நாடுகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளால் வழங்கப்படும் உரிய சான்றிதழையே நம்பியுள்ளது என்று இந்த விடயம் அறிந்த தரப்புகள் தெரிவித்துள்ளனர்.